மேலும் அறிய

Volvo EX60: 400, 500-லாம் போதாது..! ஒரே சார்ஜ், 810KM ரேஞ்ச் - டயங்கரமான அம்சங்கள், வசதிகள் - வால்வோவின் SUV

Volvo EX60 EV SUV: வால்வோ நிறுவனத்தின் சொகுசு மின்சார மிட்-சைஸ் எஸ்யுவி ஆன EX60, ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Volvo EX60 EV SUV: வால்வோ நிறுவனத்தின் மின்சார மிட்-சைஸ் எஸ்யுவி ஆன EX60, ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 810 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என கூறப்பட்டுள்ளது.

வால்வோ EX60 மின்சார எஸ்யுவி

வால்வோ நிறுவனத்தின் EX60 கார் மாடல் ஐரோப்பிய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ப்ராண்ட் சார்பில் மின்சார கார்களுக்கு என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட SPA3 ப்ளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட முதல் கார் இதுவாகும். EX60  மாடல் மூலம் சொகுசு மின்சார மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் வால்வோ நிறுவனம் தனது பயணத்தை தொடங்கியுள்ளது. இன்ஜின் அடிப்படையிலான XC60 கார் மாடலின் மின்சார எடிஷனாகவே EX60 கார் சந்தைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஐரோப்பிய சந்தையை தொடர்ந்து விரைவில் அமெரிக்க சந்தைக்கும் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாம்.

வால்வோ EX60 - வெளிப்புற டிசைன்

EX60 கார் மாடலின் முன்பகுதியானது தோரின் சுத்தியலை போன்ற பகல் நேரங்களில் ஒளிரும்  எல்இடி விளக்குகளுடன் கூடிய ஸ்ப்லிட் முகப்பு விளக்குகளை பம்பரின் இரண்டு பக்கங்களிலும் கொண்டுள்ளது. க்ரில் ஆனது க்ளோஸ்ட் ஆஃப் ஃபினிஷிங்கை பெற்றுள்ளது. பக்கவாட்டில் ஒட்டுமொத்தமாக மிருதுவான மேற்பரப்பை கொண்டுள்ளது. வீல் ஆர்க் மற்றும் கதவுகளில் லேசான கோடுகள் இடம்பெற்றுள்ளன. கதவுகளின் அடிப்பகுதியில் கருப்பு நிற க்ளாடிங் உள்ளது. பாரம்பரியமான டோர் ஹேண்டில்களுக்கு பதிலாக EX60 மாடலானது ஜன்னல் லைனில் கட்டமைக்கப்பட்ட ஒளிரூட்டப்பட்ட விங் க்ரிப்பை பெற்றுள்ளது. சக்கரங்களின் அளவீடானது 20 இன்ச் முதல் 22 இன்ச் வரை நீள்கிறது. கூடுதல் இழுவை திறனுக்காக பின்புற சக்கரங்களானது சற்றே கூடுதலான அகலத்தை கொண்டுள்ளது. 


Volvo EX60: 400, 500-லாம் போதாது..! ஒரே சார்ஜ், 810KM ரேஞ்ச் - டயங்கரமான அம்சங்கள், வசதிகள் - வால்வோவின் SUV

பின்புறத்தில் மெல்லிய எல்இடி டெயில் லைட்கள், டெயில்கேட்டின் மேற்புறத்தில் கருப்பு நிற ஸ்ட்ரிப் மற்றும்  வலுவான ப்ளாக் க்ளாடிங் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. ப்ரைட் மற்றும் டார்க் என்ற இரண்டு வெளிப்புற தீம்களில் EX60 சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. ப்ரைட் தீம் ஆனது  டோர் சில்கள் மற்றும் பம்பரில் சில்வர் கூறுகளை பயன்படுத்த, டார்க் தீமில் ப்ளாக் ஃபினிஷ் வழங்கப்படுகிறது.

வால்வோ EX60 - க்ராஸ் கண்ட்ரி வேரியண்ட்

EX60 கார் மாடலானது க்ராச் கண்ட்ரி வேரியண்டிலும் விற்பனை செய்யப்படுகிறது. இது 20 மில்லி மீட்டர் கூடுதல் க்ரவுண்ட் க்ளியரன்ஸை கொண்டுள்ளது. மேலும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்கிட் ப்ளேட்கள், மேட் ப்ளாக் க்ளாடிங், தனித்துவமான ஃப்ரோஸ்ட் பச்சை நிறம், பிரத்யேகமான உட்புற தீம் மற்றும் மெட்டீரியல்கள், D-பில்லர் மற்றும் பம்பர்களில் க்ராச் கண்ட்ரி ப்ராண்டிங் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும் ஆஃப் ரோட் மோடில் அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.


