மேலும் அறிய

Mahindra Scorpio N: பழச விடுங்க, புதுசா மிரட்டும் ஸ்கார்பியோ என்..! புது லுக், கூடுதல் அம்சங்கள், டர்போ இன்ஜின்கள்

Mahindra Scorpio N: மஹிந்த்ராவின் ஸ்கார்பியோ என் கார் மாடலில் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன் மூலம், புதியதாக வழங்கப்பட உள்ள அம்சங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Mahindra Scorpio N: மஹிந்த்ராவின் ஸ்கார்பியோ என் கார் மாடலில் இன்ஜின் அடிப்படையில் பெரிய மாற்றங்கள் இருக்காது என கூறப்படுகிறது.

மஹிந்த்ரா ஸ்கார்பியோ என் ஃபேஸ்லிஃப்ட்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மஹிந்த்ரா ஸ்கார்பியோ என் கார் மாடலானது, மூன்றாவது தலைமுறை எடிஷனாக கடந்த 2022ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. மிகப்பெரிய அளவிலான டிசைன் மாற்றங்கள், மேம்படுத்தப்பட்ட அம்சங்கள், தொழில்நுட்ப ரீதியிலான அப்க்ரேட்கள் மற்றும் புதிய இன்ஜின் ஆப்ஷன்கள் ஆகியவை கவனத்தை ஈர்த்தன. கரடுமுரடான ஸ்டைலிங்  மற்றும் வலுவான சாலை தோற்றம் காரணமாக இந்த எஸ்யுவி வாடிக்கையாளர்களால் மிகவும் விரும்பப்பட்டது.  ஆஃப் ரோட் செயல்திறன் மற்றும் வலுவான இன்ஜின் ஆப்ஷன்கள் கூடுதல் பலமாக பார்க்கப்பட்டன. இருப்பினும் சந்தைப்படுத்தலுக்கு பிறகு ஒருமுறை கூட இந்த காரானது குறிப்பிடத்தக்க அப்க்ரேட்கள் எதையும் பெறவில்லை. டாப் ட்ரிம்களில் மட்டும் லெவல் 2 ADAS மற்றும் சில கூடுதல் அம்சங்கள் இடையில் சேர்க்கப்பட்டன. உள்நாட்டு சந்தையில் வாடிக்கையாளர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள ஸ்கார்பியோ என் கார் மாடலுக்கு, முதல்முறையாக ஃபேஸ்லிஃப்ட் அப்க்ரேட்களை வழங்க மஹிந்த்ரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஸ்கார்பியோ என் ஃபேஸ்லிஃப்ட் - ரோட் டெஸ்ட்

மேம்படுத்தப்பட்ட ஸ்கார்பியோ என் கார் மாடலுக்கான வெளியீட்டு தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. நடப்பாண்டின் இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக புதிய எடிஷனை தீவிரமாக சாலை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளது. பல முறை புகைப்படங்களில் சிக்கிய அந்த மாதிரி கார் மூலம் பல சுவாரஸ்யமான தகவல்களும் கிடைத்துள்ளன. அந்த வகையில் புதிய ஸ்கார்பியோ என் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனில் என்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

Mahindra Scorpio N: பழச விடுங்க, புதுசா மிரட்டும் ஸ்கார்பியோ என்..! புது லுக், கூடுதல் அம்சங்கள், டர்போ இன்ஜின்கள்

ஸ்கார்பியோ என் ஃபேஸ்லிஃப்ட் - புது தோற்றம்

சாலை சோதனையின் போது கிடைத்த புகைப்படங்களின்படி, புதிய எடிஷனாது தனது கம்பீரமான தோற்றம் மற்றும் வலுவான கட்டமைப்பை தக்கவைத்து கொண்டுள்ளதை உணர முடிகிறது. முகப்பு பகுதியானது புதிய க்ரில், எல்இடி பகல் நேரங்களில் ஒளிரும் விளக்குகளுடன் திருத்தப்பட்ட முகப்பு விளக்கு மற்றும் சற்றே மாற்றப்பட்டுள்ள பம்பர் மூலம் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக புதியதாக வடிவமைக்கப்பட்ட மற்றும் பெரியா அலாய் வீல்கள் எஸ்யுவியில் இணைக்கப்படும் என கூறப்படுகிறது. அளவீடுகள் அடிப்படையில் மாற்றங்களுக்கு வாய்ப்பில்லையாம். எனவே, 4,662 மிமீ நீளம், 1,917மிமீ அகலம், 1,857 மிமீ உயரம், 2,750 மிமீ வீல்பேஸ் மற்றும் 187மிமீ க்ரவுண்ட் க்ளியரன்ஸை இந்த கார் பெற உள்ளது.

ஸ்கார்பியோ என் ஃபேஸ்லிஃப்ட் - புதிய ப்ரீமியம் அம்சங்கள்

புதிய ஸ்கார்பியோ என் கார் எடிஷனின் உட்புறம் எப்படி இருக்கும் என்பதற்கான தகவல்கள் இன்னும் ரகசியமாகவே தொடர்கிறது. அதேநேரம், இதில் கண்டிப்பாக மிகப்பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டால்பி அட்மாஸ் உடன் கூடிய ஹர்மன் கார்டோன் ஆடியோ சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், முழுமையான டிஜிட்டல் TFT இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், மெமரி ஃபங்கசனுடன் கூடிய ஓட்டுனர் இருக்கை மற்றும் பவர்ட் முன்புற இருக்கைகள் ஆகியவை இடம்பெறக்கூடும். மற்றபடி மீதமுள்ள அம்சங்கள் தற்போதைய எடிஷனில் இருந்து அப்படியே புது எடிஷனுக்கு அப்படியே கடத்தப்படலாம்.

Mahindra Scorpio N: பழச விடுங்க, புதுசா மிரட்டும் ஸ்கார்பியோ என்..! புது லுக், கூடுதல் அம்சங்கள், டர்போ இன்ஜின்கள்

ஸ்கார்பியோ என் ஃபேஸ்லிஃப்ட் - இன்ஜின் விவரங்கள்

மஹிந்த்ரா ஸ்கார்பியோ என் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனானது, இன்ஜின் அடிப்படையில் பெரிய மாற்றத்தை எதிர்கொள்ளாது என கூறப்படுகிறது. அதன்படி ஏற்கனவே உள்ள, 2.2 லிட்டர் டர்போ டீசல்  மற்றும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்களை பயனர்கள் தேர்வு செய்யலாம். 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் 6 ஸ்பீட் டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன்களும் மாற்றமின்றி தொடர உள்ளது.

ஸ்கார்பியோ என் ஃபேஸ்லிஃப்ட் - விலை, போட்டியாளர்கள்

மஹிந்த்ரா ஸ்கார்பியோ என் கார் மாடலின் விலையானது தற்போது 13.49 லட்சத்தில் தொடங்கி, 24.34 லட்சம் ரூபாய் வரை நீள்கிறது. புதியதாக வழங்கப்படும் அப்க்ரேட்களை கருத்தில் கொண்டால், சுமார் 50 ஆயிரம் ரூபாய் வரையில் விலை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர் சந்தையில் இந்த காரானது டாடா சஃபாரி, மஹிந்த்ரா தார் ராக்ஸ், ஃபோர்ஸ் கூர்கா உள்ளிட்ட கார் மாடல்களுடன் போட்டியிடுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

நாட்டின் டாப் 5 செல்லிங் எஸ்யுவிகள்; தட்டித் தூக்கிய டாடா பஞ்ச்- இதோ முழு லிஸ்ட்!
நாட்டின் டாப் 5 செல்லிங் எஸ்யுவிகள்; தட்டித் தூக்கிய டாடா பஞ்ச்- இதோ முழு லிஸ்ட்!
ஒரே சார்ஜில் 180 கிமீ ரேஞ்ச்; வெறும் ரூ.5 ஆயிரம் போதும்- Keeway Hypevolt R ஸ்கூட்டர் விலை, அம்சங்கள்!
ஒரே சார்ஜில் 180 கிமீ ரேஞ்ச்; வெறும் ரூ.5 ஆயிரம் போதும்- Keeway Hypevolt R ஸ்கூட்டர் விலை, அம்சங்கள்!
Grand Vitara Hybrid: மாருதியின் 21KM மைலேஜ் தரும் ஹைப்ரிட் கார்..! ரூ.3 லட்சம் தள்ளுபடி, ரூ.6,800 போதுமே, EMI விவரங்கள்
மாருதியின் 21KM மைலேஜ் தரும் ஹைப்ரிட் கார்..! ரூ.3 லட்சம் தள்ளுபடி, ரூ.6,800 போதுமே, EMI விவரங்கள்
3 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. Baleno முதல் Invicto வரை! எந்தெந்த காருக்கு எவ்வளவு ஆஃபர்?
3 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. Baleno முதல் Invicto வரை! எந்தெந்த காருக்கு எவ்வளவு ஆஃபர்?

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs Udhayanidhi: “திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
“திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
CM Joseph Vijay: கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. உறுதி செய்த முக்கிய புள்ளிகள்.. என்ன பிளான்?
CM Joseph Vijay: கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. உறுதி செய்த முக்கிய புள்ளிகள்.. என்ன பிளான்?
K.P.Munusamy: தவெகவுக்கு சென்ற ஓடுகாலிகள்.. விஜயபாஸ்கர், ஆதவ் அர்ஜூனாவை விளாசிய கே.பி.முனுசாமி!
K.P.Munusamy: தவெகவுக்கு சென்ற ஓடுகாலிகள்.. விஜயபாஸ்கர், ஆதவ் அர்ஜூனாவை விளாசிய கே.பி.முனுசாமி!
"எங்களைத் தவிர்த்துவிட்டு அரசியல் இல்லை" - செஞ்சி கல்லூரி விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
நாட்டின் டாப் 5 செல்லிங் எஸ்யுவிகள்; தட்டித் தூக்கிய டாடா பஞ்ச்- இதோ முழு லிஸ்ட்!
நாட்டின் டாப் 5 செல்லிங் எஸ்யுவிகள்; தட்டித் தூக்கிய டாடா பஞ்ச்- இதோ முழு லிஸ்ட்!
நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
Mekedatu Dam: 70களில் ஏமாந்ததைப்போல மீண்டும் ஏமாந்து விடக் கூடாது; மேகதாது விவகாரத்தில் அன்புமணி எச்சரிக்கை!
Mekedatu Dam: 70களில் ஏமாந்ததைப்போல மீண்டும் ஏமாந்து விடக் கூடாது; மேகதாது விவகாரத்தில் அன்புமணி எச்சரிக்கை!
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்
Embed widget