மேலும் அறிய

eVitara vs Windsor: இவிதாரா, விண்ட்சர் கார்களை மலிவாக்கும் சூப்பரான பேட்டரி ஆப்ஷன்; வாடகை எவ்வளவு.? எது குறைவு.?

eVitara vs Windsor Battery Rental Price: இவி கார்களில், மாருதி சுசூகி இவிதாரா மற்றும் எம்ஜி விண்ட்சர் கார்களில் மட்டும் தான் பேட்டரி வாடகைக்கு வழங்கப்படுகிறது. இதில் எது மலிவானது என்பதை பார்க்கலாம்.

இந்திய கார் சந்தையில், இவி கார்களில் பிரபலமான கார்களாக இருப்பது, மாருதி சுசூகியின் இவிதாரா மற்றும் எம்ஜி விண்ட்சர் ஆகிய கார்கள். இந்த கார்களில் சிறப்பு என்னவென்றால், பேட்டரியை நீங்கள் வாடகைக்கு எடுக்க முடியும். அதாவது, சேவை அடிப்படையில் பேட்டரியை பெறும் BAAS (Battery as a Service) எனும் திட்டம். இதனால், காரின் விலை மலிவாகிறது. ஆனால், பேட்டரிக்கு தனியாக வாடகை செலுத்த வேண்டும். இந்த இரண்டு கார்களின்  விலை மற்றும் பேட்டரி வாடகைகளில் எது மலிவாக உள்ளது என்பதை இப்போது பார்க்கலாம்.

இவிதாரா மற்றும் விண்ட்சரின் விலை என்ன.?

மாருதி சுசுகி இறுதியாக இந்தியாவில் அதன் முதல் மின்சார காரான இவிதாராவின் தொடக்க விலையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை BAAS (Battery as a Service) திட்டத்துடன் 10.99 லட்சம் ரூபாயில் தொடங்குகிறது. இவிதாரா தொடக்க டெல்டா வேரியண்டுடன் மூன்று வகைகளில் வருகிறது. அதே நேரத்தில் ஒரு நடுத்தர ஜீட்டா வேரியண்ட் உள்ளது. மூன்றாவதாக டாப் என்ட் ஆல்பா வேரியண்ட் உள்ளது. இதில், டெல்டா வேரியன்ட் தவிர பிற வேரியன்ட்டுகளின் விலை இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த காருக்கான முன்பதிவிற்கு 21,000 ரூபாய் செலுத்த வேண்டும்.

மறுபுறம், எம்ஜி விண்ட்சர் கார் 9.99 லட்சம் ரூபாயில் தொடங்குகிறது. இந்த காரில், 5 வேரியன்ட்டுகள் உள்ள நிலையில், டாப் என்ட் வேரியன்ட்டான விண்ட்சர் இவி எஸ்ஸன்ஸ் ப்ரோவின் விலை 18.50 லட்சம் ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலைகள்.

பேட்டரிக்கான வாடகை எவ்வளவு.?

பேட்டரியை சேவையாகக் கொண்டு மாருதி சுசூகி இவிதாராவின் தொடக்க விலை 10.99 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், பேட்டரி வாடகையாக கிலோ மீட்டருக்கு 3.99 ரூபாய் கூடுதல் விலையும் வசூலிக்கப்படுகிறது. இது 49kwh பேட்டரி பேக் கொண்ட டெல்டா டிரிமிற்கானது. 61kwh பேட்டரி பேக்கும் இதில் உள்ள நிலையில், மற்ற வேரியன்ட்டுகளின் விலை விவரங்கள் வெளியாகும்போது, அதில் உள்ள பேட்டரி பேக்கை பொறுத்து விலை நிர்ணயிக்கப்படும் என்று தெரிகிறது.

அதே வேளையில், பேட்டரியை சேவையாகக் கொண்டு எம்ஜி விண்ட்சர் இவியின் தொடக்க விலை 9.99 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த காருக்கு பேட்டரி வாடகையாக கிலோ மீட்டருக்கு 3.50 ரூபாய் கூடுதல் விலை வசூலிக்கப்படுகிறது. விண்ட்சரில் 38kwh மற்றும் 52.9kwh என இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் உள்ளன. மேலும், மாதத்திற்கு குறைந்தபட்சம் 1,500 கிமீ ஓட்டத்திற்கு, பேட்டரி வாடகை சுமார் 5,250 ரூபாயாக இருக்கும். இந்த வாடகைத் தொகையுடன், தினசரி சார்ஜிங் கட்டணத்தையும் வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும்.

காரின் ஆரம்ப விலையிலும் சரி, பேட்டரி வாடகை என்று பார்க்கும்போதும் சரி, இவிதாராவை விட, விண்ட்சரின் விலை குறைவாக உள்ளது. இந்நிலையில், விண்ட்சருக்கு இவிதாரா ஈடு கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

 

தலைப்பு செய்திகள்

ரூபாய் 12 ஆயிரம் தள்ளுபடி... பலே ஆஃபர் தந்த Bajaj Pulsar! ஆயுத பூஜைக்கு இறக்கிடலாமா?
ரூபாய் 12 ஆயிரம் தள்ளுபடி... பலே ஆஃபர் தந்த Bajaj Pulsar! ஆயுத பூஜைக்கு இறக்கிடலாமா?
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
New Car Launches in Oct.: டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
Top 5 EV Car Companies: களைகட்டும் EV கார் சந்தை.! வாடிக்கையாளர்களை கவர்ந்த டாப் 5 நிறுவனங்கள் எவை.? வாங்க பார்க்கலாம்
களைகட்டும் EV கார் சந்தை.! வாடிக்கையாளர்களை கவர்ந்த டாப் 5 நிறுவனங்கள் எவை.? வாங்க பார்க்கலாம்

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget