மேலும் அறிய

Sani peyarchi 2023 Palangal: எந்த ராசிக்கு சிக்கல்.. எந்த ராசிக்கு அமோகம்... 2023-ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சி எப்படி இருக்கும்?

Sani peyarchi 2023 Palangal in Tamil: 2023ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கத்தில் சனிபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயரும் நிலையில் ஒவ்வொரு ராசிக்கும் பலன்கள் எப்படி இருக்கும் எனப் பார்க்கலாம்.

வரும் சுபகிருது ஆண்டு திருக்கணித பஞ்சாங்கத்தின்படி தை 3ஆம் தேதி அதாவது 2023ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு சனி பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். சூரிய பகவானின் புத்திரரான சனி பகவான் நம் வாழ்வில் நாம் செய்யும் நற்செயல்கள், தீய செயல்களுக்கு ஏற்றார் போல் நன்மை தீமைகளை வழங்கக்கூடியவர்.

அந்த வகையில் அடுத்த இரண்டரை ஆண்டுகள் ஒவ்வொரு ராசிக்கும் சனிப்பெயர்ச்சி பலன்கள் எப்படி இருக்கும் எனப் பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்கு இந்த ஆண்டு பணி உயர்வு, திருப்தி, சந்தோஷம் என எல்லா வித ஆசைகளும் இந்த சனிப்பெயர்ச்சியில் நூறு சதவீதம் நிறைவேறும். பணி உயர்வோடு இடமாற்றம் வந்தால் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளுங்கள். முக்கியமான கடன் ஒன்று அடையக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது. உங்களை விட்டு நோய்கள் அகலும். மகிழ்ச்சியாக இருங்கள்.

ரிஷபம்

இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சியில் ரிஷப லக்னத்துக்கு தொழிலில் பிரம்மாண்ட வளர்ச்சி ஏற்படும். இருக்கும் தொழிலில் நிறைய கஷ்டப்பட்டு பணம் சேர்க்கக்கூடிய அம்சங்கள் உள்ளது. உங்கள் தொழிலில் நீங்கள் பாகுபலியாகவும் ராஜாவாகவும் இருக்கப்போகிறீர்கள்.

மாமியார் உடல்நிலை குறித்து கவனமாக இருங்கள். பொருளாதாரத்தில் ஏற்றம் இருக்கும். எதிரிகளின் தொல்லை கண்டிப்பாக இருக்கும். எனவே குல தெய்வ வழிபாட்டை தவறாமல் செய்யுங்கள்.

மிதுனம்

மிதுனத்துக்கு சபாஷ் என சொல்லக்கூடிய அருமையான தருணங்கள் இந்த சனிப்பெயர்ச்சியில் நடக்க உள்ளது. நீங்கள் படாத கஷ்டம், அவமானம், துக்கம் இல்லை. இந்த சனிப்பெயர்ச்சியில் இவை அனைத்தையும் விட்டு வெளியே வந்துவிடுவீர்கள். வெளிநாடு பிரயாணம் மேற்கொள்ளப்படும் வாய்ப்புகள் உள்ளது.

குலதெய்வத்தின் துணை பக்கபலமாக இருக்கும். பூர்வீக சொத்து கை வந்து சேரும். முன்னோர்களின் ஆசியால் எல்லா பிரச்னைகளும் தவிடுபொடியாகக் கூடிய வாய்ப்புகள் உள்ளது 100 சதவீதம் உள்ளது.

கடகம்

கடக ராசிக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அடுத்த இரண்டரை ஆண்டுகள் தொடங்கப்போகிறது. மூன்று நட்சத்திரங்களில் பயணம் செய்யும்போது மூன்று விதமான கெடு பலன்கள் நடக்கும். இதில் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான். எதையும் எதிர்பார்க்காமல் இருங்கள். கடக ராசிக்காரர்கள் முடிந்தவரை அமைதியாக இருங்கள். வாயைத் திறந்து ஒரு விஷயம் பேசினால் அந்த இடத்தில் அவமானம் ஏற்பட வாய்ப்புள்ளது. எச்சரிக்கை.

திடீர் அதிர்ஷ்டம் ஏற்படலாம். எதிர்மறையான மாற்றங்களும் ஏற்படலாம். வாகனங்களில் கவனமாக செல்லுங்கள். அம்மா - அப்பாவுக்கு பாதபூஜை செய்யுங்கள். அதுவே உங்களுக்கு நன்மை பயக்கலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்கு சுய தொழில் செய்யக்கூடிய பாக்கியத்தை சனி பகவான் இந்த ஆண்டு நடத்தி வைப்பார். அடுத்த இரண்டரை ஆண்டு காலம் பலவிதமான புதிய தொழில்களை நீங்கள் முயற்சிக்கலாம். வண்டி வாகனங்களை வாங்கிக் குவிக்கலாம். இடமாற்றம், தொழில் மாற்றம் ஏற்படலாம். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் ஆகும். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும்.

