மேலும் அறிய

Hero Splendor vs TVS Radeon: 2026ல் பைக் வாங்க போறீங்களா? - ஹீரோ ஸ்பிளெண்டர் vs டிவிஎஸ் ரேடியான்.. எது சிறந்தது?

Best Bike for Mileage: ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் மிக நீண்ட காலமாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கை பெற்ற பைக்காக உள்ளது. அதாவது 100 சிசி இஞ்ஜின் திறன் கொண்ட பைக்குகளில் இதுதான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

2026ம் ஆண்டு பிறக்கப்போகிறது. பலரும் இந்த புது ஆண்டில் வாகனங்கள் வாங்க வேண்டும் என திட்டமிடுவார்கள். கார், பைக் என எதுவாக இருந்தாலும் எது சிறந்ததாக இருக்கும் என குழப்பம் இருக்கும். காரணம் ஆட்டோமொபைல் சந்தையில் பல நிறுவனங்களின் பைக், கார்கள் வந்து விட்டது. போதாத குறைக்கு மின்சார வாகனங்களும் களமிறங்கியுள்ளதால் பல குழப்பம் ஏற்படுகிறது. இப்படியான நிலையில் ஹீரோ ஸ்பிளெண்டர் vs டிவிஎஸ் ரேடியான் ஆகிய இரு பைக்குகளில் எது சிறந்தது என்பது பற்றி நாம் காணலாம். 

இதில் ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் மிக நீண்ட காலமாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கை பெற்ற பைக்காக உள்ளது. அதாவது 100 சிசி இஞ்ஜின் திறன் கொண்ட பைக்குகளில் இதுதான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதேசமயம் டிவிஎஸ் ரேடியான் குறைந்த விலை மற்றும் நல்ல மைலேஜ் காரணமாக தற்சமயம் வாடிக்கையாளர்களிடையே வேகமாக பிரபலமடைந்து வருகிறது. ஆனால் இந்த இரண்டு பைக்குகளும் பட்ஜெட் விலையில் வாங்க நினைப்பவர்களுக்கு நல்ல சாய்ஸாக உள்ளது. 

ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் ரூ.74,039 என்ற மதிபில் சென்னையில் எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கிறது, அதே நேரத்தில் டிவிஎஸ் ரேடியான் ரூ.67,700ல் தொடங்குகிறது. அதாவது டிவிஎஸ் ரேடியான் சுமார் ரூ.7,000 மலிவானது. பட்ஜெட்டில் பைக் வாங்குபவர்களுக்கு இது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். குறைந்த விலை என்ற போதிலும், சிறப்பம்சங்கள் மற்றும் மைலேஜ் இரண்டிலும் ரேடியான் ஒரு வலுவான விருப்பமாக தனித்து நிற்கிறது.

ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கை பொறுத்தவரை அதில் Drum Brake - OBD 2B, Drum Brake  I3S - OBD 2B, I3S - Black and Accent Edition - OBD 2B, Million Edition என 4 வகைகளில் பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. டிவிஎஸ் ரேடியானில் முழு கருப்பு நிறம், டிரம், டிஜிட்டல் ட்ரம், டிஜிட்டல் டிஸ்க் என  4 வகைகளில் கிடைக்கிறது. 

டிவிஎஸ் ரேடியானின் 109.7 சிசி எஞ்சின் திறன் கொண்டது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கிமீ வரை செல்லும். ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் லிட்டருக்கு 70 கிமீ வரை மைலேஜ் கொடுக்கிறது. நகரங்களில் குறைந்தப்பட்சம் 62 கிலோ மீட்டர் வரை கிடைக்கும். அதேசமயம் TVS ரேடியான் பைக்கின்  மைலேஜ் லிட்டருக்கு 73.68 கிமீ வரை இருக்கும். ஸ்பிளெண்டர் பிளஸ் பைக் அனலாக் மீட்டர், i3S சிஸ்டம் ஆகியவை கொண்டுள்ளது. முக்கியமான எடை குறைவான பைக் ஆகும். அதேசமயம் டிவிஎஸ் ரேடியானில் செமி டிஜிட்டல் கன்சோல், நிகழ்நேர மைலேஜ், யூஎஸ்பி சார்ஜிங், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் ஆகியவை இருக்கும். 

தலைப்பு செய்திகள்

Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Ventilated Seat Cars: குளுகுளுன்னு போகணுமா..! லோ பட்ஜெட்டில் வெண்டிலேடட் இருக்கைகள் - 5 ஸ்டார் ரேட்டிங், 34KM மைலேஜ்
குளுகுளுன்னு போகணுமா..! லோ பட்ஜெட்டில் வெண்டிலேடட் இருக்கைகள் - 5 ஸ்டார் ரேட்டிங், 34KM மைலேஜ்
Honda Elevate Facelift New Look: யப்பா, லுக்கு அள்ளுதே.! புத்தம்புது தோற்ற வடிவமைப்பில் வரவிருக்கும் ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்
யப்பா, லுக்கு அள்ளுதே.! புத்தம்புது தோற்ற வடிவமைப்பில் வரவிருக்கும் ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்
Skoda Slavia Facelift Review: கண்கவர் அழகு.! ஸ்கோடா ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் எப்படி இருக்கு.? என்னென்ன மாற்றங்கள்.? இதோ ரிவ்யூவ்
கண்கவர் அழகு.! ஸ்கோடா ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் எப்படி இருக்கு.? என்னென்ன மாற்றங்கள்.? இதோ ரிவ்யூவ்

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
Chennai Power Cut: சென்னைல செவ்வாய் கிழமை (06.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை எற்படப் போகுது தெரியுமா.?
சென்னைல செவ்வாய் கிழமை (06.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை எற்படப் போகுது தெரியுமா.?
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Embed widget