மேலும் அறிய

Car Tips: கார் ஓட்ட பழகறீங்களா? விபத்தில்லாமல் பாதுகாப்பாக, சூப்பராக ஓட்டுவது எப்படி? டிப்ஸ்!

Car Driving Tips: சிறந்த டிரைவராக உருவெடுக்க, காரின் அடிப்படையான சில விஷயங்களைச் சரியாகக் கற்றுக்கொள்வது அவசியம்.

கார் ஓட்டக் கற்றுக்கொள்வது பலருக்கும் ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும். ஆனால், முறையான வழிகாட்டுதல்கள் இன்றி ஆரம்பத்திலேயே தவறாக ஓட்டப் பழகினால், அது உங்களுக்கும் சாலையில் செல்வோருக்குமே ஆபத்தாக முடியலாம். வண்டிக்கும் அதிக செலவு வைத்துவிடலாம்.

சிறந்த டிரைவராக உருவெடுக்க, காரின் அடிப்படையான சில விஷயங்களைச் சரியாகக் கற்றுக்கொள்வது அவசியம்.

சரியான பொசிஷன்

கார் ஓட்டத் தொடங்கும் முன், ஓட்டுநர் இருக்கையை உங்களுக்கு ஏற்றவாறு அட்ஜஸ்ட் செய்ய வேண்டியது மிக முக்கியம். ஸ்டீயரிங் வீலுக்கு மிக அருகிலோ அல்லது மிகவும் தள்ளியோ அமரக்கூடாது. உங்கள் கால்கள், பெடல்களை எளிதாக எட்டும் வகையிலும், சாலையின் முன்புறம் மற்றும் பக்கவாட்டுக் கண்ணாடிகள் தெளிவாகத் தெரியும் வகையிலும் சீட்டை சரியாக அமைத்துக்கொள்ள வேண்டும்.

பெடல்களைப் பயன்படுத்தும் முறை (A, B, C ரூல்)


மேனுவல் கார்களில் ஆக்ஸிலரேட்டர் (A), பிரேக் (B), க்ளட்ச் (C) என வலமிருந்து இடமாக மூன்று பெடல்கள் இருக்கும். இதில் கால்களைப் பயன்படுத்தும் முறைதான் டிரைவிங்கின் ஆணிவேர்.

  • உங்கள்இடது காலை 'க்ளட்ச்' (Clutch) பெடலை மிதிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  • வலது காலை பிரேக் மற்றும் ஆக்ஸிலரேட்டர் ஆகிய இரண்டுக்கும் மாற்றி மாற்றிப் பயன்படுத்த வேண்டும்.
  • எக்காரணத்தைக் கொண்டும் இடது காலால் பிரேக்கை அழுத்தக் கூடாது; இது மிகப்பெரிய விபத்துகளுக்கு வழிவகுக்கலாம்.


Car Tips: கார் ஓட்ட பழகறீங்களா? விபத்தில்லாமல் பாதுகாப்பாக, சூப்பராக ஓட்டுவது எப்படி? டிப்ஸ்!

ஸ்மூத்தான இயக்கம்


காரை கிளப்பும்போது க்ளட்ச்சை முழுமையாக மிதித்து முதல் கியரை மாற்றிய பின், ஆக்ஸிலரேட்டரை லேசாக அழுத்தியபடியே க்ளட்சை மெதுவாக விடுவிக்க வேண்டும். திடீரென க்ளட்ச்சை விட்டால் இன்ஜின் ஆஃப் ஆகிவிடும். அடுத்தடுத்து கியரை மாற்றி, வேகத்தைக் கூட்ட வேண்டும்.

அதேபோல, வண்டியை நிறுத்தும்போது திடீரென பிரேக் அடிக்காமல், முன்கூட்டியே கணித்து, வேகத்தை குறைத்து சீராக பிரேக்கை அழுத்திப் பழக வேண்டும்.

ஸ்டீயரிங் கன்ட்ரோல்

அதேபோல வண்டி ஓட்டுவதில் ஸ்டீயரிங் கன்ட்ரோல் மிக மிக முக்கியம். அப்போதுதான் வண்டியை இரு புறமும் எதிலும் பட்டுவிடாமல் சரியாக ஓட்ட முடியும். வண்டி ஓட்டும்போது கைகள் கட்டாயம் ஸ்டீயரிங் வீலில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

முதலில் அதிகம் ட்ராஃபிக் இல்லாத இடங்களில் ஓட்டிப் பழகிய பிறகு, நெரிசல் மிகுந்த இடங்களில் வண்டியை எடுக்கலாம். ஆட்டோமேட்டிக் கார்கள் என்றால் இன்னும் சிறப்பு.

ஆரம்பத்திலிருந்தே சீட்பெல்ட் அணிவது, இண்டிகேட்டர்களைப் பயன்படுத்துவது போன்ற பழக்கங்களை முறையான ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி மூலம் கற்றுக்கொண்டால், நீங்களும் பாதுகாப்பான கார் ஓட்டலாம்.

நிறையப் பேருக்கு ஆரம்ப காலத்தில் வாங்கிய 4 வீலர் டிரைவிங் லைசென்ஸ் இருக்கும், ஆனால் வண்டியை எடுக்காமலே இருந்து, இப்போது சரியாக ஓட்ட வராது. அவர்களுக்குமே மேலே கூறிய டிப்ஸ் உதவும்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஒரே சார்ஜில் 657 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது பென்ஸின் New Mercedes GLA கார்! இனி பட்டையை கிளப்பலாம்!
ஒரே சார்ஜில் 657 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது பென்ஸின் New Mercedes GLA கார்! இனி பட்டையை கிளப்பலாம்!
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
Tata Harrier: டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? அப்படி என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்?
டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? ஹாரியரில் என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்
Top Five High Mileage Car : 1 லிட்டருக்கு 28 கி.மீ. தரும் ‘டாப் 5’ பெட்ரோல் கார்கள்! லிஸ்ட் உள்ளே...
Top Five High Mileage Car : 1 லிட்டருக்கு 28 கி.மீ. தரும் ‘டாப் 5’ பெட்ரோல் கார்கள்! லிஸ்ட் உள்ளே...

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pension : மாத ஓய்வூதிய திட்டம்.! அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்- வெளியான ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
மாத ஓய்வூதிய திட்டம்.! அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்- வெளியான ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
Tata Harrier: டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? அப்படி என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்?
டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? ஹாரியரில் என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்
Ramayana Trailer: ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
Embed widget