மேலும் அறிய

Love Horoscope : லவ்வரோட அவுட்டிங் ப்ளானா? உங்க ராசிக்கான இன்றைய லவ் ஜோசியப் பலன்கள்.. ஜாலியா படிங்க..

Love Horoscope Today in Tamil, August 28th 2022: காதலிக்கும் உங்களுக்குதான் இந்த பிரத்யேக லவ் ஜோசியப் பலன்கள். குறிப்பா மிதுனம் மற்றும் தனுசு ராசி காதலர்கள்தான் முக்கியமா தெரிஞ்சுக்கணும்.

மை டியர் லவ்வர்ஸ்.! எல்லாருக்கும் வணக்கம். இந்த உலகத்துல எத்தனையோ அற்புதமான அதிசயமான விசயங்கள் இருந்தாலும் அதை எல்லாம் நம்மால் பார்க்க முடியும். நொடிக்கு நொடி உணர முடிந்தாலும் இதுவரைக்கும் கண்ணால் பார்க்க முடியாத ஒரே அதிசயம் காதல் தான்.

ஒரு மலையின் உச்சியில் இருந்து ஊற்றெடுத்து வரக்கூடிய ஜுவ நதியைப்போல தான் காதல். அது மலையைக் கடக்க வேண்டும். பாறைகளைக் கடக்க வேண்டும். பள்ளங்களை நிரப்பி நகர வேண்டும். தன்னைச் சார்ந்த அத்தனை ஜீவராசிகளையும் அது அரவணைக்க வேண்டும். பின்னர் தான்  அது அன்பெனும் கடலைச் சேர முடியும். இப்படி உலகத்தை இயக்கும் காதலுக்கான ஜாலி ராசி பலன் இது..

மேஷம் 

லாங் ட்ரைவ் போலானு ரொம்ப நாளா உங்க ப்ளேன்ல இருக்கு. ஆனா உங்க பார்ட்னர் உங்க கூட டைம் ஸ்பெண்ட் பன்ன ரொம்ப ஆசையா இருக்காங்க. இதுல ஜோக் என்னனா பெட்ரோல் விக்கற விலைக்கு பப்ளிக் ட்ராண்ஸ்போர்ட்ல போய்க்கலாம்னு நீங்களே உங்க மனச தேத்திப்பீங்க. எது எப்படியோ  மொத்ததுல உங்களுக்கு யோகமான நாள். 

ரிஷபம்

யாருக்கு பயந்து உங்க லவ் மேட்டர வெளிய சொல்லாம இருந்தீங்களோ, அவங்களே ஒரு லவ்வ சேத்து வெச்சுட்டு வந்து உங்கிட்ட நடந்த எல்லாத்தையும் சொல்லுவாங்க. அதையெல்லாம் நம்பி உங்க லவ் மேட்டர ஓபன் செஞ்சுடாதீங்க. உங்க நிலை ரொம்ப கவலைக்கிடமா மாறிடும். ஜாக்கிரதை. 

மிதுனம் 

உங்கிட்ட இருக்க பேட் ஹேபிட் இது மட்டும் தான். சண்டை போடும்போது கொஞ்சம் கவனமா வார்த்தைகள பயன்படுத்துங்க. உங்ககூட சண்ட போடறது யாரோ உங்களுக்கு வேண்டாதவங்க இல்ல. உங்கள ஊனுருக உயிருருக காதலிக்கறவங்கனு புருஞ்சுக்காங்க. சமாதானம் செய்யறதவிட முக்கியம் கண்ணியமா நடத்துறது. புருஞ்சுக்காங்க. 

கடகம்

கல்யாணத்துக்கு அப்பறம் ரெண்டு பேரும் சேந்து சமைக்கலாம் துவைக்கலாம்னு இப்ப இருந்தே கம்பி கட்டீட்டு இருக்கீங்க. ஆனால் உங்களுக்கு அடுப்பு கூட பத்த வைக்க தெரியாதுனு உங்க லவ்வருக்கு ஏற்கெனவே தெரியும். யூ ஆர் அ வெரி லக்கி பெர்ஷன். லக்கி டே. 

சிம்மம்

நைட்டு என்ன பேசுனோம் ஏது பேசுனோம்னு மறந்து நீங்க யோசுச்சுட்டு இருக்கும்போது, வாட்ஸ் அப் போய் பாத்தா உங்க லவ்வர் உங்கள ப்ளாக் பண்ணி வெச்சுருப்பாங்க. இன்ஸ்டாகிராம்லயும் அதே நிலமைதான். வேற வழியே இல்ல ஜீ-பேல மெசேஜ் அனுப்புவீங்க. ஆனா உப்புசப்பு இல்லாத காரணமா அது இருக்கும். மொத்தத்துல சுமாரான நாள். 

கன்னி 

ஹைவே-ல போற பஸ் மாதிரி உங்க லவ் போய்ட்டு இருக்கும் போது, 'குறுக்க இந்த கௌசிக் வந்தா'ங்கறமாதிரி உங்க ப்ரெண்டே உங்க ஆள உஷார் பண்ண பாப்பாங்க. கண் மூடித்தனமா எல்லாரையும் நம்பீட்டு இருக்காதீங்க. உங்க சைடு இன்னைக்கு அவ்வளவு வீக். 

துலாம்

உங்க லவ்வுல நீங்க ஸ்டாராங்கா நில்லுங்க. அது ரொம்ப முக்கியம். உங்களுக்காகத்தான் அவங்க ரொம்ப தூரத்துல இருந்து வந்து இருக்காங்க. மனச போட்டு நீங்களே குழப்பி மிஸ் பண்ணீடாதீங்க. அவங்கள இன்னும் கொஞ்சம் புருஞ்சுக்க ட்ரை பண்ணுங்க. இன்னும் முயற்சி வேணும். 

விருச்சிகம்

ஒரு ஸாரி சொல்றதால எந்தவிதமான அசம்பாவிதமும் உங்க லவ்வுல நடக்காது. நான் தான் தப்பே செய்யலயேனு வசனம் பேசாம ஸாரி கேளுங்க. உங்கள இன்னும் உங்க லவ்வர்ட்ட நெருங்க வைக்குற ஒரு வார்த்தை அதுதான். பொறுமை ரொம்ப ரொம்ப முக்கியம்.

தனுசு

உங்க குடத்துக்கும் சேர்த்து யாரோ தண்ணி புடுச்சு வெச்ச மாதிரி நோகமா நோம்பி கும்புடுற நாள் உங்களுக்கு. நீங்க ரொம்ப நாளா பேசனும்னு யோசுச்சுட்டு இருந்தத உங்க லவ்வர் அவங்களே பேசி நல்ல முடிவும் சொல்லிடுவாங்க. நீங்க சும்மா ம்ம்ம் மட்டும் சொல்லுங்க போதும். ஹேப்பி டே. 

மகரம் 

காதல பொறுத்த வரைக்கும் நம்பிக்கை ரொம்ப முக்கியம். உங்க லவ்வர் உங்கள நம்பறமாதிரி நீங்களும் அவங்கள நம்பனும். எதுவா இருந்தாலும் அவங்கிட்ட ஓபனா பேசிடுங்க. நீங்களா கேள்வி எழுதி, நீங்களா பதில் எழுதீட்டு இருக்காதீங்க.  இட்ஸ் நாட் குட் ஃபார் ரிலேஷன்ஷிப். அவங்க ஜர்ஜ் பண்ணாதீங்க. அது ரொம்பவே தப்பு. ஸ்டேபுலா இருங்க சரியா. நிதானம் அவசியம். 


கும்பம்

நீங்க மேட்சுக்கு மேட்சா டிரெஸ் செய்யறத பாத்து 'ஆளே இல்ல பெல்லுனு'உங்க ஸிப்லிங் நெனப்பாங்க. அதையெல்லாம் சமாளுச்சுத்தான் ஆகனும். முடுஞ்சா இன்னைக்கு ஒரு மீட்டிங்க போட்டு டைம் ஸ்பெண்ட் பண்ணுங்க. கொஞ்சம் லைட்டா ஃபீல் பண்ணுவீங்க. திருப்தியான நாள். 

மீனம்

மனசுக்கு கஷ்டமா இருந்தா உங்க லவ்வர் கிட்ட பேசுங்க. காம்படேட்டிவ் எக்ஸாமுக்கு படிச்சுட்டு இருக்கறவங்கள டிஸ்டர்ப் செய்ய கூடாதுனு சொல்ற மாதிரி இருந்தீங்கனா, உங்க லவ்வுல நீங்க ஹெவி காம்படிஷன சந்திக்க வேண்டியிருக்கும். ஒரு முப்பது நிமிஷம் பேசிடறதால எதுவும் ஆகாது. ஜஸ்ட் ஒரு மெசேஜ தட்டி விடுங்க. மீச்சத்த உங்க லவ்வர் பாத்துப்பாங்க.

 

தலைப்பு செய்திகள்

Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (08-08-2026): கடகத்துக்கு செலவு.. விருச்சிகத்துக்கு வரவு.. ஆகஸ்ட் 8ம் தேதி ராசிபலன்கள்!
Rasi Palan Today (08-08-2026): கடகத்துக்கு செலவு.. விருச்சிகத்துக்கு வரவு.. ஆகஸ்ட் 8ம் தேதி ராசிபலன்கள்!
Rasi Palan Today (07-08-2026): மேஷத்துக்கு கவனம்.. துலாமுக்கு குழப்பம்.. உங்க ராசிக்கு இன்னைக்கு என்ன பலன்?
Rasi Palan Today (07-08-2026): மேஷத்துக்கு கவனம்.. துலாமுக்கு குழப்பம்.. உங்க ராசிக்கு இன்னைக்கு என்ன பலன்?
Rasi Palan Today (05-08-2026): விருச்சிகத்துக்கு சிக்கல்.. மகரத்துக்கு செலவு.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (05-08-2026): விருச்சிகத்துக்கு சிக்கல்.. மகரத்துக்கு செலவு.. இன்றைய ராசிபலன்கள் இதோ!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly Debate : ’மாண்புமிகு சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி, குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
’சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Embed widget