மேலும் அறிய

PURE EV ETrance Neo: 150 கிலோமீட்டர் மைலேஜ்.. PURE EV ETrance Neo விலை எப்படி? தரம் எப்படி?

ப்யூர் இவி நிறுவனத்தின் PURE EV ETrance Neo மின்சார ஸ்கூட்டரின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே மின்சார ஸ்கூட்டர்களின் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. ஓலா, ஏதர் போன்ற நிறுவனங்கள் தங்களது இ ஸ்கூட்டர்களின் விற்பனையை அதிகரித்து வருகிறது. அதேசமயம், இந்த நிறுவனங்களுக்கு போட்டியாக பல நிறுவனங்களும் இ ஸ்கூட்டர்களை தயாரித்து வருகின்றனர். 

PURE EV ETrance Neo:

அந்த வரிசையில் இந்தியாவில் உள்ள பிரபலமான மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனம் PURE EV நிறுவனம். இந்த நிறுவனத்தின் PURE EV ETrance Neo இ ஸ்கூட்டரின் விலை, மைலேஜ், தரம் குறித்து கீழே காணலாம்.

இந்த PURE EV ETrance Neo இ ஸ்கூட்டரில் மொத்தம் 3 வேரியண்ட்கள் உள்ளது. இதன் தொடக்க விலை ரூபாய் 81 ஆயிரத்து 21 ஆகும். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 1 லட்சத்து 7 ஆயிரத்து 851 ஆகும்.

1. ETrance Neo SX - ரூபாய் 81 ஆயிரத்து 021

2. ETrance Neo Standard - ரூபாய் 1 லட்சத்து 1 ஆயிரத்து 322

3. ETrance Neo Plus - ரூபாய் 1 லட்சத்து 7 ஆயிரத்து 851

ETrance Neo SX:

இந்த ETrance Neo SX இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 81 ஆயிரத்து 21 ஆகும். இதில் 1.8 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 101 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. அதிகபட்சமாக 47 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். சாம்பல் நிறத்தில் இந்த வாகனம் இருக்கிறது. ஹில் அசிஸ்ட், ரிவர்ஸ் மோட் வசதி உள்ளது. 100 கிலோ வரை எடை தாங்கும் திறன் கொண்டது. 

ETrance Neo Standard:

இந்த ETrance Neo Standard இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 1 ஆயிரத்து 322. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர் வரை செல்லலாம். மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் இந்த இ ஸ்கூட்டரில் செல்லலாம். 2.5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எகோ, ட்ரைவ் மற்றும் ஸ்போர்ட் மோடில் உள்ளது. பேட்டரி ஸ்டேட்டஸ், லைவ் சார்ஜிங் வசதி காட்டும் திறன் கொண்டது. 150 கிலோ வரை எடை தாங்கும் திறன் கொண்டது. மஞ்சள், சாம்பல், கருப்பு, நீலம், சிவப்பு ஆகிய வண்ணங்களை கொண்டது. 30 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது.

ETrance Neo Plus:

இந்த ETrance Neo Plus இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 7 ஆயிரத்து 851 ஆகும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் வரை செல்லும் ஆற்றல் கொண்டது. அதிகபட்சமாக 60 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 30 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. எகோ, ட்ரைவ், ஸ்போர்ட் மோட் கொண்டவை. 3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பேட்டரி ஸ்டேட்டஸ், லைவ் சார்ஜிங் வசதி காட்டும் திறன் கொண்டது. சிவப்பு நிறத்தில் இந்த  இ ஸ்கூட்டர் உள்ளது.

