மேலும் அறிய

ஒரு மளிகை கடையையே உள்ள வைக்கலாம் போலயே.! இந்தியாவில் அதிக ஸ்டோரேஜ் கொண்ட EV ஸ்கூட்டர்கள்

Electric Scooter With Big Storage: இன்றைய காலகட்டத்தில், பசுமைப் போக்குவரத்திற்கும், செலவை மிச்சப்படுத்துவதற்கும் உகந்ததாக உள்ள மின்சார ஸ்கூட்டர்கள், அதிக இடவசதியையும் வழங்குகின்றன. அதில் இந்த 5 கூட்டர்கள் சிறந்தவை.

இந்திய இருசக்கர வாகனச் சந்தையை புரட்டிப்போட்டு, பசுமைப் போக்குவரத்தை நோக்கிய மாற்றத்தை மின்சார ஸ்கூட்டர்கள் வேகப்படுத்தி வருகின்றன. இந்த ஸ்கூட்டர்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருப்பதோடு மட்டுமல்லாமல், ஷாப்பிங் பைகள், மளிகைப் பொருட்கள் மற்றும் பிற அன்றாட அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் சிறந்த சேமிப்பு இடவசதியை வழங்குகின்றன. அதில் கீழ்கண்ட ஐந்து ஸ்கூட்டர்கள் தான் அதிக இடவசதியை வழங்குகின்றன.

Ather Rizta - 56L (34L + 22L)

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் குடும்ப மின்சார ஸ்கூட்டர்களில் ஒன்றான ஏதர் ரிஸ்டா, மிக அதிக சேமிப்பு இடத்தை வழங்குகிறது. இந்த ஸ்கூட்டர், இருக்கைக்குக் கீழே 34 லிட்டர் சேமிப்பு இடத்தையும், சிறிய அத்தியாவசிய பொருட்களை சேமிக்க பயன்படும் கூடுதல் 22 லிட்டர் ஃபிரங்க் இடத்தையும் கொண்டுள்ளது.

இரண்டு பேட்டரி பேக் தேர்வுகளில் கிடைக்கும் ஏதர் ரிஸ்டா, அதிகபட்சமாக 159 கி.மீ. வரை பயணிக்கும் திறன் கொண்டது என கூறப்படுகிறது. அதோடு, இது பல மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களையும் கொண்டுள்ளது. அவை, இதன் நடைமுறை பயன்பாட்டை மேலும் அதிகரிக்கின்றன. ஏதர் ரிஸ்டாவின் விலை ரூ.1.21 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது.

River Indie - 55L (43L + 12L)

பெங்களூருவை தளமாகக் கொண்ட ரிவர் நிறுவனம், இந்தியாவில் தனித்துவமான இண்டி மின்சார ஸ்கூட்டரை விற்பனை செய்கிறது. 'ஸ்கூட்டர்களின் எஸ்யூவி' என்று விளம்பரப்படுத்தப்படும் இந்த ஸ்கூட்டர் 12-லிட்டர் க்ளோவ் பாக்ஸ் உட்பட, மொத்தம் 55 லிட்டர் சேமிப்பு இடத்தை வழங்குகிறது. மேலும், இதில் உள்ள தட்டையான தரைப்பலகை, கூடுதல் கொக்கிகள் மற்றும் பயன்பாட்டுக் கருவிகள் ஆகியவை, மளிகைப் பொருட்கள் மற்றும் பயணப் பெட்டிகளை எடுத்துச் செல்வதை எளிதாக்குகின்றன.

இந்த விசாலமான சேமிப்புப் பகுதியில், இரண்டு முழு அளவு ஹெல்மெட்டுகளை வைக்க முடியும். அதோடு, அகலமான ஃப்ளோர் போர்டு, பயன்பாட்டை இன்னும் மேம்படுத்துகிறது. இந்த ஸ்கூட்டர் 160 கி.மீ. வரை ரேஞ்சை வழங்கும் இதன் விலை ரூ.1.52 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.

Bajaj Chetak C3501 - 35L

EV ஸ்கூட்டர் சந்தையில் பஜாஜ் ஆட்டோ ஒரு முன்னணி நிறுவனமாக உள்ளது. அதன் ப்ரீமியம் தயாரிப்புகளில், சேத்தக் C3501 ஸ்கூட்டரும் ஒன்றாகும். இந்த ஸ்கூட்டரில், இருக்கைக்கு அடியில் 35 லிட்டர் வரை பொருட்களை சேமிக்கும் வசதி இருப்பதால், ஒரு நடைமுறைக்கு ஏற்ற தேர்வாக அமைகிறது.

