இன்றைய ராசி பலன்கள்: யாருக்கு நினைத்தது நடக்கும்?

இன்றைய 12 ராசிகளுக்கான துல்லியமான பலன்களை ABP நாடு, நேயர்களுக்காக வழங்குகிறது. அத்துடன் இன்று சந்திராஷ்டமம் சந்திக்கும் ராசியும் பட்டியலிடப்படுகிறது.

FOLLOW US: 

12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்: 

சந்திராஷ்டமம்:

பரணி, கார்த்திகை

மேஷம்: 

அமைதியாக அனைத்தையும் கையாளும் நாள் இன்று. தெரியாததை தெரியும் என கூறி மாட்டிக்கொள்ள வேண்டாம். தேவையின்றி வீண் பயணங்களை தவிர்க்கவும். குழந்தைகள் நலனில் அக்கறை வேண்டும். 

ரிஷபம்:

செய்யும் தொழிலில் புகழ் ஓங்கும். நீண்ட நாள் காத்திருந்த ஆர்டர்கள் கை சேரும். ஏற்கனவே பெற்ற ஆர்டர்கள் மீது பாராட்டு கிடைக்கும். பண வரவு இருக்கும். பெற்றோர் உடல்நலனில் அக்கறை வேண்டும். 

மிதுனம்:

பதவி சுகம், பண சுகம் காணும் நாள் இன்று. கையில் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறோம் என ஏங்கலாம். சரியான சேமிப்புகளை பின்பற்றவும். வீண் விரையங்களை தவிர்க்கவும். 

கடகம்:

உடல்நலனில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடந்தசில நாட்களாக இருந்த உடல்வலி உள்ளிட்ட பிரச்னைகள் ஓரளவு நீங்கும். தொடர்ந்து மருத்துவ ஆலோசனைகளை பெறவும். நினைத்த காரியங்கள் நடக்கும். 

சிம்மம்:

பயம் தொற்றிக்கொள்ளும். எடுத்த காரியங்களில் தடை வரும். ஆனாலும் பெரிய அளவில் பிரச்னையின்றி கரையேறுவீர்கள். முடிந்த அளவு குடும்பத்தாரிடம் மனம் விட்டு பேசி, பிரச்னைகளை தீர்த்துக் கொள்ளுங்கள். 

கன்னி:

ஆழ்ந்த சிந்தனைகளில் மூழ்கிப் போவீர்கள். எதற்கெடுத்தாலும் சந்தேகம் என்பதை கைவிடவும். பணியில் முழு கவனம் தேவை. எதிர்பாராத பண வரவு இருக்கும்.

துலாம்:

உடல்நலக்குறைபாடு இருந்தாலும் குடும்பத்தார் அன்புடன் கவனித்துக்கொள்வர். வழக்கமான கவனக்குறைவுகளை தவிர்க்கவும். குழந்தைகள் நலனில் அக்கறை தேவை. வீண் விரையங்களை தவிர்க்கவும். 

விருச்சிகம்:

பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல், அதே நேரத்தில் அள்ளி வழங்காமல் அமைதியாக இன்றைய நாள் கடந்து செல்லும். நல்ல உணவுகளை உட்கொண்டு மகிழ்வீர்கள். உடல்நலத்தில் அதிக அக்கறை வேண்டும். 

தனுசு:

தொழில் ரீதியான கவலைகள் வந்து போகும். வீண் கோபங்கள் பலனளிக்காது. கூட்டு முயற்சி வெற்றி தரும். புதிய முயற்சிகள் பலனளிக்கும். அதே நேரத்தில் பண நெருக்கடி ஏற்படுவதை தவிர்க்க முடியாது. 

மகரம்:

நன்மை உங்களை சூழ்ந்து கொள்ளும் நாள் இன்று. உடல்நலக்குறைபாடுகள் தீர்ந்து போகும். நண்பர்கள் ஆறுதல் கிடைக்கும். உறவினர்கள் வழி உபசரிப்பு உண்டு. உடன்பிறந்தவர்களால் பயனில்லை. பணியில் கவனம் தேவை.

கும்பம்:

தன வரவு கூடும் நாள். நீண்ட பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அதே நேரத்தில் பெற்றோர் வழியில், பிள்ளைகள் வழியில் செலவுகள் ஏற்படலாம். வெளியூர் பயணத்தில் கவனம் தேவை.

மீனம்:

மகிழ்ச்சி பொங்கும் நாள் இன்று. பணியிடம், குடும்பம் என அனைத்து இடங்களிலும் மனநிறைவோடு இருப்பீர்கள். வேண்டியதை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூரிலிருந்து உறவினர்கள் இல்லம் தேடி வரலாம். 

Tags: horoscope rasipalan jithidam jothidam horoscope today

தொடர்புடைய செய்திகள்

தேனி : சுற்றுலா மட்டுமல்ல பக்தியும்தான்! சுருளி அருவிக்கு இன்னொரு அடையாளமும் இருக்கு..!

தேனி : சுற்றுலா மட்டுமல்ல பக்தியும்தான்! சுருளி அருவிக்கு இன்னொரு அடையாளமும் இருக்கு..!

திருப்பதி உண்டியல் காணிக்கை: நீண்ட இடைவெளிக்கு பின் ரூ.2 கோடியை தாண்டியது!

திருப்பதி  உண்டியல் காணிக்கை: நீண்ட இடைவெளிக்கு பின் ரூ.2 கோடியை தாண்டியது!

Tamil Nadu Melmaruvathur : வானதி சீனிவாசன் குறிப்பிட்ட மேல்மருவத்தூர் கோயிலில் பெண்கள் வழிபாடு வந்தது எப்படி?

Tamil Nadu Melmaruvathur : வானதி சீனிவாசன் குறிப்பிட்ட மேல்மருவத்தூர் கோயிலில் பெண்கள் வழிபாடு வந்தது எப்படி?

முதல் வழிபாட்டு சிலை; பொக்கிஷமாய் பாதுகாக்கும் மக்கள்!

முதல் வழிபாட்டு சிலை; பொக்கிஷமாய் பாதுகாக்கும் மக்கள்!

காஷ்மீரில் ரூ.33 கோடி செலவில் ஏழுமலையான் கோயிலுக்கு அடிக்கல்!

காஷ்மீரில் ரூ.33 கோடி செலவில் ஏழுமலையான் கோயிலுக்கு அடிக்கல்!

டாப் நியூஸ்

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!