முதல் திருமணத்தில் பிரச்னை ஏற்பட்டவர்களுக்கு இரண்டாம் திருமணம் நடக்கும் வாய்ப்புகள் உண்டு. திருப்தி, சந்தோஷம், கௌரவம் என அனைத்தும் கிடைக்கப்பெற்ற அடுத்த இரண்டரை ஆண்டுகள் சிறப்பாக இருக்கும்.

கன்னி

இனிமேல் எனக்காக மட்டுமே உழைக்கப் போகிறேன் எனும் எண்ணம் உங்களுக்கு ஏற்படும். புதிய முயற்சிகள் கைகூடும். எல்லா விஷயங்களிலும் போட்டி உணர்வு மேலோங்கி இருக்கும், அதனால் நீங்கள் பணம் சம்பாதிக்கும் பாக்கியத்தைப் பெறுவீர்கள். அரசு உத்தியோக வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பூர்வீக சொத்துக்களில் உள்ள பிரச்னைகள் நிவர்த்தியாகும். புது சொத்து வாங்கி வீடு கட்டுவீர்கள்.

இல்லையென்றால் இருக்கும் இடத்தை பெரிது செய்வீர்கள். எல்லாவிதமான நற்பலன்களும் உண்டு. கணவன்மார்கள் மனைவிக்கு கொஞ்சம் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். சண்டை, சந்தோஷம் எல்லாம் இருக்கும். அடுத்த இரண்டரை ஆண்டு உங்களுக்கு ஒரு முழு நீள ஆக்‌ஷன் படம் போல் இருக்கும். உடல்நிலை பற்றி கவனமாக இருங்கள். முனீஸ்வரனை வழிபடுவது கைகொடுக்கும். 

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் கைகூடும். மணப்பூர்வமான சந்தோஷம், குழந்தை பாக்கியம் உண்டாகும். கலப்புத் திருமணம் செய்யும் வாய்ப்பு கைகூடும். மணவாழ்வில் புரிதல் ஏற்படும். உடல்நிலை பாதிப்புகளில் இருந்து வெளியே வரும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நீங்களே வேண்டாமென்று சொன்னாலும் பெரிய பதவி ஒன்று உங்களை வந்து சேரும் வாய்ப்பு உள்ளது. வேலை மாற்றம், இடமாற்றம் ஏற்படும்.

புதிய வீடு, வாகனம் வாங்குவது தொடங்கி புதுமனை புகுவிழா நடத்தும் அளவுக்கு இந்த இரண்டரை ஆண்டுகள் அமோகமாக இருக்கும். எல்லா கடமைகளையும் முடித்துவிடுவீர்கள், மகிழ்ச்சியாக இருங்கள்.

விருச்சிகம்

பலவிதமான நன்மைகள் நடக்கும். ஆனால் முதல் விஷயம் நீங்கள் முதலில் ஊரை விட்டு வெளியேற வேண்டும். இரும்பு சார்ந்த அல்லது அறிவுரை சொல்லக்கூடிய தொழில்களில் ஈடுபடுங்கள், சிறப்பாக அமையும். வண்டி வாகனம், வீடு வாங்கும் சந்தர்ப்பங்கள் அமையும். உடல்நிலையில் மிக கவனமாக இருங்கள்.

தனுசு

எல்லாவிதமான முயற்சிகளும் தத்ரூபமாக நடக்கும். ஜனவரி தொட்டதும் முதல் விஷயமாக இடமாற்றம் நடக்கும். ஆன்லைன் மூலம் சேவையாற்றும் தொழிலில் ஈடுபடத் தொடங்குவீர்கள். சகோதரர்களிடையே உள்ள பிரச்னைகள் நிவர்த்தி ஆகும். அவர்களது உடல்நிலையில் கவனமாக இருங்கள். பங்குச்சந்தையில் வெற்றி பெறும் அம்சங்கள் நிறைய உள்ளது. மூக்கு - தொண்டை - வாய் சம்பந்தப்பட்ட பிர்ச்னைகளில் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் கடந்த இரண்டரை ஆண்டுகளாக கொரோனா, ஜென்ம சனி பாதிப்புகள் வாட்டி வதைத்திருக்கும். இப்போது உங்கள் ராசியிலிருந்தும் லக்னத்திலிருந்தும் இரண்டாம் இடத்துக்கு சனி பகவான் பெயர்ச்சி அடையப்போகிறார். இதனால் முக்கியமாக காரியங்கள் நடந்தேறும்.ஆனால் உங்கள் பேச்சில் கவனம் தேவை. தேவையே இல்லாமல் சண்டை சச்சரவுகளில் அபாரமான பேச்சு வார்த்தை ஏற்படும். அதை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

