மேலும் அறிய

KTM scooter: கேடிஎம் நிறுவனத்தில் வருகிறதா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. வடிவமைப்பாளர் கொடுத்த அப்டேட்

கேடிஎம் நிறுவனத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வர உள்ளதா, என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

கேடிஎம் பைக்குகள்:

இருசக்கர வாகன ஓட்டிகளிடையே அதிக கவனம் ஈர்த்த மாடல்களில் கேடிஎம் நிறுவனத்தை சேர்ந்த வாகனமும் ஒன்று. அதில் இடம்பெற்றுள்ள ஸ்போர்ட்ஸ் லுக், இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதன் காரணமாகவே, இந்திய இருசக்கர வாகன விற்பனை சந்தையில், கேடிஎம் நிறுவனம் கணிசமான பங்கு வகித்து வருகிறது.

இந்நிலையில், கூடுதல் பயனாளர்களை கவரும் விதமாக விரைவில், கேடிஎம் நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி விற்பனைக்கு கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியானது. அதற்கு சான்றாக, கேடிஎம் நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை உருவாக்கி வருவதாக, ஏற்கனவே நீண்ட காலமாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன.  பல முன்னணி நிறுவனங்களின் ஸ்கூட்டர்களுக்கு, புதிய கேடிஎம் ஸ்கூட்டர் நேரடி போட்டியாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

இ-ஸ்கூட்டர் மாடல்

முன்னதாக 2013 டோக்கியோ ஆட்டோ விழாவில் கேடிஎம் நிறுவனம் இ-ஸ்பீடு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டிரெலிஸ் ஃபிரேம், கச்சிதமான டிசைன் மற்றும் ஆரஞ்சு நிறம் கொண்டிருந்த ஸ்கூட்டர், தோற்றத்தில் கேடிஎம் ஸ்டைலிங் சார்ந்து இருந்தது. எனினும், இது கான்செப்ட் வடிவிலேயே இருந்தது. இதனால் விரைவில் கேடிஎம் ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

கேடிஎம் ஸ்கூட்டருக்கு வாய்ப்பு இல்லை:

இந்நிலையில் தான், கேடிஎம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் தற்போதைக்கு அறிமுகம் செய்யப்படாது என கிஸ்கா டிசைனை சேர்ந்த ஜெரால்டு கிஸ்கா விளக்கமளித்துள்ளார். தற்போதைய சூழலில்,  பெர்ஃபார்மன்ஸ் ரக மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்வதில் கேடிஎம் பிரபலமாக உள்ளது. இந்த நிலையில், ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்யும் பட்சத்தில், கேடிஎம் நிறுவனத்தின் அடையாளம் பாதிக்கப்படும் என ஜெரால்டு கிஸ்கா தெரிவித்து உள்ளார். இதனால் பயனாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

கேடிஎம் நிறுவனத்தின் புது வரவுகள்:

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் தற்போது நடைபெறாது என்ற பட்சத்தில் கேடிஎம் நிறுவனம் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இவை ஃபிரீரைடு E-XC மற்றும் SX E 5 மற்றும் SX-E 3 மாடல்கள் எலெக்ட்ரிக் வடிவில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. எதிர்காலத்தில் கேடிஎம் நிறுவனம் E-டியூக் மாடலை அறிமுகம் செய்யும் திட்டத்தில் இருக்கிறது. எனினும், இதன் வெளியீடு பற்றி கேடிஎம் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

இந்தியர்களை ஏமாற்றும் கேடிஎம் நிறுவனம்:

கேடிஎம் நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் தனது  890 அட்வென்ச்சர் R மோட்டர்சைக்கிளை மேம்படுத்தியது. அதைதொடர்ந்து  2023ம் ஆண்டிற்கான புதிய வெர்ஷன் 890 அட்வென்ச்சர் மாடல் நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போதைய சூழலில் ஐரோப்பாவில் மட்டுமே 2023 கேடிஎம் 890 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், புதிய பைக்கை தற்போதைக்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தும் எண்ணம் இல்லை என, கேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதோடு, கடந்த டிசம்பர் மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகமான 2023 சூப்பர் அட்வென்ச்சர் எஸ் மோட்டார்சைக்கிளும் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

MG Hector Storm: பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
Jaguar Type 01 EV Car: மின்சார சொகுசு ரதம்.! 1015 HP சக்தியுடன் புயலாக வரும் ஜாக்குவாரின் புதிய EV கார்; முழு விவரம்
மின்சார சொகுசு ரதம்.! 1015 HP சக்தியுடன் புயலாக வரும் ஜாக்குவாரின் புதிய EV கார்; முழு விவரம்
Tata Avinya X Launch: லுக்கு அள்ளுதே.! EV கார் சந்தையை தெறிக்கவிட வரும் டாடா அவின்யா.! எப்போது அறிமுகம் தெரியுமா.?
லுக்கு அள்ளுதே.! EV கார் சந்தையை தெறிக்கவிட வரும் டாடா அவின்யா.! எப்போது அறிமுகம் தெரியுமா.?

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
TN Weather News: 22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
MG Hector Storm: பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Embed widget