மேலும் அறிய

Kia Seltos: செல்டோஸ் கார்தான்னு முடிவு பண்ணிட்டிங்களா? அப்ப எந்த வேரியண்ட் பெஸ்ட்? ஏன்? பட்ஜெட் எப்படி?

Kia Seltos: கியா செல்டோஸ் காரை வாங்க வேண்டும் என முடிவு செய்து இருந்தால், எந்த வேரியண்டை தேர்வு செய்யலாம்? ஏன்? என்பதற்கான காரணங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

Kia Seltos: கியா செல்டோஸ் காரின் விலை விவரங்கள் கீழே பட்டியலிடப்படுள்ளன.

கியா செல்டோஸ் எஸ்யுவி

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எஸ்யுவிக்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் போட்டித்தன்மை மிகவும் தீவிரமாக அதிகரித்து, மாதாந்திர விற்பனையிலும் முன்னிலை வகிக்கின்றன. அந்த வகையில் முதன்மையான மாடல்களில் ஒன்றாக உள்ள கியா செல்டோஸ் உள்ளது. இந்த காரின் லைன் - அப் மிகவும் விரிவடைந்துவிட்டதால், இந்த எஸ்யுவியை தேர்ந்தெடுப்பதை காட்டிலும் அதில் ஒரு ட்ரிம்மை தேர்ந்தெடுப்பது என்பது சிரமமாக மாறியுள்ளது. செல்டோஸின் விலை வரம்பானது ரூ.10.99 லட்சத்தில் தொடங்கி ரூ.21.5 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரை நீள்கிறது. மூன்று இன்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் பல்வேறு விதமான ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் பலதரப்பட்ட ட்ரிம்கள் கிடைப்பதால், அவற்ற்லில் ஒன்றை தேர்வு செய்வது வாடிக்கையாளர்களுக்கு எளிதானதாக இல்லை.

செல்டோஸின் எந்த வேரியண்ட் பெஸ்ட்?

அதிகப்படியான அம்சங்களின் பட்டியலை கொண்டு கியா செல்டோஸின் டாப் எண்ட் வேரியண்ட்கள் பொதுவாகவே கவனத்தை ஈர்க்கின்றன. ஆனால், உண்மையிலேயே தரமான வேரியண்டானது மற்றொரு இடத்தில் உள்ளது என்பதே உண்மை. அந்த வகையில் கைக்காசை போட்டு செல்டோஸின் ஒரு காரை வாங்க விரும்புவதாக இருந்தால், அந்த முதலீட்டிற்கு நிகரான மதிப்பை கொண்ட HTX வேரியண்ட் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். 

ஏன் செல்டோஸின் HTX ட்ரிம் வாங்கலாம்?

HTX மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் வேரியண்டாக இல்லை. அதேநேரம், பட்டியலில் இருக்கும் அனைத்து வேரியண்ட்களையும் தன்னகத்தே கொண்டிருக்கவும் முயற்சிக்கவில்லை. மாறாக அன்றாட பயன்பாட்டிற்கு தேவையான அம்சங்கள் மற்றும் வசதிகளை மிகவும் பொருத்தமாக கொண்டிருக்கும், நடைமுறைக்கு உகந்த வேரியண்டாக விளங்குகிறது. நவீன மிட்-சைஸ் எஸ்யுவியை வாங்குபவர்கள் அடிப்படையாக எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களையும் கொண்டதாக HTX இருக்கும். அதன்படி, ப்ரீமியம் லுக்கிங் டிசைன் எலிமெண்ட்கள், போதுமான டெக்னாலஜி மற்றும் வசதியான பயணத்திற்கான அம்சங்களின் மூலமானது, காரின் கேபினானது அடிக்கடி பயன்படுத்தப்படாத அம்சங்களுக்காக அதிக தொகையை செலவிடும் சூழலிலிருந்து பயனர்கள் காப்பாற்றப்படுகின்றனர். டாப் எண்ட் GTX அல்லது X-Line வேரியண்ட்களை அணுகாமலேயே, செல்டோஸ் HTX ஆனது வெளிப்படையான சமரசங்களைக் கொண்ட லோயர் ஸ்பெக் எடிஷனாக தோன்றாமல், முறையான ப்ரீமியம் SUV போலவே காட்சியளிக்கிறது.
இதையும் படியுங்கள்: Entry Level Cars: எண்ட்ரி லெவல் கார் போரடிச்சிடுச்ச்சா..! டக்கரான 5 மாடல்கள் - எஸ்யுவி தொடங்கி EV வரை, விலை

பணத்திற்கு நிகராக HTX ட்ரிம்மில் என்ன கிடைக்கும்?

