மேலும் அறிய

Rasi Palan Today August 23: ரிஷபத்துக்கு வேண்டும் தன்னம்பிக்கை; மிதுனத்துக்கு அதிகமாகும் ஆர்வம்... உங்களுக்கு எப்படி?

Rasi Palan Today August 23: இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 23.08.2022

நல்ல நேரம் :

காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை

கௌரி நல்ல நேரம் :

காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை

மாலை 7.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை

இராகு :

மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

குளிகை :

மதியம் 12.00 மணி முதல் மாலை 1.30 மணி வரை

எமகண்டம் :

காலை 9.00 மணி முதல் மதியம் 10.30 மணி வரை

சூலம் - வடக்கு

மேஷம் :

மேஷ ராசி நேயர்களே,

எந்தவொரு செயல்பாட்டிலும் பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கல்வி தொடர்பான ஆலோசனைகளின் மூலம் தெளிவு பிறக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றி கொள்வதற்கான சூழல் அமையும். தேர்ச்சி நிறைந்த நாள்.

ரிஷபம்:

ரிஷப ராசி நேயர்களே,

தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில உதவியின் மூலம் மாற்றம் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும். பத்திரம் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வுடன் செயல்படவும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் பயனற்ற விவாதங்களை குறைத்து கொள்ளவும்.  உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

மிதுனம் :

மிதுன ராசி நேயர்களே,

புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதில் சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். சமூக பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்து கொள்வது நல்லது. ஆர்வம் நிறைந்த நாள்.

கடகம் :

கடக ராசி நேயர்களே,  

பணிபுரியும் இடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். இனம்புரியாத சில சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தாய்மாமன் வழியில் அனுகூலம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். கடன் சார்ந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். ஆக்கம் நிறைந்த நாள்.

சிம்மம்:

சிம்ம ராசி நேயர்களே,

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். இலக்கியம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோக மாற்றம் தொடர்பான விஷயங்களில் தெளிவு பிறக்கும். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். எதிர்காலம் சார்ந்த முதலீடுகள் மேம்படும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.

கன்னி :

கன்னி ராசி நேயர்களே,

இணையம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். மனை சார்ந்த விஷயங்களில் ஆதாயம் உண்டாகும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வாழ்க்கை துணைவருடன் மகிழ்ச்சியான சூழல் அமையும். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த காலதாமதம் நீங்கும். ஆதாயம் நிறைந்த நாள்.

துலாம் :

துலாம் ராசி நேயர்களே,

சிறு மற்றும் குறுந்தொழில் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும். இளைய உடன்பிறப்புகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சிறு தூர பயணங்களின் மூலம் அலைச்சலும், புத்துணர்ச்சியும் உண்டாகும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த தேடல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறைமுக திறமையை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். நன்மையான நாள்.

விருச்சிகம் :

விருச்சிக ராசி நேயர்களே,

உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். பூர்வீக சொத்துக்களில் அலைச்சல்கள் உண்டாகும். மறதி தொடர்பான பிரச்சினைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.

தனுசு :

தனுசு ராசி நேயர்களே,

வாழ்க்கை துணைவருடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் மேம்படும். பாராட்டுகள் நிறைந்த நாள்.

மகரம் :

மகர ராசி நேயர்களே,

பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்துடன் சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். காது தொடர்பான பிரச்சினைகள் குறையும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் மேம்படும். வர்த்தகம் சார்ந்த பணியில் இருப்பவர்கள் புதிய முதலீடுகளில் கவனத்துடன் செயல்படவும். செல்வாக்கு மேம்படும் நாள்.

கும்பம்:

கும்ப ராசி நேயர்களே, 

நெருக்கமானவர்களிடம் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். மனதிலிருக்கும் கருத்துகளை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். சுபச்செய்திகளின் மூலம் விரயங்கள் உண்டாகும். எதிர்ப்புகள் விலகும் நாள்.

மீனம்:

மீன ராசி நேயர்களே,

பூர்வீக சொத்துக்களில் மாற்றம் ஏற்படும். தொழில் நிமிர்த்தமான பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோக பணிகளில் உள்ள நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் உண்டாகும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். விவேகமான செயல்பாடுகள் முன்னேற்றத்தை உருவாக்கும். அசதிகள் குறையும் நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
Embed widget