பச்சை புல் மீது நடப்பது மனதை அமைதிப்படுத்தும்.

Published by: குலசேகரன் முனிரத்தினம்

செருப்பில்லாமல் புல் மீது நடப்பதால் உடலில் உள்ள 'மெலடோனின்' என்ற ஹார்மோன் சமநிலையில் இருக்கும்.

பூமியிலிருந்து வெளிவரும் எலெக்ட்ரான்கள் நமது உடலில் நுழைந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

செருப்பில்லாமல் நடப்பதால் லிகமென்ட்ஸ் சுறுசுறுப்பாகும்.

கால்களின் கீழே உள்ள நரம்புகள் தூண்டப்பட்டு, உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராக நடைபெறுகிறது

பூமியில் நேரடியாக கால் பாதங்களை வைப்பதால் உடல் தோரணை மேம்படும்.

நாள் முழுவதும் நாம் மின்னணு சாதனங்களுக்கு மத்தியில் இருப்பதால் உடலில் சேரும் அதிகப்படியான மின்சாரம் பூமிக்கு சென்று உடல் ரீசார்ஜ் ஆகிறது.

தொடர்ந்து புல் மீது நடப்பதால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

காலையில் சூரிய ஒளி படும்போது புல் மீது நடப்பதால் உடலுக்கு இயற்கையாகவே வைட்டமின் டி கிடைக்கும்.

காலை வேளையில் புல் மீது விழும் பனித்துளிகள் மீது நடப்பதால் குளிர்ச்சி ஏற்பட்டு உடல் சூடு குறையும்.