மேலும் அறிய

Guru Peyarchi 2023: ஏற்றமும், மாற்றமும் தரும் குருபெயர்ச்சி...! மேஷம் முதல் மீனம் வரை..! யாருக்கெல்லாம் என்ன பலன்கள்..?

Guru Peyarchi 2023 Palangal: குருபகவான், இந்தாண்டு மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு (நாளை 22ம் தேதி  சனிக்கிழமை) பெயர்ச்சி அடைகிறார்.

குருப் பெயர்ச்சி பலன்கள் 2023

 குரு பெயர்ச்சியால் பலரின் வாழ்வில் நல்ல மாற்றங்கள் நிகழ இருக்கிறது. நவகிரகங்களில் குரு என்பவர் பிருகஸ்பதி என்று அழைக்கப்படுகிறார். ஒருவரின் வாழ்க்கையில் செல்வ வளங்களையும் யோகங்களையும் வழங்குபவராக பார்க்கப்படுகிறார் குரு பகவான். ஜோதிடத்தின்படி, ஒருவரின் ஜாதகத்தில் தோஷங்கள், பிரச்சனைகள் இருந்தாலும் அவருக்கு குருவின் பார்வை சரியாக இருந்தால் அவருக்கு தீமைகள் குறைந்து நன்மைகள் நடக்கும் என்று சொல்லப்படுகிறது. ஒருவரின் தொழில், வேலை, பணம் மற்றும் லாபம் ஆகியவைகளுக்கு குருவே காரணமாக அமைகிறார்.

கிரகங்களின் சுழற்சியே மனித வாழ்க்கையின் வளர்ச்சி என்பதும், கிரகப் பெயர்ச்சியாலே நம் செய்யும் செயல்கள் நல்லவிதமாக முடிவதும், தவறாக போவதும் நடக்கும் என்று சொல்லப்படுகிறது. அப்படி, இந்தாண்டு நம் வாழ்வில் என்னென்ன மாற்றஙகள் நிகழும்? தொழில் சிறக்குமா? புதிய முயற்சிகள் வெற்றி பெறுமா? லாபம் கிடைக்குமா? புதிதாக தொழில் தொடங்கும் திட்டத்தில் இருப்பவர்கள், தொடங்கலாமா? இந்தாண்டு நோய் இல்லாமல் நிம்மதியானதாக அமையுமா? இந்தாண்டு நமக்கு எப்படி இருக்கும்? நம் பொருளாதார நிலை ஏற்றம் காணுமா?  என்று பல கேள்விகளுடன் தமிழ் புத்தாண்டை வரவேற்பவர்களுக்கு, ராசிகாரர்களுக்கு குருப்பெயர்ச்சி பலன்கள் (Guru Peryarchi 2022 Palangal) இதோ!

குருபகவான், இந்தாண்டு மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு (நாளை 22ம் தேதி  சனிக்கிழமை) பெயர்ச்சி அடைகிறார்.

மேஷம்:

விவேகத்துடன் செயல்படும் மேஷம் ராசி அன்பர்களே!

மேஷ லக்ணத்தில் குரு வருவதால் பல நன்மைகள் உண்டாகும். நல்லது நடக்கும்.செல்வம் செழிப்பு ஏற்படும். காதல் பூக்கும். சுப நிகழ்ச்சிகள் நிகழ்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. குழந்தை வரம் கிடைக்கும்.

பெரியவர்களின் அனுமதியின்றி செய்ய கூடிய எந்த காரியங்களும் பெரிதாக நன்மைகள் கிடைக்காது. தானம், தர்மம் செய்ய வேண்டும். ஏராளமான நல்லது நடைபெறும். வீட்டில் பெரியவர்களின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும். மற்றபடி, நினைத்த காரியங்கள் நல்லதாகவே நடக்கும். மாணவர்கள் தேர்வில் வெற்றி நிச்சயம். நல்லவர்களின் தொடர்பு கிடைக்கும். பெண்களுக்கு முன்னேறம் உண்டு. தொழில் செய்பவர்கள் நிபுணர்களின் அறிவுரையின்றி முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும்.

அப்படியும், எந்த பாதிப்புகளும் நடக்க கூடாது என்று எண்ணுபவர்கள் சிவ பெருமான் ஆலயத்திற்கு சென்று பசு நெய் தானமாக கொடுக்க வேண்டும்.   

ரிஷபம்:

நினைத்ததை சாதிக்கும் ரிஷப ராசி அன்பர்களே!

வீடு கட்டும் வாய்ப்பு ஏற்படும். பிரம்மாண்டமாக, அதிகம் செலவழித்து கல்யாணம் செய்வீர். கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். உடல்நலன் மேம்படும். சிலருக்கு, தூக்கம், கால் வலி உள்ளிட்ட பிரச்சனைகள் இருப்பவர்கள் குரு பார்வையினால் பிரச்சனையில் இருந்து விடுபடக் கூடிய வாய்ப்புகள் அதிகம். வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் இருக்கு. ஐரோப்பியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லக் கூடிய வாய்ப்பு உண்டு. படிப்பு செலவுகள் அதிகரிக்கும். நல்ல செலவுகள் இருக்கும். மாணவர்கள் மாலையில் தங்களது படிக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். முதலீடு அதிகரிக்கும். பணி மாற்றம் ஏற்படும். மகிழ்ச்சியாக ஆண்டாக இருக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு. வெற்றி உண்டு. கடின உழைப்பிற்காக ஊதியம் கிடைக்கும். 

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் வழிபடுவது ஏற்றத்தை கொடுக்கும். வீட்டிற்கு அருகில் உள்ள அம்மன் கோயிலுக்கு சென்று வரலாம். 

மிதுனம்:

பிறர் நலனில் அக்கறை கொள்ளும் மிதுன ராசி அன்பர்களே!

நிறைய நன்மைகள் நடக்கும். கெட்டி மேளம் கொட்ட கூடிய காலம். உயர்கல்வியில் வெற்றி.முனைவர் பட்டம் பெறும் யோகம் உண்டு. எதிர்பாரா விசயங்கள் நிறைய நடக்கும். எனக்கு எதிரியே கிடையாதுயா என்று சொல்லக் கூடிய அளவுக்கு நல்லவர்களே உங்களைச் சுற்றி இருப்பார்கள். வீடு, நிலம் சார்ந்த விற்பனை மூலம் பணம் கிடைக்கும். ஆதரவு தேடி வரும். பிரச்சனைகள் தீரும். 

கடகம்:

கடைமை தவறாத கடக ராசி அன்பர்களே!

வேலை மாற்றம் கிடைக்கும். வெளிநாடு நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கவனம் தேவை. குழப்பம் இருக்கும். பணி உயர்வு கிடைக்கும். மே மாதத்திற்கு பிறகு நல்ல மாற்றங்கள் உண்டு. தொழிலில் கவனம் தேவை. 

சிம்மம்:

தெளிவான சிந்தனைக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!

சிம்ம ராசிக்காரர்களுக்கு 9-ஆம் இடத்தில் குரு வருவது நல்ல யோகம் தரக்கூடியது. கிடைக்காமல் இருக்கும் பூர்விக சொத்துக்கள் கிடைக்கும். வீட்டில் உள்ள பெரியவ்ர்களின் உடல்நலனில் அதிக கவனம் தேவை. வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் உண்டு. நன்மைகள் நிறைய நடக்கும். பக்தி உள்ளவர்களாக மாறிவிடுவீர்கள். யாரையும் பிடிக்காது என்று சொல்லக் கூடிய அளவிற்கு நிலமை மாறிடும். ஏற்றத்தை கொடுக்கும் ஆண்டாக இது அமையும். நல்ல மாற்றங்கள் ஏற்படும் காலம். மன மலர்ச்சி ஏற்படும். மன மாற்றம் ஏற்படும்.

சிவ பெருமானுக்கு பசு நெய் தானமாக கொடுப்பது நல்லது.

கன்னி:

எதையும் வெளிப்படையாக சொல்லும் கன்னி ராசி அன்பர்களே!

இது உங்களுக்கான மோசமான நேரம். ஆனால், பல நன்மைகள் உண்டாகும். தொழில் முன்னேற்றம் அடையும். பிரச்சனைகளை எதிர்கொள்ளும் திறன்மிக்கவராக இருப்பீர்கள். எதிர்பாரா வெற்றிகள் இருக்கும். அமெரிக்க, கலிஃபோர்னியா செல்லும் வாய்ப்புகள் மிக மிக அதிகமாகும். எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருந்தால் பல்வேறு வெற்றிகள் உங்களுக்கு உண்டு.

துலாம்:

யோசித்து செயல்படும் துலாம் ராசி அன்பர்களே!

திருமணம் யோகம் உண்டு. இரண்டாம் குழந்தை வரம் கிட்டும். பெரியவங்களை கவனமாக பார்த்துக்கொள்ளவும். மகிழ்ச்சி ஏற்படும். நட்புகள் மலரும். கணவன் - மனைவி இடையே நீடித்த பிரச்சனைகள் நீங்கும். மன நிம்மதி உண்டு. நரசிம்மரை வழிபடுவது நல்லது. 

