மேலும் அறிய

Scooters 150 kmph: இதை கவனிங்க..! 150 கிமீ வேகத்தில் பயணிக்கக்கூடிய ஸ்கூட்டர்கள் - டாப் 5 லிஸ்ட் இதோ

Scooters 100 kmph: ஆட்டோமொபைல் சந்தையில் மணிக்கு 150 கிமீ வேகத்தில் பயணிக்கக் கூடிய ஸ்கூட்டர்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Scooters 100 kmph: ஆட்டோமொபைல் சந்தையில் மணிக்கு 150 கிமீ வேகத்தில் பயணிக்கக் கூடிய, டாப் 5 ஸ்கூட்டர் விவரங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

ஏப்ரிலியா எஸ்ஆர்வி850:

Aprilia SRV850 ஆனது 2012 முதல் 2016 வரை சந்தையில் விற்கப்பட்டது. இந்த ஸ்கூட்டர் இத்தாலிய பிராண்டின் பந்தய டிஎன்ஏவின் உருவகமாகும். இது ஒரு மோட்டார் சைக்கிளின் V-ட்வின் இன்ஜின் மூலம் இயக்கப்பட்டது.  இது சுமார் 76 hp சக்தியையும் 76 Nm உச்ச முறுக்குவிசையையும் உற்பத்தி செய்யும் திறனை கொண்டிருந்தது.  ஸ்போர்ட்டி ஸ்கூட்டர் மணிக்கு 190 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இதன் விலை இந்தியாவில் சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

சுசுகி பர்க்மேன் 650

ஜப்பானிய வாகன உற்பத்தியாளரின் மேக்சி-ஸ்கூட்டர், பெரியதாக வந்ததோடு நீண்ட தூர பயணங்களுக்கு  உகந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் மீதான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய, 2003 இல் தயாரிக்கப்பட்ட இந்த ஸ்கூட்டர் 650 சிசி இணை-இரட்டை இன்ஜினை பயன்படுத்தியது.  56 ஹெச்பி ஆற்றலையும் 61 என்எம் உச்ச முறுக்குவிசையையும் உற்பத்தி செய்த இந்த ஜப்பானிய ஸ்கூட்டர் மணிக்கு 177 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இதன் விலை இந்தியாவில் சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ஹோண்டா எக்ஸ்-ஏடிவி

ஹோண்டா எக்ஸ்-ஏடிவி சர்வதேச சந்தையில் விற்பனையில் உள்ள ஜப்பானிய வாகன உற்பத்தியாளரின் ஸ்கூட்டர்களில் ஒன்றாகும். ஆஃப்-ரோடு திறன் கொண்ட ஸ்கூட்டர் 745 சிசி, இரட்டை சிலிண்டர் இன்ஜினுடன் வருகிறது. இது 57 ஹெச்பி ஆற்றலையும் 69 என்எம் பீக் டார்க்கையும் உற்பத்தி செய்து, அதிகபட்சமாக மணிக்கு 160 கிமீ வேகத்தை எட்டும் என கூறப்படுகிறது. இதன் விலை இந்திய சந்தையில் 10 முதல் 12 லட்ச ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கிம்கோ AK550:

கிம்கோ AK550 என்பது ஸ்போர்ட்டி வடிவமைப்புடன் வரும் மேக்ஸி ஸ்கூட்டர்களில் ஒன்றாகும். வடிவமைப்பபு வழங்கிய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய, ஸ்கூட்டர் 550 சிசி இரட்டை சிலிண்டர் இன்ஜினை பயன்படுத்துகிறது.  இது 55 பிஎச்பி ஆற்றலையும் 55.64 என்எம் பீக் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 167 கிமீ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை இந்திய சந்தையில் 9 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பிஎம்டபள்யூ C 650 GT

ஜெர்மன் பிராண்டான பிஎம்டபள்யூவின் ஸ்கூட்டரான சி 650 ஜிடி கடந்த 2012ம் ஆண்டு சர்வதேச ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகமானது. இது எஃகு குழாய்கள் மற்றும் வார்ப்பு அலுமினியப் பிரிவுகளின் கலவையுடன் விற்கப்படும் சேஸ்ஸை அடிப்படையாகக் கொண்டது. இதில் உள்ள 647 சிசி, இரட்டை சிலிண்டர் இன்ஜின் 60 ஹெச்பி பவரையும், 62 என்எம் பீக் டார்க்கையும் உருவாக்குகிறது. அதன் மூலம் மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இதன் விலை இந்திய சந்தையில் சுமார் 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Breaking News LIVE: கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு
Breaking News LIVE: கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jagan Mohan Reddy  vs Chandra Babu Naidu | ஜெகனுக்கு END CARD!அதிரடி காட்டும் சந்திரபாபு..Puducherry Police Exam | ’’வாழ்க்கையே போச்சு’’கண்ணீர் விட்டு அழுத பெண்கள்..தேர்வுக்கு அனுமதி மறுப்புDhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Breaking News LIVE: கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு
Breaking News LIVE: கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Shocking Video : நீர்வீழ்ச்சி வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்.. 7 பேர்.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள்
நீர்வீழ்ச்சி வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்.. 7 பேர்.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள்
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
Embed widget