மேலும் அறிய

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்: தமிழ்நாட்டில் இன்று முதல் அனைத்து கோயில்களும் திறப்பு!

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் புனித தீர்த்தங்களில் நீராட பக்தர்களுக்கு தடை விதித்த கோயில் நிர்வாகம், தரிசனத்திற்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று முதல் அனைத்து கோயில்களும் திறக்கப்பட உள்ள நிலையில், பல முக்கிய திருத்தலங்களில்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக கோயில்கள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூடப்பட்டு, பக்தர்கள் வழிபாடு செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. ஆனால், கோயில்களில் தினமும் வழக்கமாக நடைபெறும் பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தன. கோயில்களில் அனுமதிக்கப்படாததால் பக்தர்கள் மிகுந்த கவலையில் இருந்தனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்ததை தொடர்ந்து, ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வந்தன. இந்த தளர்வில் கோயில்களும் திறக்க அனுமதி வழங்கப்பட்டன. அதன்படி, கடந்த வாரம் சில மாவட்டங்களில் கோயில்கள் திறக்கப்பட்டன. கடந்த 2ஆம் தேதி தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கு ஒரே மாதிரியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தளர்வுகளின்படி, தமிழ்நாட்டில் நாளை முதல் அனைத்து கோயில்களும் திறக்கப்பட உள்ளது. இதனால், தூய்மை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

திறக்கப்படுகிறது பழனி முருகன் கோவில்... பக்தர்களுக்கான விதிமுறைகளும் அறிவிப்பு - விவரம்!

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் உள்பட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் திறப்படுவதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோயில்களில் தூய்மை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கோயில்களில் பணி செய்யும் பணியாளர்கள் கோயில்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல், மசூதிகள், கிறிஸ்துவ ஆலயங்களில் வழிபாடு நடத்துவதற்கு உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.


முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்: தமிழ்நாட்டில் இன்று முதல் அனைத்து கோயில்களும் திறப்பு!

நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோயில், தஞ்சை பெரிய கோயில், திருச்சி ஸ்ரீரங்கம் கோயில், நாகையில் உள்ள நாகூர் தர்கா மற்றும் வேளாங்கண்ணி பேராலயத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வழிபட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கோயிலில் 5ஆம் தேதி முதல் காலை 6-12.30 மற்றும் மாலை 4-8 வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோயிலில் நடைபெறும் காலபூஜை, அபிஷேகங்களை காண பக்தர்களுக்கு அனுமதியில்லை. மேற்கு மற்றும் வடக்கு நுழைவுவாயில் வழியே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். கோயிலில் தரிசனம் செய்தபின் எந்த ஒரு இடத்திலும் உட்கார பக்தர்களுக்கு அனுமதியில்லை. கோயிலுக்குள் தேங்காய், பழம் கொண்டு வரவும், அர்ச்சனை செய்வதற்கும் அனுமதியில்லை.

மேலும், ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் புனித தீர்த்தங்களில் நீராட பக்தர்களுக்கு தடை விதித்த கோயில் நிர்வாகம், தரிசனத்திற்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளது.

தேனி: 2ஆயிரம் ஆண்டு பழமை.. கண்ணகி சிலை.. மெய்சிலிர்க்க வைக்கும் மேலச்சொக்கநாதர் வரலாறு!

 

தலைப்பு செய்திகள்

Rasi Palan Today (22-09-2026): கன்னி ராசிக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு? - இன்றைய முழு பலன்கள் இதோ!
Rasi Palan Today (22-09-2026): கன்னி ராசிக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு? - இன்றைய முழு பலன்கள் இதோ!
விவசாயிகளுக்கு குஷி.! எதிர்பார்த்த சூப்பர் அறிவிப்பு- ஒரே ஒரு மெசேஜ் போதும்- தமிழக அரசு அதிரடி
விவசாயிகளுக்கு குஷி.! எதிர்பார்த்த சூப்பர் அறிவிப்பு- ஒரே ஒரு மெசேஜ் போதும்- தமிழக அரசு அதிரடி
Rasi Palan Today (21.09.2026): சிம்மத்துக்கு தடங்கல்.. மகரத்துக்கு சிக்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்ல நாளா?
Rasi Palan Today (21.09.2026): சிம்மத்துக்கு தடங்கல்.. மகரத்துக்கு சிக்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்ல நாளா?
Rasi Plan Today (20.09.2026): சிம்மத்துக்கு செலவு.. மீனத்துக்கு லாபம்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு அதிர்ஷ்டமா?
Rasi Plan Today (20.09.2026): சிம்மத்துக்கு செலவு.. மீனத்துக்கு லாபம்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு அதிர்ஷ்டமா?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK : 5 லட்சம் நெல் மூட்டைகள் போச்சு.! சொல் புத்தியும் இல்ல.. சுய புத்தியும் இல்ல- TVK அரசை விளாசிய இபிஎஸ்
5 லட்சம் நெல் மூட்டைகள் போச்சு.! சொல் புத்தியும் இல்ல.. சுய புத்தியும் இல்ல- TVK அரசை விளாசிய இபிஎஸ்
Gem Veeramani : ‘சிக்கிய வீரமணி - சிக்கப்போகும் பெருந்தலைகள்’ அடுத்த கைது யாருடையது..?
‘சிக்கிய வீரமணி - சிக்கப்போகும் பெருந்தலைகள்’ அடுத்த கைது யாருடையது..?
தமிழ்நாட்டில் பரவும் உன்னிக் காய்ச்சல்: உடலில் இந்த புண்ணா? உயிருக்கே ஆபத்து!
தமிழ்நாட்டில் பரவும் உன்னிக் காய்ச்சல்: உடலில் இந்த புண்ணா? உயிருக்கே ஆபத்து!
ரோட்ல சும்மா ஜம்முனு போனுமா?அறிமுகமாகியது Honda CB 500 பைக்
ரோட்ல சும்மா ஜம்முனு போனுமா?அறிமுகமாகியது Honda CB 500 பைக்
Jailer 2 VS Om: ரஜினிக்காக ஒதுங்கிக் கொள்கிறாரா தனுஷ்? தள்ளிப்போகிறதா ஓம் ரிலீஸ்?
Jailer 2 VS Om: ரஜினிக்காக ஒதுங்கிக் கொள்கிறாரா தனுஷ்? தள்ளிப்போகிறதா ஓம் ரிலீஸ்?
ஒரே சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Honda QC3 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Honda QC3 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
Nirmalkumar: ”கேடுகெட்ட கட்சி திமுக” யார் அந்த பவர் செண்டர்? - ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்
”கேடுகெட்ட கட்சி திமுக” யார் அந்த பவர் செண்டர்? - ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்
Iran Vs America: '7 நாட்களில் ஹார்முஸை திறக்க தயார், ஆனால்...'; நிபந்தனையுடன் அமெரிக்காவிற்கு ஈரான் முன்மொழிவு
'7 நாட்களில் ஹார்முஸை திறக்க தயார், ஆனால்...'; நிபந்தனையுடன் அமெரிக்காவிற்கு ஈரான் முன்மொழிவு
Embed widget