மேலும் அறிய

Aprilia SR 125 Scooter Review: ஸ்டைல் லுக்.. அசத்தல் சவாரி.. Aprilia SR 125 ஸ்கூட்டர் மைலேஜ் எப்படி?

Aprilia SR 125 ஸ்கூட்டரின் தரம், விலை, மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் ஸ்கூட்டர்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பல்வேறு வசதிகளுடன் ஸ்கூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. 

Aprilia SR 125:

இத்தாலியைப் பூர்வீகமாக கொண்ட நிறுவனம் Aprilia. இவர்களது பைக் மற்றும் ஸ்கூட்டர் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் விற்பனையாகி வருகிறது. இவர்களின் Aprilia SR 125 ஸ்கூட்டரின் தரம், மைலேஜ், விற்பனை ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்த Aprilia SR 125 ஸ்கூட்டரின் தொடக்க விலை ரூபாய் 1 லட்சத்து 39 ஆயிரத்து 550 ஆகும். இந்த ஸ்கூட்டரில் மொத்தம் 2 வேரியண்ட்கள் உள்ளது. 

1. Aprilia SR 125 Premium:

இந்த Aprilia SR 125 Premium ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 39 ஆயிரத்து 550 ஆகும். இதில் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் உள்ளது. 9.97 பிஎச்பி குதிரை ஆற்றல் கொண்டது. 10.33 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. கிக் மற்றும் செல்ஃப் ஸ்டார்ட் வசதி கொண்டது. பில்லியன் சீட் பொருத்தப்பட்டுள்ளது. வெள்ளை, சிவப்பு, சாம்பல் மற்றும் நீல நிற வண்ணங்களில் பொருத்தப்பட்டுள்ளது. ஜிபிஎஸ் வசதி இதில் இல்லை. ப்ளூடூத் வசதி இதில் இல்லை.

2. Aprilia SR 125 hp.e:

இந்த Aprilia SR 125 hp.e இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 40 ஆயிரத்து 972 ஆகும். டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. 10.46 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 10.4 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. ப்ளூடூத் வசதி இதில் உள்ளது. ஜிபிஎஸ் வசதி இதில் உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி இதில் உள்ளது. ஸ்டெப்ட் சீட் இதில் உள்ளது. கருஞ்சிவப்பு, கருஞ்சாம்பல் மற்றும் கருப்பு வண்ணங்களில் இதில் உள்ளது. 

சிறப்புகள்:

இந்த ஸ்கூட்டரில் 124.5 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 40 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. 118 கிலோ எடை கொண்டது. 6 லிட்டர் பெட்ரோல் டேங்கர் வசதி கொண்டது. ஒரு முறை டேங்கை நிரப்பினால் 240 கிலோமீட்டர் வரை செல்லலாம். 

சிபிஎஸ் வசதி கொண்டது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக் இரு வேரியண்ட்களிலும் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் ட்ரம் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் டெலிஸ்கோபிக் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் ஹைட்ராலிக் 5 பொசிஷன் அட்ஜெஸ்டபிள் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. 5 வருடம் அல்லது 60 ஆயிரம் கிலோமீட்டர் வரை வாரண்டி அளிக்கப்படுகிறது. 

டிஜிட்டல் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டல் ஆகும். எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் தோற்றம் வசீகரமாக இருப்பதால் ஆண்களும், பெண்களும் இந்த ஸ்கூட்டரை விரும்பி வாங்குகின்றனர்.

தலைப்பு செய்திகள்

ஒரே சார்ஜில் 200 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகிறது Simple Energy Arrive இ ஸ்கூட்டர் - தேதியை குறிச்சுக்கோங்க
ஒரே சார்ஜில் 200 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகிறது Simple Energy Arrive இ ஸ்கூட்டர் - தேதியை குறிச்சுக்கோங்க
இ ஸ்கூட்டர்களின் ராணி.. வரப்போது Vespa Electric Scooter - மைலேஜ், விலை எவ்ளோ?
இ ஸ்கூட்டர்களின் ராணி.. வரப்போது Vespa Electric Scooter - மைலேஜ், விலை எவ்ளோ?
Mahindra New Upcoming SUV: டாடா, ஹூண்டாய்க்கு வரும் சத்திய சோதனை.! பவர்ஃபுல் SUV-யை இறக்கும் மஹிந்திரா; மலைப்பகுதியில் விஷன் S சோதனை
டாடா, ஹூண்டாய்க்கு வரும் சத்திய சோதனை.! பவர்ஃபுல் SUV-யை இறக்கும் மஹிந்திரா; மலைப்பகுதியில் விஷன் S சோதனை
Jaecoo J5 Hybrid SUV: இதென்னடா டொயோட்டா ஹைரைடருக்கு வந்த சோதனை.! செம மைலேஜ், அம்சங்களுடன் களமிறங்கும் ஜேக்கூ ஹைப்ரிட் SUV
இதென்னடா டொயோட்டா ஹைரைடருக்கு வந்த சோதனை.! செம மைலேஜ், அம்சங்களுடன் களமிறங்கும் ஜேக்கூ ஹைப்ரிட் SUV

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
MK STALIN : “Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
“Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
Actress Jyothika : அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
Chengalpattu metro rail : அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
Thirumavalavan:
Thirumavalavan: "தர்மேந்திர பிரதான் பாவம்.." திருமாவளவன் திடீரென ஏன் அப்படி பேசினார்?
Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
TASMAC SHOP : பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
Embed widget