Volvo EX60: 400, 500-லாம் போதாது..! ஒரே சார்ஜ், 810KM ரேஞ்ச் - டயங்கரமான அம்சங்கள், வசதிகள் - வால்வோவின் SUV

வால்வோ EX60 - உட்புற அம்சங்கள், வசதிகள்

லேயர்ட் டேஷ்போர்ட் மற்றும் டூயல் டோன் இண்டீரியரில் EX60 கார் கிடைக்கிறது. ஃபிஷிகல் பட்டன்கள் மற்றும் வால்யூமை கண்ட்ரோல் செய்வதற்கான டாகில் ஸ்விட்ச் ஆகியவை அடங்கிய 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல் இடம்பெற்றுள்ளது. ஸ்டீயரிங் வரிசையிலேயே பொருத்தப்பட்ட டிரைவ் செலக்ட் ஸ்டாக், பெரிய சென்ட்ரல் க்ளோவ் பாக்ஸ் மற்றும் முன் சென்டர் கன்சோலில் ஏராளமான சேமிப்பு விருப்பங்கள் கிடைக்கின்றன. 11.4 இன்ச்  டிஜிட்டல் ட்ரைவர் டிஸ்பிளே மற்றும் ஆண்ட்ராய்ட் அடிப்படையிலான 15 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. மேலும் எலெக்ட்ரோக்ரோமிக்  க்ளாஸ் ரூஃப், ஹீடட் மற்றும் வெண்டிலேடட்  முன்புற இருக்கைகள், ஆப்பிள் கார்பிளே, மெமரியுடன் கூடிய பவர்ட் ட்ரைவர் சீட், ADAS, 21 ஸ்பீக்கர் போஸ் ஆடியோ சிஸ்டம், கனெக்டட் கார் தொழில்நுட்பம், கூகுள் ஜெமினி AI அசிஸ்டண்ட், ரிக்ளைனிங் ரியர் சீட்ஸ் மற்றும் ஓவர் தி ஏர் அப்டேட்கள் ஆகிய அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.  இருக்கைகளை வெவ்வேறு வண்ணங்கள் மற்றும் அப்ஹோல்ஸ்டரி பூச்சுகளில் பயனர்கள் தேர்வு செய்யலாம்.


Volvo EX60: 400, 500-லாம் போதாது..! ஒரே சார்ஜ், 810KM ரேஞ்ச் - டயங்கரமான அம்சங்கள், வசதிகள் - வால்வோவின் SUV

வால்வோ EX60 - பவர்ட்ரெயின் விவரங்கள்

வால்வோ EX60 மூன்று ட்ரிம்களில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. எண்ட்ரி லெவலை சேர்ந்த P6 எலெக்ட்ரிக் வேரியண்ட் 83kWh பேட்டரி பேக்கைக் கொண்டுள்ளது, பின்புறத்தில் பொருத்தப்பட்ட மோட்டார் மூலம் 374hp மற்றும் 480Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. மிட்-ஸ்பெக் P10 ஆல் வீல் ட்ரைவ் வேரியண்டில் 95kWh பேட்டரி மற்றும் முன்பக்கத்தில் பொருத்தப்பட்ட மோட்டார் உள்ளது, இது மொத்தம் 510hp மற்றும் 710Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. டாப் வேரியண்டான P12 ஆல் வீல் ட்ரைவ் அம்சத்துடன் 117kWh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது இரட்டை மோட்டார் அமைப்புடன் 680hp மற்றும் 790Nm உற்பத்தி செய்கிறது. P6, P10 AWD மற்றும் P12 AWD ஆகியவை முறையே 620, 660 மற்றும் 810 ரேஞ்ச் அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. EX60 400kW DC ஃபாஸ்ட் சார்ஜருடன் 20 நிமிடங்களுக்குள் 10 முதல் 80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்கிறது மற்றும் 22kW வரை AC சார்ஜிங் வேகத்தை ஆதரிக்கிறது.

வால்வோ EX60 - விலை, இந்தியா வெளியீடு

வால்வோ EX60, BMW iX3 மற்றும் Mercedes-Benz GLC EV போன்றவற்றுக்கு போட்டியாக சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை 70 முதல் 75 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது. EX60 மாடலை இந்தியாவிற்கு கொண்டு வருவது குறித்து தற்போது வரை வால்வோ எந்தவித உறுதியான தகவலையும் வெளிப்படுத்தவில்லை. அதேநேரம்,  EX90 மற்றும் ES90 EV-களை உள்நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ரூ.80,000 பட்ஜெட்... 75 கி.மீ மைலேஜ்! பெட்ரோல் செலவை பாதியாக குறைக்கும் 'டாப் 3' பைக்குகள்!
ரூ.80,000 பட்ஜெட்... 75 கி.மீ மைலேஜ்! பெட்ரோல் செலவை பாதியாக குறைக்கும் 'டாப் 3' பைக்குகள்!
Ather Konarc: ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
New Maruti Baleno Facelift: சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget