மேலும் அறிய

Best 125cc Scooters : பெட்ரோல் விலைக்கு பயப்பட தேவையில்லை! செம மைலேஜ் தரும் இந்தியாவின் பெஸ்ட் 125cc ஸ்கூட்டர்கள்

ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவான பட்ஜெட்டில், ஸ்மார்ட் வசதிகள், ஸ்போர்ட்டி டிசைன் மற்றும் 52 கிமீ வரை மைலேஜ் தரும் சூப்பர் ஆப்ஷன்கள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன

இந்திய மிடில் கிளாஸ் குடும்பங்களில் ஸ்கூட்டர் என்பது வெறும் வாகனம் மட்டுமல்ல, அது ஒரு உணர்வு. ஆபீஸ் போவது, வீட்டுத் தேவைகள், குழந்தைகளைப் பள்ளியில் விடுவது என எல்லாவற்றிற்கும் ஸ்கூட்டரே அடிப்படையாக உள்ளது. ஒரு காலத்தில் 100cc அல்லது 110cc ஸ்கூட்டர்களை மட்டுமே இருந்தது. ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. மக்கள் பவர் மற்றும் நல்ல மைலேஜ் இரண்டையும் தரும் 125cc ஸ்கூட்டர்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவான பட்ஜெட்டில், ஸ்மார்ட் வசதிகள், ஸ்போர்ட்டி டிசைன் மற்றும் 52 கிமீ வரை மைலேஜ் தரும் சூப்பர் ஆப்ஷன்கள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன. நீங்கள் ஒரு புதிய ஸ்கூட்டர் வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த ஐந்து ஸ்கூட்டர்களைப் பற்றி நீங்கள் கண்டிப்பாய் தெரிந்து கொள்ள வேண்டும்.

யமஹா ஃபாசினோ 125 

நீங்கள் சாலையில் செல்லும்போது எல்லாரும் உங்கள் ஸ்கூட்டரையே பார்க்க வேண்டும் என்று நினைத்தால், யமஹா ஃபாசினோவை வாங்கலாம். இது இந்தியாவின் மிக ஸ்டைலான ரெட்ரோ லுக் ஸ்கூட்டர்களில் ஒன்றாகும். இதன் வளைவான டிசைன் இதற்கு ஒரு பிரீமியம் தோற்றத்தைத் தருகிறது. இதில் ஹைப்ரிட் அசிஸ்ட் சிஸ்டம் உள்ளது, இது ஸ்கூட்டரை நிறுத்தி எடுக்கும்போது கூடுதல் பவரைத் தருகிறது. ப்ளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் எல்இடி விளக்குகள் போன்ற நவீன வசதிகள் இதில் உள்ளன. இது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் 52 கிமீ மைலேஜ் தருகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ₹74,910 முதல் தொடங்குகிறது.

டிவிஎஸ் ஜூபிடர் 125 

வசதியும், நடைமுறை பயன்பாடும் முக்கியம் என்று நினைப்பவர்களுக்கு ஜூபிடர் 125 ஒரு சிறந்த வரப்பிரசாதம் ஆகும். இதில் காரில் இருப்பது போல முன்னாடியே பெட்ரோல் போடும் வசதி (Front fuel filling) உள்ளதால், சீட்டை விட்டு இறங்க வேண்டிய அவசியமில்லை. சீட்டுக்கு அடியில் மிக அதிக ஸ்டோரேஜ் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டுள்ளது, இதில் இரண்டு ஹெல்மெட்டுகளை கூட தாராளமாக வைக்கலாம். இது சுமார் 50 கிமீ வரை மைலேஜ் தருகிறது. இதன் விலை சுமார் ₹78,700 முதல் தொடங்குகிறது.

சுசுகி ஆக்சஸ் 125 

இந்த ஸ்கூட்டர் பல ஆண்டுகளாக இந்திய சந்தையில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. சுசுகி ஆக்சஸ் அதன் ஸ்மூத்தான இன்ஜின் மற்றும் சொகுசான ரைடிங் அனுபவத்திற்காகப் பெயர் பெற்றது. இதன் லேட்டஸ்ட் மாடலில் ப்ளூடூத் வசதியுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் புதிய வண்ணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் விலை சுமார் ₹79,885 முதல் தொடங்குகிறது.