153 கி.மீ. வரை பயணிக்கக்கூடிய திறன் கொண்ட பஜாஜ் சேத்தக் C3501-ன் விலை ரூ.1.39 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். இதில், கூடுதல் சிறப்பம்சங்களாக, க்ளோவ் பாக்ஸ், கீலெஸ் என்ட்ரி, TFT டிஸ்ப்ளே, ஆவண சேமிப்பு மற்றும் திருட்டுத் தடுப்பு எச்சரிக்கைகள் ஆகியவை உள்ளன.

Ola S1 Pro+ - 34L

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் முதன்மை ஸ்கூட்டரான எஸ்1 ப்ரோ+, 4kWh மற்றும் 5.3kWh பேட்டரி பேக் தேர்வுகளில் வருகிறது. இது 320 கி.மீ. வரை பயணிக்கக்கூடியது திறனும், மணிக்கு 130 கி.மீ. வரையிலான உச்ச வேகத்தை எட்டக்கூடிய திறனும் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த ஸ்கூட்டர், இருக்கைக்கு அடியில் உள்ள 34 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெரிய சேமிப்புப் பகுதி காரணமாக, நடைமுறைப் பயன்பாட்டிற்காகவும் தனித்து நிற்கிறது. பலவிதமான ரைட் மோட்கள், ஒரு TFT டிஸ்ப்ளே, ABS, டிஸ்க் பிரேக்குகள், ஸ்மார்ட்போன் இணைப்பு மற்றும் நேவிகேஷன் ஆகியவை மற்ற முக்கிய அம்சங்கள். ஓலா S1 ப்ரோ+ ஸ்கூட்டரின் விலை ரூ.1.24 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது.

TVS Orbiter - 34L

டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய மின்சார ஸ்கூட்டர்களில் ஆர்பிட்டரும் ஒன்று. இந்த ஸ்கூட்டர், இருக்கைக்குக் கீழே 34 லிட்டர் சேமிப்பு இடத்தை கொண்டுள்ளது. இது அன்றாட அத்தியாவசியப் பொருட்களை வைப்பதற்கு போதுமான இடவசதியை வழங்குகிறது. இதன் பெரிய சேமிப்புப் பகுதியில், இரண்டு முழு அளவு ஹெல்மெட்டுகளை வைக்க முடியும்.

கூடுதல் அம்சங்களாக, USB சார்ஜிங், ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட், க்ரூஸ் கண்ட்ரோல், ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் கிரிஸ்டல் LED ஹெட்லேம்ப்கள் ஆகியவை உள்ளன. TVS ஆர்பிட்டரின் விலை ரூ.84,999 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். மேலும், இது பேட்டரி-அஸ்-எ-சர்வீஸ் (BaaS) திட்டத்தின் கீழ் ரூ.49,999 என்ற பயனுள்ள விலையிலும் கிடைக்கிறது.

 

 

தலைப்பு செய்திகள்

Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Ventilated Seat Cars: குளுகுளுன்னு போகணுமா..! லோ பட்ஜெட்டில் வெண்டிலேடட் இருக்கைகள் - 5 ஸ்டார் ரேட்டிங், 34KM மைலேஜ்
குளுகுளுன்னு போகணுமா..! லோ பட்ஜெட்டில் வெண்டிலேடட் இருக்கைகள் - 5 ஸ்டார் ரேட்டிங், 34KM மைலேஜ்
Honda Elevate Facelift New Look: யப்பா, லுக்கு அள்ளுதே.! புத்தம்புது தோற்ற வடிவமைப்பில் வரவிருக்கும் ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்
யப்பா, லுக்கு அள்ளுதே.! புத்தம்புது தோற்ற வடிவமைப்பில் வரவிருக்கும் ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்
Skoda Slavia Facelift Review: கண்கவர் அழகு.! ஸ்கோடா ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் எப்படி இருக்கு.? என்னென்ன மாற்றங்கள்.? இதோ ரிவ்யூவ்
கண்கவர் அழகு.! ஸ்கோடா ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் எப்படி இருக்கு.? என்னென்ன மாற்றங்கள்.? இதோ ரிவ்யூவ்

வீடியோ

Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்
VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
TN Weather News: 32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
Gold and silver rate today : இன்று நகைப்பிரியர்களுக்கு குஷியா.? தங்கத்தின் விலை குறைந்ததா.? உயர்ந்ததா.? விலை நிலவரம் இதோ..
இன்று நகைப்பிரியர்களுக்கு குஷியா.? தங்கத்தின் விலை குறைந்ததா.? உயர்ந்ததா.? விலை நிலவரம் இதோ..
Embed widget