இந்த இ ஸ்கூட்டர்களை சார்ஜ் செய்வதற்கு 4 மணி நேரம் வரை ஆகிறது. 86 கிலோ மட்டுமே எடை கொண்டது. இதனால், பெண்களும், முதியவர்களும் எளிதாக கையாளலாம். 4 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே வசதி கொண்டது. எல்இடி முகப்பு விளக்குகள் கொண்டது.  இந்த ஸ்கூட்டர் சீனாவின் தயாரிப்பு ஆகும். ஓலா, ஏதருக்கு போட்டியாக களமிறங்கியுள்ள இந்த இ ஸ்கூட்டருக்கு 3.5 ஸ்டார் பயனாளர்கள் வழங்கியுள்ளனர்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Vinfast VF5: VF5 மாடலை அப்க்ரேட் செய்த வின்ஃபாஸ்ட் - புது அம்சங்கள், வசதிகள் என்ன? ரேஞ்ச் கூடுமா? விலை எப்படி?
VF5 மாடலை அப்க்ரேட் செய்த வின்ஃபாஸ்ட் - புது அம்சங்கள், வசதிகள் என்ன? ரேஞ்ச் கூடுமா? விலை எப்படி?
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் வாங்கலாமா? வேண்டாமா? காரின் பிளஸ் & மைனஸ் என்ன? தெரிஞ்சிகோங்க
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் வாங்கலாமா? வேண்டாமா? காரின் பிளஸ் & மைனஸ் என்ன? தெரிஞ்சிகோங்க
Hyundai Creta: லேப்டாப் சைஸில் ஸ்க்ரீன்..! புதிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் - கொரியாவின் புது மிட்-சைஸ் SUV
லேப்டாப் சைஸில் ஸ்க்ரீன்..! புதிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் - கொரியாவின் புது மிட்-சைஸ் SUV
EV Cars: நாட்டிலேயே வேகமாக சார்ஜ் ஏறும் மின்சார கார்கள்.. டாப் லிஸ்ட் - காத்திருக்க அவசியமில்லை - ரேஞ்ச், விலை
நாட்டிலேயே வேகமாக சார்ஜ் ஏறும் மின்சார கார்கள்.. டாப் லிஸ்ட் - காத்திருக்க அவசியமில்லை - ரேஞ்ச், விலை

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓராண்டுக்கு CHAT GPT PLUS சேவை இலவசம்! - யார் யாருக்கு சலுகை? ஓபன் ஏஐ வெளியிட்ட அசத்தல் ஆபர் என்ன?
ஓராண்டுக்கு CHAT GPT PLUS சேவை இலவசம்! - யார் யாருக்கு சலுகை? ஓபன் ஏஐ வெளியிட்ட அசத்தல் ஆபர் என்ன?
Chennai Power Cut: எந்த வேலை இருந்தாலும் 10 மணிக்குள்ளே முடிச்சுடுங்க.. சென்னையில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை?
Chennai Power Cut: எந்த வேலை இருந்தாலும் 10 மணிக்குள்ளே முடிச்சுடுங்க.. சென்னையில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை?
Nellai Mubarak: எஸ்டிபிஐ கட்சியிலிருந்து நெல்லை முபாரக் விலகல்.. என்ன காரணம்? அடுத்து இணையப்போகும் கட்சி எது?
Nellai Mubarak: எஸ்டிபிஐ கட்சியிலிருந்து நெல்லை முபாரக் விலகல்.. என்ன காரணம்? அடுத்து இணையப்போகும் கட்சி எது?
நவ.18 முதல் மீண்டும் திறக்கப்படும் வண்டலூர் பூங்கா! - பறவைகள் பகுதியில் பார்வையாளர்களுக்கு அனுமதி!
நவ.18 முதல் மீண்டும் திறக்கப்படும் வண்டலூர் பூங்கா! - பறவைகள் பகுதியில் பார்வையாளர்களுக்கு அனுமதி!
Annan Seer Thittam: பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு! அண்ணன் சீர் திட்டம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இதோ முழு விவரம்
Annan Seer Thittam: பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு! அண்ணன் சீர் திட்டம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இதோ முழு விவரம்
TVK: இனி யாராவது ஓவராக ஆட்டம் போட்டால் பதவி காலி.. அதுமட்டுமல்ல.. தவெக பொதுச்செயலாளர் எச்சரிக்கை
TVK: இனி யாராவது ஓவராக ஆட்டம் போட்டால் பதவி காலி.. அதுமட்டுமல்ல.. தவெக பொதுச்செயலாளர் எச்சரிக்கை
MS Dhoni Retirement: ரசிகர்களுக்கு இடியை இறக்கிய சிஎஸ்கே!.....ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்றார் தோனி!
MS Dhoni Retirement: ரசிகர்களுக்கு இடியை இறக்கிய சிஎஸ்கே!.....ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்றார் தோனி!
ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறும் தோனி - திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கம்!
ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறும் தோனி - திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கம்!
Embed widget