இதையும் படிங்க: உயரும் பெட்ரோல் விலை.. சூப்பர் மைலேஜ் தரும் பெஸ்ட் 7-சீட்டர் கார்கள்!தள்ளுபடி எவ்வளவு தெரியுமா?

டிவிஎஸ் என்டார்க் 125 

உங்களுக்கு வேகம், ஸ்டைல் மற்றும் அக்ரசிவ் லுக் வேண்டும் என்றால், என்டார்க்கை விட சிறந்த ஆப்ஷன் எதுவும் இல்லை. இதன் ஸ்போர்ட்டி பாடி மற்றும் ஷார்ப்பான லுக் இளைஞர்களைக் காந்தம் போல ஈர்த்து வருகிறது. இதில் டிஜிட்டல் ஸ்கிரீன் உள்ளது. இதை ப்ளூடூத் மூலம் இணைத்து நேவிகேஷன் மற்றும் ரைடு அனலிட்டிக்ஸ் போன்றவற்றைச் சரிபார்த்துக் கொள்ளலாம். இதன் விலை ₹81,000 முதல் தொடங்குகிறது.

உங்க பட்ஜெட்டுக்கு எந்த ஸ்கூட்டர் பெஸ்ட்?

தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் விலையைக் கருத்தில் கொள்ளும்போது, நல்ல பவர் மற்றும் மைலேஜ் தரும் வாகனம் வாங்குவது அவசியமாகிறது. இந்த 125cc ஸ்கூட்டர்கள் ஹைவே மற்றும் சிட்டி டிராஃபிக் இரண்டிலுமே சிறப்பாகச் செயல்படுகின்றன. உங்கள் பழைய 100cc ஸ்கூட்டர் அடிக்கடி ரிப்பேர் ஆகி அலைக்கழிக்கிறதா, அல்லது முதன்முறையாக வாகனம் வாங்கப் போகிறீர்களா, இந்த ஆப்ஷன்கள் 1 லட்சம் பட்ஜெட்டிற்குள் மிகச் சிறந்தவை.

உங்களுக்கு மைலேஜ் மற்றும் ஸ்டைல் மட்டுமே வேண்டும் என்றால் யமஹா ஃபாசினோவை தேர்வு செய்யலாம். அதிக லக்கேஜ் ஸ்பேஸ் மற்றும் குடும்பத்திற்கான வசதி வேண்டும் என்றால் டிவிஎஸ் ஜூபிடரை தேர்ந்தெடுக்கலாம். நம்பகமான மறுவிற்பனை மதிப்பு (Resale value) வேண்டும் என்றால் சுசுகி ஆக்சஸ் நல்ல சாய்ஸ். அதுவே வேகம் மற்றும் லேட்டஸ்ட் டெக்னாலஜி வேண்டும் என்று நினைத்தால் டிவிஎஸ் என்டார்க் தான் பெஸ்ட் சாய்ஸ்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Best Mileage Cars Under 7 Lakh: சின்ன பட்ஜெட்டு, பெத்த மைலேஜு.! ரூ.7 லட்சத்தில் கிடைக்கும் சக்திவாய்ந்த சிக்கனமான கார்கள் எவை தெரியுமா.?
சின்ன பட்ஜெட்டு, பெத்த மைலேஜு.! ரூ.7 லட்சத்தில் கிடைக்கும் சக்திவாய்ந்த சிக்கனமான கார்கள் எவை தெரியுமா.?
MG Comet EV on EMI: ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
Hero Vida VX2 Go: 128 கி.மீ., மைலேஜ்.. பட்ஜெட் விலை.. ஹீரோ Vida VX2 Go எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கலாமா?
Hero Vida VX2 Go: 128 கி.மீ., மைலேஜ்.. பட்ஜெட் விலை.. ஹீரோ Vida VX2 Go எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கலாமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
Best Mileage Cars Under 7 Lakh: சின்ன பட்ஜெட்டு, பெத்த மைலேஜு.! ரூ.7 லட்சத்தில் கிடைக்கும் சக்திவாய்ந்த சிக்கனமான கார்கள் எவை தெரியுமா.?
சின்ன பட்ஜெட்டு, பெத்த மைலேஜு.! ரூ.7 லட்சத்தில் கிடைக்கும் சக்திவாய்ந்த சிக்கனமான கார்கள் எவை தெரியுமா.?
MG Comet EV on EMI: ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Embed widget