மேலும் அறிய

Renault Kwid: நாட்டின் மலிவான CNG SUV, 32KM மைலேஜ், ரேட்டிங் எப்படி? ரூ.3,700 போதுமே -EMI விவரங்கள்

Renault Kwid CNG SUV: நாட்டின் மலிவான சிஎன்ஜி எஸ்யுவி கார் மாடலான ரெனால்ட் க்விட்டை, எளிய மாதாந்திர தவணை முறையில் வாங்குவதற்கான நிதி திட்ட விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Renault Kwid CNG SUV: நாட்டின் மலிவான சிஎன்ஜி எஸ்யுவி கார் மாடலான ரெனால்ட் க்விட்டை, நெடுஞ்சாலையில் சுமார் 32 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது.

ரெனால்ட் க்விட் சிஎன்ஜி

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹேட்ச்பேக் மற்றும் செடான் கார்களின் பல மாடல்கள் இருந்தாலும், எஸ்யுவிக்கள் மீதான விருப்பம் பொதுமக்களிடையே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேநேரம், அதிகரித்து வரும் எரிபொருட்களின் விலை கார் பிரியர்களிடையே கலகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மலிவு விலையில் தரமான எஸ்யுவி மற்றும் நல்ல எரிபொருள் செயல்திறன் கலந்த கலவையாக ஒரு வாகனத்தை நீங்கள் தேடுகிறீர்களா? உங்களுக்கான ஒரு நல்ல வாய்ப்பாக, எஸ்யுவியின் தாக்கத்தில் நாட்டின் மலிவான சிஎன்ஜி கார் மாடல்களில் ஒன்றாக, ரெனால்ட் நிறுவனம் புதிய க்விட் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.

க்விட் சிஎன்ஜி விலை:

ரெனால்ட் நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் ஹேட்ச்பேக்கான க்விட் எஸ்யுவியின் தீவிரமான டிசைன் அம்சங்களை பெற்றுள்ளது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எரிபொருள் ஆப்ஷன்களில், மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் மொத்தமாக 6 ட்ரிம்களில் இந்த கார் கிடைக்கப்பெறுகிறது. இதன் விலை வரம்பானது 4 லட்சத்து 53 ஆயிரத்தில் தொடங்கி 5 லட்சத்து 61 ஆயிரம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நீள்கிறது. குறிப்பாக க்விட் எவல்யூஷன் சிஎன்ஜி வேரியண்டை தேர்வு செய்தால், சென்னையில் அதன் ஆன் ரோட் விலை 6 லட்சத்து 8 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இதில் ரூ.4.52 லட்சம் எக்ஸ் - ஷோரூம் விலை, பதிவு கட்டணம் ரூ.59 ஆயிரம், காப்பீட்டு கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் 70 ஆயிரம் ரூபாய் ஆகியவை அடங்கும். 

க்விட் சிஎன்ஜி - ரூ.3,700 போதும்..!

ஒருவேளை நாட்டின் மலிவான ஹேட்ச்பேக்கான சுசூகி ஆல்டோ கே10 மாடலை வாங்கும் அளவிற்கு பணம் இருந்தும், எஸ்யுவியின் தாக்கத்தை கொண்ட ஒரு காரை வாங்க விரும்புகிறீர்களா? அந்த தொகையை முன்பணமாக செலுத்தி மைலேஜில் அசத்தும் க்விட்டின் சிஎன்ஜி எடிஷனை தாராளமாக தவணை முறையில் சொந்தமாக்கிக் கொள்ளலாம்.அதன்படி,  ஆல்டோ கே10 மாடலின் எண்ட்ரி லெவல் வேரியண்டின் எக்ச் - ஷோரூம் விலையான ரூ.3.70 லட்சத்தை முன்பணமாக செலுத்தினால் மீதமுள்ள ரூ.2.38 லட்சத்தை வங்கியில் இருந்து கடனாக பெற்று மாத தவணை முறையில் திருப்பி செலுத்தலாம். நல்ல சிபில் ஸ்கோர் இருந்தால் 8 சதவிகித வட்டியிலேயே கூட உங்களுக்கு கடன் கிடைக்கலாம். அதன்படி, 5 ஆண்டுகளுக்கு 8 சதவிகித வட்டி விகிதத்தில் மாதம் 4 ஆயிரத்து 800 ரூபாயை தவணையாக செலுத்தினாலே போதுமானது. அசலுடன் சேர்த்து கூடுதலாக 51 ஆயிரம் ரூபாயை மட்டுமே நீங்கள் வட்டியாக செலுத்த வேண்டி இருக்கும். ஒருவேளை 7 ஆண்டுகளுக்கு அவகாசம் கோரினால், உங்களது மாதாந்திர தவணை வெறும் 3 ஆயிரத்து 700 ரூபாயாக குறையும். அதேநேரம் நீங்கள் செலுத்தும் மொத்த வட்டியானது சுமார் 73 ஆயிரமாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: Tata EV Discounts: ரூ.3.35 லட்சம் தள்ளுபடி..! 170KM டூ 627KM ரேஞ்ச் மின்சார கார்களுக்கு சலுகை - டாடா பஞ்ச் டூ கர்வ் வரை