HTX ட்ரிம் தனித்து நிற்க காரணம், அதன் ஒன்று அல்லது இரண்டு முக்கிய அம்சங்கள் மட்டுமல்ல. செல்டோஸ் லைன் - அப்பானது படிப்படியாக உபகரணங்களின் தரத்தை உயர்த்துகிறது. அந்த வகையில் பயனர்கள் HTX ட்ரிம்மை அடையும்போது, மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பெரும்பாலான அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. அடிப்படை HTE மாடலானது, LED ஹெட்லேம்ப்கள் மற்றும் டெயில்லேம்ப்கள், 12.3-இன்ச் டிஜிட்டல் கிளஸ்டர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதியுடன் கூடிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் பின்புற ஏசி வென்ட்கள் போன்ற அத்தியாவசிய அம்சங்களுடன் தொடங்குகிறது. HTE(O) மாடலானது, ரூஃப் ரெயில்கள், கனெக்டட் டெயில்லேம்ப்கள், செமி-லெதரெட் இருக்கைகள் மற்றும் ஆட்டோமேட்டிக் வேரியன்ட்களுக்கான கூடுதல் செயல்பாடுகள் உள்ளிட்ட ஸ்டைலிங் மற்றும் வசதி அம்சங்களைச் சேர்க்கிறது.


Kia Seltos: செல்டோஸ் கார்தான்னு முடிவு பண்ணிட்டிங்களா? அப்ப எந்த வேரியண்ட் பெஸ்ட்? ஏன்? பட்ஜெட் எப்படி?

HTK மற்றும் HTK(O) மாடல்களுக்கு மாறும்போது, பெரிய அலாய் வீல்கள், புஷ்-பட்டன் ஸ்டார்ட்டுடன் கூடிய கீலெஸ் என்ட்ரி, பனோரமிக் சன்ரூஃப், காற்றோட்ட வசதியுள்ள முன் இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் 8-வழி பவர் டிரைவர் இருக்கை போன்ற அம்சங்கள் கிடைக்கின்றன. இவற்றை கடந்து,  HTX வேரியண்டை அடையும்போது செல்டோஸிற்கு ப்ரீமியம் உணர்வைத் தர உதவும் அம்சங்களை கியா சேர்க்கிறது. அதன்படி, கியா கனெக்ட் 2.0 உடன் கூடிய பெரிய 12.3 இன்ச் HD இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே, போஸ் 8-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், டூயல்-ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஆம்பியன்ட் லைட்டிங், மேம்படுத்தப்பட்ட உட்புறப் பொருட்கள் மற்றும் மிகவும் தனித்துவமான வெளிப்புறத் தோற்றம் ஆகியவை கிடைக்கும்.

செல்டோஸ் பவர்ட்ரெயின் விவரங்கள்:

செல்டோஸில் ஒட்டுமொத்தமாக மூன்று இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. வழக்கமான 1.5-லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆனது,  6-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது IVT ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கிறது. இது அன்றாட நகரப் பயன்பாடு மற்றும் மென்மையான ஓட்டுநர் அனுபவத்தில் கவனம் செலுத்துபவர்களுக்கு நல்ல தேர்வாக இருக்கும்.  மேம்பட்ட செயல்திறனை விரும்புவோருக்காக, கியா நிறுவனமானது 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினையும் வழங்குகிறது. இது 6-ஸ்பீட் iMT அல்லது 7-ஸ்பீட் DCT ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வை கொண்டுள்ளது. ஆனால், HTX ட்ரிம்மில் 6-iMT டிரான்ஸ்மிஷன் கிடைக்காது.
டீசல் எடிஷனை விரும்புவோருக்காக 1.5-லிட்டர் டர்போ-டீசல் இன்ஜின், 6-ஸ்பீட் மேனுவல் அல்லது 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கிறது. இது அதிக தூரம் பயணம் செய்யும் பயனர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. ஒட்டுமொத்தமாக செல்டோஸ் ஆனது சராசரியாக 17 முதல் 20 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது.


Kia Seltos: செல்டோஸ் கார்தான்னு முடிவு பண்ணிட்டிங்களா? அப்ப எந்த வேரியண்ட் பெஸ்ட்? ஏன்? பட்ஜெட் எப்படி?

செல்டோஸ் HTX வேரியண்டின் விலை

வேரியண்ட் இன்ஜின்/ட்ரான்ஸ்மிஷன் உத்தேச ஆன்-ரோட் விலை
HTX பெட்ரோல் 1.5லி மேனுவல் ரூ. 18.80 லட்சம்
HTX iVT பெட்ரோல் 1.5லி ஆட்டோமேடிக் ரூ. 20.50 லட்சம்
HTX டர்போ பெட்ரோல் 1.5லி டர்போ டிசிடி ஆட்டோமேடிக் ரூ. 22.20 லட்சம்
HTX டீசல் டீசல் 1.5லி டர்போ மேனுவல் ரூ. 21.50 லட்சம்
HTX A (Advanced) ADAS & 360 டிகிரி கேமரா உடன் கூடிய பெட்ரோல்/டீசல் ரூ. 21.50 லட்சம் - ரூ.22.99 லட்சம்

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
கம்பீரம்.. ஆளுமை.. 504 கி.மீட்டர் மைலேஜ்..! Keeway SR250 பைக்கை வாங்கலாமா? விலை எப்படி?
கம்பீரம்.. ஆளுமை.. 504 கி.மீட்டர் மைலேஜ்..! Keeway SR250 பைக்கை வாங்கலாமா? விலை எப்படி?
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget