மேலும் அறிய

MG Comet: இந்தியா வருகிறது எம்ஜி நிறுவனத்தின் புதிய குட்டி மின்சார கார்.. விலை இப்படித்தான்..

எம்ஜி நிறுவனத்தின் புதிய மின்சார காரான MG Comet இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்ஜி  நிறுவனத்தின் புதிய மின்சார காரான MG Comet இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 19ம் தேதி இந்த கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

எம்.ஜி. நிறுவனம்:

அமெரிக்காவிற்கு எப்படி ஒரு ஃபோர்ட் நிறுவனமோ, அப்படி தான் இங்கிலாந்திற்கு எம்.ஜி. நிறுவனமும். மோர்ரிசன் கராஜ் எனப்படும் இந்த நிறுவனம் கடந்த 2017ம் ஆண்டு தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டாலும், உள்நாட்டு சந்தையில் தற்போது அதற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.  பல்வேறு வசதிகளை கொண்ட மற்றும் அடுத்தடுத்து மேம்படுத்தப்பட்ட பல்வேறு சொகுசு மற்றும் மின்சார கார் மாடல்களையும் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது மேலும் ஒரு புதிய மின்சார காராக, MG Comet இணைந்துள்ளது.

MG Comet கார் அறிமுகம்:

புதிய அறிவிப்பின்படி, எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய கொமெட் மின்சார கார் மாடலை வரும் 19 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. புதிய கொமெட் EV மாடல் வுலிங் ஏர் EV கார் மாடலை தழுவி வடிவமைக்கப்பட்டு உள்ளது.

5 வண்ணங்களில் புதிய கார்:

கடந்த மாதம் எம்ஜி நிறுவனம் இந்தியாவுக்கான கொமெட் EV மாடல் விவரங்களை அறிவித்து இருந்தது. அதன்படி புதிய கொமெட் மின்சார கார் மாடல் வெள்ளை, நீலம், பச்சை, மஞ்சள் மற்றும் பின்க் ஆகிய ஐந்து விதமான வ்ண்னங்களில் விற்பனைக்கு வர உள்ளது.

பேட்டரி விவரம்:

சர்வதேச சந்தையில் இந்த மாடல் 17.3 கிலோவாட் ஹவர் மற்றும் 26.7 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் முறையே 200 கிலோமீட்டர்கள் மற்றும் 300 கிலோமீட்டர்கள் தூரம் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என கூறப்படுகிறது. 

காரின் சிறப்பம்சங்கள்:

க்ரோம் இன்சர்ட்கள், ஸ்டீல் வீல்கள், வீல் கவர்கள், பின்புற பம்பரில் நம்பர் பிளேட், ஹை மவுண்ட் செய்யப்பட்ட ஸ்டாப் லேம்ப் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. வெளிப்புற டிசைனை பொருத்தவரை கொமெட் மின்சார காரில் செங்குத்தான எல்.ஈ.டி. முகப்பு விளக்குகள், எல்.ஈ.டி பின்புற விளக்குகள், டிஆர்எல்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட இண்டிகேட்டர்கள், டூயல் டோன் முன்புற பம்பர் மற்றும் சார்ஜிங் போர்டின் மேல் எல்.ஈ.டி லைட் பார் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

விலை விவரம்:

இந்திய சந்தையில் புதிய எம்ஜி கொமெட் EV மாடலின் விலை ரூ. 10 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 15 லட்சம்,  வரையில் நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.  அதோடு, உள்நாட்டு சந்தையில் புதிய எம்ஜி கொமெட் EV மாடல் டாடா டியாகோ EV மற்றும் சிட்ரோயன் eC3 ஆகிய மின்சார கார்களுக்கு போட்டியாக அமைய வாய்ப்புள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Tata EV Discount: கொளுத்துங்க பட்டாச..! தீபாவளிக்காக ரூ.3.35 லட்சம் வரை தள்ளுபடி - டாடாவின் எந்தெந்த கார்களுக்கு?
கொளுத்துங்க பட்டாச..! தீபாவளிக்காக ரூ.3.35 லட்சம் வரை தள்ளுபடி - டாடாவின் எந்தெந்த கார்களுக்கு?
MG Hector Storm: பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
Jaguar Type 01 EV Car: மின்சார சொகுசு ரதம்.! 1015 HP சக்தியுடன் புயலாக வரும் ஜாக்குவாரின் புதிய EV கார்; முழு விவரம்
மின்சார சொகுசு ரதம்.! 1015 HP சக்தியுடன் புயலாக வரும் ஜாக்குவாரின் புதிய EV கார்; முழு விவரம்

வீடியோ

GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்
Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
Seeman: கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
Embed widget