மத்தபடி எந்த விஷயம் நீங்கள் செய்தாலும் அது 100 சதவீதம் நன்றாக இருக்கும். பல வழிகளில் பணம் உங்களை வந்து சேரும். சேமிப்புகளில் இருந்து பணம் வரும். உங்கள் உடல்நிலையிலும் வாழ்க்கைத் துணையின் உடல்நிலையிலும் கவனமாக இருங்கள். பெரிய பாதிப்புகள் ஏதும் வராது. தைரியமாக இருங்கள்

கும்பம்

ஜென்மத்தில் வரும் சனிபகவான் உங்களுக்கு ஏராளமான நல்ல வாய்ப்புகளைத் தருவார். கால புருஷர் தத்துவத்தின்படி 11ஆவது இடம். உங்களுக்கு சனிபகவான் நல்லது செய்யவில்லை என்றால் வேறு எவருக்கும் நல்லது செய்ய முடியாது. அபாரமான திருப்தி கிடைக்கும்.

புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உடல்நிலையில் மட்டும் கவனமாக இருங்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் எண்ணெய் தேய்த்துக் குளியுங்கள். ஜென்ம சனியில் இருந்து விடுபடும் வாய்ப்பு அபாரமாக உள்ளது. அடுத்த இரண்டரை ஆண்டுகள் கடன் அடையும். நோய் விலகும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். காதல் கைகூடும். நல்லதாகவே நடக்கும்.

மீனம்

நிறைய விஷயங்களுக்காக செலவு செய்ய நேரிடும். சேமிப்பு அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. ஆனால் உங்கள் சேமிப்பு குறித்து வெளியே யாருக்கும் சொல்லாதீர்கள். நீங்கள் யதார்த்தமாக தெரிவித்தால் அது வேறு வகையாக மாறக்கூடும். ரகசியம் பேணுங்கள். ரகசியம் பேணும் அளவுக்கு நீங்கள் வெற்றி பெறலாம்.

வெளிநாட்டில் குடியுரிமை, நிலம் வாங்கும் அம்சங்கள் உண்டு. உங்கள் ஊரை விட்டு வெளியேறினால் அனைத்தும் நன்மை பயக்கும். அரங்கநாதரை வழிபடுங்கள். அனைத்தும் நல்லதாகவே நடக்கும்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா தாக்கல் - தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை - ஸ்டாலின்
CM Stalin: மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா தாக்கல் - தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை - ஸ்டாலின்
T20 Worldcup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?
T20 Worldcup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?
Breaking News LIVE: மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார் முதலமைச்சர்
Breaking News LIVE: மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார் முதலமைச்சர்
Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

T20 World Cup Final :  இறுதிப்போட்டியில் இந்தியா..வீழ்த்துமா தென்னாப்பிரிக்கா?மகுடம் சூடப்போவது யார்?Dharmapuri Gender Reveal Issue : வசமாக சிக்கிய கும்பல்..LEFT&RIGHT வாங்கிய அதிகாரிBussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா தாக்கல் - தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை - ஸ்டாலின்
CM Stalin: மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா தாக்கல் - தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை - ஸ்டாலின்
T20 Worldcup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?
T20 Worldcup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?
Breaking News LIVE: மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார் முதலமைச்சர்
Breaking News LIVE: மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார் முதலமைச்சர்
Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
Fire Accident: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 4 பேர் உயிரிழப்பு, மீட்பு பணிகள் தீவிரம்
Fire Accident: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 4 பேர் உயிரிழப்பு, மீட்பு பணிகள் தீவிரம்
Kalki 2898 AD Collection: ஹாலிவுட் ரேஞ்சில் வெளியான 'கல்கி 2898 AD' - இரண்டாம் நாள் வசூல் என்ன?
Kalki 2898 AD Collection: ஹாலிவுட் ரேஞ்சில் வெளியான 'கல்கி 2898 AD' - இரண்டாம் நாள் வசூல் என்ன?
Kalki Movie Leaks : பிட்டு பிட்டாக படத்தை வெளியிட்ட நெட்டிசன்ஸ்! கலக்கத்தில் கல்கி படக்குழு!
Kalki Movie Leaks : பிட்டு பிட்டாக படத்தை வெளியிட்ட நெட்டிசன்ஸ்! கலக்கத்தில் கல்கி படக்குழு!
Royal Enfield guerrilla 450: போடு வெடிய! ராயல் என்ஃபீல்டின் கெரில்லா 450 மாடல் பைக் எப்போது வருகிறது?
Royal Enfield guerrilla 450: போடு வெடிய! ராயல் என்ஃபீல்டின் கெரில்லா 450 மாடல் பைக் எப்போது வருகிறது?
Embed widget