மேலும் அறிய

Honda Elevate EV: சம்பவம் லோடட் - மின்சார எடிஷனில் ஹோண்டாவின் ஹிட் SUV மாடல் - 450 கிமீ ரேஞ்ச், விலை, எந்த கார்?

Honda Elevate Electric Car: ஹோண்டா நிறுவனம் தனது எலிவேட் கார் மாடலை இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், மின்சார எடிஷனில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Honda Elevate Electric Car: ஹோண்டா எலிவேட் மின்சார காரை ஒருமுறை சார்ஜ் செய்தால், சுமார் 450 கிமீ தூரம் பயணிக்க முடியும் என கூறப்படுகிறது.

ஹோண்டா எலிவேட் மின்சார கார்:

ஹோண்டா நிறுவனம் தனது எலிவேட் எஸ்யுவி கார் மாடலை அண்மையில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. பயனாளர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில் தான், எலிவேட் எஸ்யுவி கார் மாடலின் மின்சார எடிஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்த ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறந்த இன்ஜின், வெளிப்புற தோற்றம்  மற்றும் அம்சங்களால் ஹோண்டா தொடர்ந்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில், புதிய மின்சார எஸ்யுவியை வாங்க விரும்புவோருக்கு, எலிவேட் EV ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம் என ஆட்டோமொபைல் சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ஹோண்டா எலிவேட் EV - முக்கியத்துவம்:

ஹோண்டா நிறுவனத்தின் மின்சார சந்தை நுழைவு தொடர்பான தகவல் கடந்த சில காலமாகவே தொடர்ந்து வெளியாகி வருகிறது. இந்நிலையில் தான், அந்நிறுவனத்தின் முதல் முழு மின்சார காராக, எலிவேட் கார் மாடல் அறிமுகப்படுத்தவிருப்பதாக வலுவான தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அந்நிறுவனத்தின் முதல் மின்சார காராக மட்டுமின்றி, இந்தியாவின் ஹோண்டாவின் போர்ட்ஃபோலியோவின் பெரும் மாற்றமாகவும் அமைய உள்ளது. உள்நாட்டில் தற்போது உள்ள மின்சார வாகனங்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.

ஹோண்டா எலிவேட் EV - ரேஞ்ச், சார்ஜிங்:

பயனர்களை கவர்ந்து இழுக்கும் நோக்கில் 62 kWh பேட்டரி இதில் இடம்பெறலாம் என கூறப்படுகிறது. இது 92 bhp ஆற்றல் 172 NM டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்டிருக்கும். முற்றிலுமாக ஆட்டோமேடிக் ட்ரான்ஷ்மிஷனை கொண்டிருக்கக் கூடிய இந்த காரை, ஒரு முறை சார்ஜ் செய்தால் 400 முதல் 450 கிலோ மீட்டர் தூரம் வரையிலான ரேஞ்சை வழங்கும் என கூறப்படுகிறது. இதன் மூலம் நகர்ப்புற தினசரி பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, வார இறுதிகளில் மேற்கொள்ளக்கூடிய நடுத்தர வெளியூர் பயணங்களுக்கும் எலிவேட் மின்சார எடிஷன் சிறந்த தேர்வாக இருக்கும் என நம்பப்படுகிறது. வழக்கமாக இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 8 முதல் 10 மணி நேரம் ஆகலாம். அதேநேரம், இதில் வழங்கப்படும்  ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மூலம் 30 முதல் 40 நிமிடங்களில் 80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்யலாம்.

தொழில்நுட்ப அம்சங்கள்:

காரின் உட்புறத்தை பார்க்கும்போது, டச்-ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உட்பட முற்றிலுமான டிஸ்பிளேக்களை ஹோண்டா நிறுவனம் நிரப்படலாம். வயர்லெஸ் சார்ஜிங், வெண்டிலேடட் சீட்ஸ், சன்ரூஃப், ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் கார்பிளே சிஸ்டம், ப்ளூடுத் கனெக்டிவிடி போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த காரில் இடம்பெறக்கூடும். பக்கவாட்டில், ஆண்டி லாக் பிரேக்கர்ஸ் அல்லது EBD தொழில்நுட்பத்துடன் கூடிய அல்லாய் வீல்கள், அதிகப்படியான கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியவற்றுடன், தற்போதைய எலிவேட் எடிஷனில் இருப்பது போன்ற மேம்படுத்தப்பட்ட லெவல் 2 ADAS தொழில்நுட்பம் மின்சார எடிஷனிலும் இருக்கும் என கூறப்படுகிறது. இதன் மூலம் பாதுகாப்பு அம்சங்கள் உறுதி செய்யப்படுகின்றன. தற்போதுள்ள எலிவேட் மாடலே பாதுகாப்பு சோதனையில் ஜப்பானில் 5 ஸ்டார்களை பெற்றுள்ளது. இதே தரம் புதிய மின்சார காரிலும் தொடரும். 

வெளியீடு, விற்பனை எப்போது?

ஹோண்டாவின் புதிய எலிவேட் மின்சார எடிஷன் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் அல்லது அக்டோபர் மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. இன்ஜின் எடிஷனின் விலை 11 லட்சத்து 91 ஆயிரம் ரூபாயிலிருந்து, அதிகபட்சமாக 16 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, புதிய மின்சார எலிவேட் எடிஷனின் விலை கூடுதல் அம்சங்களை கருத்தில் கொண்டு, 18 லட்சம் முதல் 20 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம். இந்திய சந்தையில் ஹோண்டாவின் எலிவேட் மின்சார எடிஷன் அறிமுகமாகும் போது, ஹுண்டாய் கோனா, MG ZS, BYD Atto 3 போன்ற மின்சார கார் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
SUV Rivals: எஸ்யுவி தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
SUV தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
Embed widget