திருமணம் யோகம் உண்டு. இரண்டாம் குழந்தை வரம் கிட்டும். பெரியவங்களை கவனமாக பார்த்துக்கொள்ளவும். மகிழ்ச்சி ஏற்படும். நட்புகள் மலரும். கணவன் - மனைவி இடையே நீடித்த பிரச்சனைகள் நீங்கும். மன நிம்மதி உண்டு. நரசிம்மரை வழிபடுவது நல்லது. 


விருச்சிகம்:

இன்னல்களை புன்னகையுடன் எதிர்கொள்ளும் திறன் படைத்த விருச்சிக ராசி அன்பர்களே!

தேவையான கடன் கிடைக்கும். நீட் தேர்வு தேர்ச்சி பெறும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. பண வரவு உண்டு. வேலைகள் முக்கியத்துவம் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். பல்வேறு நன்மைகள் நடக்க இருக்கிறது.

அண்ணாமலையாரை வழிபடுவது ஏற்றத்தை கொடுக்கும்.

தனுசு:

எல்லோரும் வளமுடன் இருக்க வேண்டும் என்று எண்ணம் கொண்ட தனுசு ராசி காரர்களே!

பிரம்மாண்டமான காலமிது. காதல், திருமணம் வாய்ப்புகள் உண்டு. உடல்நலன் மேம்படும். நினைத்ததெல்லாம் நடைபெறும் காலம். குழந்தை ப்ராப்தம் ஏற்படும். அன்பளிப்புகள் நடைபெறும். தொழில் வளர்ச்சி உண்டு. பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டு. 

மகரம்:

விடாமுயற்சியுடன் அனைத்தையும் சாத்தியப்படுத்தும் மகர ராசி அன்பர்களே!

ஆனந்தம் பெருகும். அம்மாவின் ஆதரவோடு நல்ல செயல்களை செய்யவும்.அம்மாவின் உடல்நிலையில் கவனம் முக்கியம். ஏற்றம் உண்டாகும். நினைத்தவைகள் நடக்கும். பொருளாதராம் ஏற்றம் பெறும். உடற்பயிற்சி செய்ய வேண்டும்.  பெண்களுக்கு அம்மா வீட்டில் இருந்து சீதனங்கள் கிடைக்கும். நாமக்கல் ஆஞ்சிநேயரை வழிபடுவது நல்லது. 

கும்பம்:

வலிமையும் மறு உருவமாய் திகழும் கும்ப ராசி அன்பர்களே!

அய்யோ, பாவம் என்ற காலகட்டம் இருந்தாலும்,கொஞ்ச காலங்களில் எல்லாம் சரியாகிவிடும். லைம்லைட் கிடைக்கும். தங்கமானவர்ங்க’ என்று பாராட்டப்படுவீர். நட்பு மேம்படும். தொழில் துறையில் உள்ளவர்களுக்கு இது தங்கமான காலகட்டம். எதிர்பார்க்காத பல நன்மைகள் நடக்கும். மகிழ்ச்சி பொங்கும். 

வாமன ரூப கிருஷ்ணனை, பழனி முருகன் உள்ளிட்ட கடவுளை வழிபட வேண்டும்.

மீனம்:

இனிமையான இதயம் கொண்ட மீன ராசி அன்பர்களே!

பொன்,பொருள், ஆபரண சேர்க்கை உண்டு. விவசாயிகளுக்கு தானிய உற்பத்தி பிரம்மாண்டமாக இருக்கும். குழந்தைகள் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும். ஆன்மீக திருத்தலங்களுக்கு செல்வது நன்மைகளை சேர்க்கும். பசு நெய் தானம் செய்ய வேண்டும். மகிழ்ச்சி கிடைக்கும்.ஏற்றம் பெருகும். எல்லாம் நல்லவைகளே நடக்கும்.


 

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Gold Rate Jan.5th: பாத்தியா உன் வேலைய காட்டிட்டியே.! இன்று ஒரே நாளில் ரூ.1,280 உயர்ந்த தங்கம்; வெள்ளியும் அதிரடி உயர்வு
பாத்தியா உன் வேலைய காட்டிட்டியே.! இன்று ஒரே நாளில் ரூ.1,280 உயர்ந்த தங்கம்; வெள்ளியும் அதிரடி உயர்வு
ஓய்வூதிய திட்டம்: ஜாக்டோ ஜியோவின் அடுத்த அதிரடி! 2026-ல் புதிய அரசாணை, 10% பங்களிப்பு ரத்து!
ஓய்வூதிய திட்டம்: ஜாக்டோ ஜியோவின் அடுத்த அதிரடி! 2026-ல் புதிய அரசாணை, 10% பங்களிப்பு ரத்து!
Embed widget