க்விட் சிஎன்ஜி - 32கிமீ மைலேஜ்

ரெனால்ட் க்விட்டின் சிஎன்ஜி எடிஷன் 1.0 லிட்டர் 3 சிலிண்டர்  நேட்சுரலி ஆஸ்பிரேடட் இன்ஜின் உடன், 5 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. போக்குவரத்து நெரிசல் மிக்க நகர்ப்புறங்களில் 22 முதல் 24 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாகவும், நெடுஞ்சாலை பகுதிகளில் கிலோவிற்கு 30 முதல் 32 கிலோ மீட்டர் தூரம் மைலேஜ் வழங்குவதாகவும் பயனர்கள் தெரிவிக்கின்றனர். இந்த அபரிவிதமான மைலேஜ் மற்றும் எரிபொருள் செயல்திறனுடன் ஒப்பிட்டால், கூடுதலாக நீங்கள் செலுத்தும் வட்டி தொகையானது சேமிப்பாகவே கருதப்படும். ஒரு தரமான எஸ்யுவியில் பயணிக்கும் அனுபவத்தையும் நீங்கள் பெறக்கூடும்.

க்விட் சிஎன்ஜி - அம்சங்கள், வசதிகள்

வழக்கமான ஹேட்ச்பேக்குகளை போல இல்லாமல் 184 மில்லி மீட்டர் க்ரவுண்ட் க்ளியரன்ஸை கொண்டு, மோசமான் சாலைகளில் கூட எளிதில் பயணிக்கும் வகையிலான டிசைனை பெற்றுள்ளது. சொகுசான பயண அனுபவத்திற்காக 8 இன்ச் மீடியாநேவ்  டச்ஸ்க்ரீன் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதில் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ வசதிளுடன் கூடிய ஸ்மார்ட்ஃபோன் மிர்ரரிங் அம்சம் உள்ளது. ட்ரைவிங் டேட்டாவை கண்காணிப்பதற்காக  எல்இடி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது.


Renault Kwid: நாட்டின் மலிவான CNG SUV, 32KM மைலேஜ், ரேட்டிங் எப்படி? ரூ.3,700 போதுமே -EMI விவரங்கள்

வசதியான பயனத்திற்காக 4 பவர் விண்டோக்கள், ரெஸ்பான்சிவ் எலெக்ட்ரிக் பவர் ஸ்டியரிங், ரிமோட் கீலெஸ் எண்ட்ரி,  சென்ட்ரல் லாக்கிங், ஸ்டியரிங் வீல் மவுண்டட் கன்ட்ரோல்கள் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்காக 2லிருந்து 6 வரையிலான ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ப்ரேக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிப்யூஷனுடன் கூடிய ஆண்டி லாக் ப்ரேக்கிங் சிஸ்டம், ட்ராக்‌ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகிய இரண்டுடனும் ஒருங்கிணைக்கப்பட எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோக்ராம் உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதுபோக ரியர்வியூ பார்கிங் கேமரா உடன் கூடிய பார்கிங் சென்சார்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்றவையும் சேர்க்கப்பட்டுள்ளன. 279 லிட்டர் பூட் ஸ்பேஸ் வசதியும் கவனத்தை ஈர்க்கிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Sierra Vs Seltos Diesel AT: டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
Renault Kwid on EMI: ரெனால்ட் க்விட்டோட புத்தம் புது பதிப்ப லோன்ல வாங்க பிளான் இருக்கா.? அப்போ முன்பணம், EMI விவரம் இதோ
ரெனால்ட் க்விட்டோட புத்தம் புது பதிப்ப லோன்ல வாங்க பிளான் இருக்கா.? அப்போ முன்பணம், EMI விவரம் இதோ
ரெனால்ட் டஸ்டர், ஹூண்டாய் க்ரெட்டா இனி ஹைப்ரிட் அவதாரம்: பெட்ரோல், டீசலுக்கு சவால்!
ரெனால்ட் டஸ்டர், ஹூண்டாய் க்ரெட்டா இனி ஹைப்ரிட் அவதாரம்: பெட்ரோல், டீசலுக்கு சவால்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget