மேலும் அறிய

Aani Month Rasi Palan : ’ஆனி மாதத்தில் அதிர்ஷ்டம் யாருக்கு? ஆபத்து யாருக்கு? 12 ராசிகளுக்கான பக்கா பலன்கள்..!

'உரசிப்பார்த்த உயரதிகாரிகள் எல்லாம் இந்த மாதம் உற்சாகப்படுத்துவார்கள்.  ஏற்றிவிட்டு அழகு பார்க்கும் ஏணியாய் இருக்கும் உங்களுக்கு இனி வானம் தொட்டுவிடும் தூரம்தான்’

இதுநாள் வரை படை வீடான ரிஷப ராசியில் சஞ்சரித்துவந்த சூரியன், இன்னொரு பகை வீடான மிதுனத்திற்கு சென்று, அங்கு சஞ்சரிக்கும் காலமே ‘ஆனி மாதம்’ எனப்படுகிறது. இந்த மாதத்தில் ஒவ்வொரு ராசிகாரருக்கும் முக்கியமான மாற்றங்கள் வாழ்க்கையில் நிகழவுள்ளது. ஜோடத்தில் நம்பிக்கையில்லாதவர்கள் கூட இந்த ஆனி மாத பலன்களின் அடிப்படையில் தங்களது நடவடிக்கையை அமைத்துக்கொண்டால் நிச்சயம் பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்.

இந்த ஆனி மாதம் யார், யாருக்கு யோகத்தையும் யார், யாருக்கு சங்கடங்களையும் தரப்போகிறது என்பதை பார்க்கலாம்..

மேஷ ராசிக்காரர்களே

கடும்பாறையாக வெளியில் காட்டிக்கொண்டாலும் கல்லுக்குள் ஈரம் போல கனிவானவர் நீங்கள்.  ஆனால், இப்போது கட்டாயம் இல்லாதபோது வெயிலில் வெளியே செல்வதை இந்த மாதம் குறைத்துக்கொள்வது நல்லது. இந்த ஆண்டு வழக்கத்தை விட வெயில் போடு, போடு என போடுவதால் பலருக்கும் உஷ்ண பிரச்னையால் உடல் கோளாறுகள் ஏற்பட்டு வரும் நிலையில், மேஷ ராசிகாரர்களுக்கு இந்த காலம் உஷ்ணத்தால் அதிக பிரச்னைகள் ஏற்படும். எனவே, தோல் தொடர்பான விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.  அதே நேரத்தில் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தினால் இந்த மாதத்தில் பணம் தொடர்பான சிக்கல் இருக்காது. மேலும் வரன் பார்க்கும் படலத்தை இந்த மாதம் திருமணம் ஆகாதவர்கள் தொடங்கினால் நிச்சயம் நல்ல முடிவு ஏற்படும்.

ஏற்கனவே ஒரு இடத்தில் பல ஆண்டுகளாக பணி உள்ளிட்டவைகளில் இருந்து பழகிய நீங்கள், நல்ல புதிய வாய்ப்பு வந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளாத மன நிலையில் இருப்பீர்கள். ஆனால், இந்த ஆனி மாதத்தில் உங்களை தேடி வரும் வாய்ப்புகளை தட்டாமல் பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஒரே இடத்தில் உட்கார்ந்துக்கொண்டு அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருந்தால் அடுத்தக் கட்ட வளர்ச்சி என்பது உங்களுக்கு இருக்கவே இருக்காது.

ரிஷப ராசிக்காரர்களே..!

ரீச் ஆக வேண்டும் என்று ரீல்ஸ் செய்யாமல், எப்போதும் ரியலிஸ்டாக இருக்க விரும்பும் எதார்த்தவாதியான ரிஷப ராசிக்காரர்களே. ஆனி மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டியவர் நீங்கள். தலையை மீறி செலவுகள் செல்லும். சரியாக திட்டமிட்டு செலவு செய்யுங்கள். வீண் செலவுகளை தவிர்ப்பது மிக நல்லது. அதே நேரத்தில் உடல் ஆரோக்கியம் தொடர்பான சிக்கல்களும் இந்த மாதம் வந்து சேரும் வகையில் கிர நிலைகள் இருக்கின்றன. அதனால் உங்களின் ஆரோக்கியத்தை நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். சாப்பாடு உள்ளிட்ட விஷயங்களில் கவனமாக இருங்கள். இல்லையென்றால் வயிறு தொடர்பான உபாதைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. முயற்சிகள் பலிப்பதில் சற்று தடுமாற்றம் இருக்கும். ஆனால், தளர்வின்றி வேதாளம் முருங்கை மரம் ஏறுவதுமாதிரி சோர்வின்றி தொடர்ந்து முயற்சித்தால், உங்களின் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். முதல் முயற்சியிலேயே வெற்றியடைந்துவிடலாம் என்ற எண்ணத்தில் மண் அள்ளிப்போடும் மாதம் இது. ஆனால், முயன்றால் முடியாதது இல்லை.

பிரச்னைகள் இருந்தாலும் பிரார்தனைகள் மூலம் நல்ல சேதிகள் உங்களை தேடி வர வைக்கலாம். உங்களுக்கு இஷ்டமான தெய்வத்தை தினமும் வணங்குங்கள். குல தெய்வ வழிபாடு சிறப்பு சேர்க்கும்.

மிதுன ராசிக்காரர்களே..!

மின்னலை போன்ற பளிச் வார்த்தைகளுக்கு பழகிப்போனவர்கள் நீங்கள். பழயவர்களுக்காகவும் பழகத்திற்காகவும் பாதாளும் வரை பாயும் உங்கள் பாசத்திற்கு பாயாசம் போட்டது மாதிரி அமையப்போகிறது இந்த மாதம். ஆனி, உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகிறது. எப்படா இந்த பிரச்னை முடியும் என்றிருந்த சிக்கல்களுக்கெல்லாம் தீர்வு கிடைக்கும் மாதம் இது. அதற்காக, அந்த பிரச்னைகளை தீர்க்கும் முயற்சியில் ஈடுபடாமல், அமைதியாக உட்கார்ந்துவிட்டு சிக்கல் தீர்ந்துவிடும் என்று எண்ணாதீர்கள். அந்த முயற்சியை எடுங்கள், இந்த மாதம் கைமேல் பலனை அள்ளிக் கொடுக்கும். வருமானத்திற்கு குறைவிருக்காது. வருமானத்தை பெருக்கும் வழிகளில் ஈடுபடுங்கள். புதிய தொழில் தொடங்க வேண்டுமென்றாலும் அதற்கான மாதம் இதுதான் உங்களுக்கு.

திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்காத இடத்தில் இருந்து வெளியேற முடிவெடுத்து, சூழல் காரணமாக வெளியேற முடியாமல் தவிப்பவரா நீங்கள்? உங்கள் தகுதிக்கான வாய்ப்பை இந்த மாதம் உங்கள் கரங்களை தேடி வரும். தட்டாமல் தாவிக் குதித்துவிடுங்கள். தனம் சேரும் பொன் மாதம் இது! 

கடக ராசிக்காரர்களே..!

கள்ளம், கபடம் அறியாத, வெள்ளந்தி மனதிற்கு சொந்தக்காரர் நீங்கள். இந்த மாதம் கவனம், கவனம், கவனம். இதுதான் ஆனி மாதம் உங்களுக்கு கொடுக்கும் எச்சரிக்கை. குடும்ப பிரச்னைகளை இந்த மாதம் பெரிதாக்காதீர்கள். யார் என்ன பேசினாலும் அதற்கு அமைதியாக பதிலளித்து கடந்தச் செல்ல முயற்சியுங்கள். அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார் ராகு. வழக்கமான உணவுகளை தவிர்த்து புதிய வகை உணவுகளை சாப்பிட வாய்ப்பு வந்தாலும் சாப்பிடாதீர்கள். உங்கள் உடல் நலத்திற்கு உலை வைக்கும் மாதமாக இருக்கிறது இந்த ஆனி.  நீங்கள் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை இயக்கும்போது இந்த மாதம் செல்போனை உபயோகிக்கவே உபயோகிக்காதீர்கள். அது மிகப்பெரிய சிக்கலை உங்களுக்கு ஏற்படுத்திவிடும். அவசரமாக பேசவேண்டிய கட்டாயம் இருந்தாலும் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு பேசுங்கள். உங்களுக்கு வரும் அழைப்பு உங்கள் உடல் உறுப்புகளுக்கு உலை வைக்கும் அழைப்பாக கூட இருக்கலாம்.

கடந்த நாட்களை விட செலவுகள் அதிகமாக ஏற்பட்டாலும் அதிர்ஷ்ட காற்றும் உங்கள் பக்கம் அடிக்க வாய்ப்பிருக்கிறது. வரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டால் வளங்கள் குவியும்.

சிம்ம ராசிக்காரர்களே..!

சிங்கமென சீறினாலும் சிந்திக்க வைக்கும் செயல்களால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் சிம்மராசிக்கார்களே, நீங்களும் உங்கள் உடல்நலனிலும் உங்கள் குடும்பத்தினர் உடல்நலனிலும் இந்த மாதம் சற்று கவனமாக இருப்பது நல்லது. கொடுக்கல், வாங்கல் பிரச்னைகள் இருந்தால் இந்த மாதம் அதில் சற்று கவனத்துடனும் அமைதியுடனும் இருந்து அதை சரி செய்யுங்கள். எடுத்தோம், கவிழ்த்தோம் என்று எந்த காரியத்தையும் இந்த மாதம் செய்ய வேண்டாம். அதற்காக இந்த மாதம் எதற்கும் ஆகாது என்று வாய்பந்தல் போட்டுவிட்டு, வருத்தப்பட்டு இருந்துவிட வேண்டாம். எடுக்கும் முயற்சிகளை எடுங்கள்.

குல தெய்வ வழிபாடு நன்மைகளை உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும். நாள்பட்ட வேண்டுதல்கள் இருந்தால் அதனை இந்த மாதத்திலேயே நிறைவேற்றுங்கள். வேண்டுதல்கள் வேண்டுவன கொடுக்க வல்லவை. 

கன்னி ராசிக்காரர்களே..!

குணம் இருக்கும் இடத்தில்தான் கோபம் இருக்கும் என்ற சொல்லாடலுக்கு சாலப்பொறுத்தமானவர் நீங்கள். ஆனால், இந்த மாதம் நீங்கள் கொஞ்சம் கோபத்தை குறைத்துக்கொள்வது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்த்து சுமூகமாக செல்ல முயற்சியெடுங்கள். நீங்கள் சும்மா இருந்தாலும் உங்களை தேவையில்லாமல் சீண்டி உங்கள் வாயை உங்கள் குடும்பத்தினரே பிடுங்க பார்ப்பார்கள். அதற்கெல்லாம் சோடை போய்விடாமல் பிரச்னைகள் தலைதூக்கும்போது அரைநாளாவது மவுனவிரதத்தை கடைபிடிப்பதுபோல இருந்துவிடுங்கள். அதே நேரத்தில் உடல் ஆரோக்கியதில் சிக்கல், பண விரயம் என கொஞ்சம் சிக்கலான கிரக நிலைகளில் சிக்கியிருக்கின்றீர்கள் நீங்கள்.

நீங்கள் சின்னாபின்னமாகாமல் தடுப்பது உங்கள் கைகளில்தான் இருக்கிறது. சின்ன பிள்ளை மாதிரி பொசுக்கு பொசுக்கென கோபிக்காமல், பெருந்தன்மையாக நடந்துகொண்டால் நல்லது நடக்கும். பிறர் விஷயத்தில் மூக்கை நுழைப்பதை இந்த மாதத்திலாவது கொஞ்சம் தள்ளிப்போடுங்கள். இல்லையென்றால், நீங்கள்தான் மூக்கறுப்பட்டு நிற்கவேண்டும்.

துலாம் ராசிக்காரர்களே..!

துன்பம் வரும் நேரத்திலும் துவளாமல் துளிர்க்கும் துலாம் ராசிக்காரர்களே. நீண்ட நாட்களாக பணி மாற்றம் கோரி விண்ணப்பித்திருந்து காத்திருந்தால் அந்த அப்ளிகேஷனை மறுபடியும் ஒரு தட்டு, தட்டி மீண்டும் போட்டுப் பாருங்கள். இந்த முறை உங்களுக்கு நீங்கள் நினைத்த இடமாற்றம் அமையும். குடும்பம் முதல் அலுவலகம் வரை உங்களை பாராட்டி தள்ளி அன்பு மழையும் நனைய வைக்கும் ஆஹா,ஒஹோவான மாதம் இது உங்களுக்கு. விரலுக்கேற்ற வீக்கம் என்பதை உணர்ந்து செலவை மட்டும் கைக்குள் வைத்துக்கொள்ளுங்கள். வருமானம் தாராளமாக வந்தாலும் தள்ளாட்டம் வேண்டாம்.

உங்களை தேடி வருபவர்களையெல்லாம் கண்ணுக்கு கண்ணாய் வைத்து காவந்து செய்ததெல்லாம் போதும். இந்த மாதம் யார் எப்படி வந்தாலும் உற்று நோக்கிய பின்னரே உதவுங்கள். உற்சாகமாய் யோகம் அள்ளித் தரும் மாதம் இது.

விருச்சிக ராசிக்காரர்களே..!

’வெளுத்ததெல்லாம் பால், வெந்நீர் கொடுத்தாலும் அது மோர்’ என்று நினைக்கும் விந்தையானவர்களே. இந்த மாதம் உங்களுக்கு பாகற்காய் கூட பாகாக இனிக்கும். நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். அதற்காக கரண்ட் பாக்ஸில் போய் கை வைத்துவிடாதீர்கள். கண்ணை மூடிக்கொண்டு காட்டிற்கு சென்றாலும் நீங்கள் கால் வைக்கும் திசையே நோக்கியே உதயசூரியன் உற்சவம் நடத்தும் அளவிற்கு உற்சாகமான மாதம் இது. அவசியமற்ற பயணங்களை தவிர்த்தால் அசதிகள் குறையும். இல்லையென்றால் உடல்நலனில் உபாதைகள் ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது.

எடுத்தோம் கவிழ்த்தோம் என அதிரடியாய் எதுவும் செய்யாமல், ஆர, அமர யோசித்து எதையும் செய்தால் வெற்றிகள் நிச்சயம். கோபம் தெறிக்கும் உங்களிடமிருக்கும் குணத்தையெல்லாம் பற்றி கவலைப்படாதவர்கள், அந்த கோபத்தை வைத்தே உங்களுக்கெதிரான கோட்டையை கட்டுவார்கள். இந்த மாதம் ஜென் நிலைக்கு செல்வது எப்படி என்ற புத்தகத்தை வாங்கி படித்தாவது பொறுமையோடு இருங்கள். அதுவே உங்களுக்கான இந்த மாத ஜன, கன, மன..!

தனுசு ராசிக்காரர்களே..!

சரி என்றால் சரி, தவறு என்றால் தவறு என்ற அதிரடியான ஆள் நீங்கள். தப்புண்ணே.. என தெனாவெட்டு ஜீவா மாதிரி இந்த மாதம் உறுமிக்கொண்டிருக்காமல், பாதி உறக்கத்தில் உழல்பவர் மாதிரி உம்மென்று இருங்கள். இந்த மாதம் உங்களுக்கு கொஞ்சம் சிக்கல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதிலும் செலவுகள் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டிய வேண்டியவர் நீங்கள். சுக ஸ்தானத்தில் சனியும், அஷ்டமத்தில் குரு – சுக்கரனும் நாற்காலியை போட்டு நங்கூரமாக உட்கார்ந்திருக்கிறார்கள். அதனால், தேவையற்ற செலவுகள் என்று உங்கள் மனதில்படும் செலவுகளை செய்யவே செய்யாதீர்கள். செய்தீர்கள் என்றால் பின்னர் வருத்தப்படப்போவதும் நீங்கள்தான்.  வேலைபார்க்கும் இடத்தில் இந்த மாதம் முழுவதும் தேவையற்ற பேச்சுகள் பேசாமலும், புரணிகள் புரளும் இடங்களுக்கு செல்லாமலும் இருப்பது உங்களுக்கு ரொம்ப நல்லது. இல்லையென்றால் வதந்திகள் உங்கள் மீது வண்டிக் கட்டி ஏறி மிதிக்கும் ஏற்றம் இருக்கிறது.

பிறரின் பிரச்னைகளில் தலையிடுவது, இன்னொருவருக்கான ஜாமீன் கையெழுத்து போடுவெதெல்லாம் இந்த மாதம் வேண்டாம். உங்களை உண்டு இல்லையென்று ஆக்கும் நோக்கில் கிரகங்கள் நர்த்தனமாடிவருவதால், நல்லதையே நினைத்து, நல்லவர்களுடன் மட்டும் பழகி, நல்லதையே செய்யுங்கள். உங்களின் நலத்திற்காக உங்களுக்கு பிடித்தமான தெய்வத்தை தினந்தோறும் வீட்டில் வழிபடுங்கள். வாய்ப்பிருந்தால் கோயிலுக்கு சென்று மூலவரை வழிபட்டு கொடிமரத்தையும் வழிபட்டு வாருங்கள். வளம் வந்துச் சேரும்.

மகர ராசிக்காரர்களே..!

மணக்கும் சந்தனத்தைபோல மற்றவர்களை மகிழ்விக்க பிறந்தவர்கள் நீங்கள். வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று நீங்கள் பேசினாலும் உங்களை வெறுக்க யாருக்கும் மனம் வராது. ஆனால், இந்த மாதம் உங்களுக்கு கூடுதல் செலவுகள் வரும். உடல்நலன் சார்ந்த மருத்துவ விஷயங்களுக்கு செலவு செய்ய வேண்டிய கட்டாயம் உங்கள் ராசியில் இருக்கிறது.  குறிப்பாக, தோல் தொடர்பான பிரச்னைகள் வரக் கூடும் என்பதால் உச்சி வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். காடு மணக்கும் கற்பூர பெட்டகம் போல உங்கள் குடும்பத்தில் நீங்கள் இருந்தாலும் கடுஞ்சொல் வார்த்தைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் அடிக்கடி உங்களை மீறி உணர்ச்சிவசப்படக்கூடிய தருணங்கள் கூட ஏற்படும். கவனமாக அதனையெல்லாம் கட்டுப்படுத்திக்கொள்வது நல்லது. உங்கள் ராசியில் சனி குருவின் சுப பார்வையை பெற்று சஞ்சரிக்கிறது. அதனால்,  பணிகளில் சற்று கூடுதல் சுமை ஏறினாலும் அதற்கு ஏற்றவாறு வாழ்த்துகளும் பாராட்டுகளும் பாரப்பட்சமின்றி வந்துசேரும் வளமான மாதம் இது. கூடவே பதவி உயர்வும் சம்பள உயர்வும் கட்டாயம் கிடைக்கும்.

குறிப்பாக மகர ராசியை பெற்றிருக்கும் பெண்களுக்கான சுப யோகமான மாதமிது. கண்ணைக் கட்டிக்கொண்டு கணக்கு பார்த்தால் கூட நீங்கள் நினைத்தை விட உங்கள் கைகளில் கூடுதலாக வளம் நிலைக்கும்.  நினைத்ததெல்லாம் நடக்கவும், தொட்டதெல்லாம் துலங்கவும் செய்யும் வேலையை இந்த முறை கிரங்கங்கள் உங்களுக்கு அருளும். கிடைக்கும் பந்துகளில் எல்லாம் சிங்கில் எடுப்பதை விடுத்து, சிக்‌ஷர்களுக்கு முயற்சியுங்கள். ஆறு பந்துகளில் ஒரு பந்தையாவது சிம்மம் பவுண்டரி லைனை தாண்டி கொண்டுச் செல்லும் என்கிறது கட்டம்.

இஷ்டத் தெய்வத்தை வழிபடுங்கள். குல தெய்வத்தை மனதில் நினைத்து எப்போதும் கும்பிடுங்கள். குலம் செழிக்கும்! 

கும்பம் ராசிக்காரர்களே..!

குன்றின் மீதிட்ட குல விளக்காய் எப்போதும் பிறருக்கு வழிகாட்டும் வல்லமை படைத்தவர் நீங்கள். குடும்பத்தை தாங்கும் சுமைதாங்கியாய் நீங்கள் இருந்தாலும் உங்களின் அர்ப்பணிப்பு அங்கீகரிக்கப்படவில்லையே என்ற ஏக்கம் உங்களுக்கு இருக்கும். இனி அந்த கவலையில்லை. ஆனால், செலவுகள் இருக்கும். சிக்கனமாக இருந்து செலவுகளை குறைப்பது உங்கள் கைகளில்தான் இருக்கிறது. வரும் செலவுகள் வீண் செலவுகளாக இல்லாமல் சுப செலவுகளாக மாறும் வாய்ப்பும் இருக்கிறது. வீடு, மனை, நிலம் தொடர்பான சிக்கல்களுக்கு அலைச்சலும் அதிக முயற்சியையும் செய்ய வேண்டிய நிலை இருக்கும். கலங்கிய பின்னர் தெளிவான நீர் கிடைப்பது மாதிரி, பிரச்னைகள் வந்தாலும் இறுதியில் உங்களுக்கு தீர்வு கிடைத்து மன நிம்மதி அடைவீர்கள்.  அலைச்சல்கள் ஏற்படும் காலம் இது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.

ஒரு துளி தேனை தேடினால் ஒரு கூடு தேன் உங்களுக்கு கிடைக்கும். அதற்கு ஒரு சிறு முயற்சி தேவை. தொடர் முயற்சி தேவை. வரும் வாய்ப்புகளையெல்லாம் வளைத்துப்போடப் பாருங்கள். காற்றுள்ள போதுதான் தூற்ற முடியும்..!

மீனம் – ராசிக்காரர்களே..!

மின்னுவதெல்லாம் பொன்னாக்கும் நல்லெண்ணம் கொண்ட நல்ல மனிதர் நீங்கள். நடப்பது நடக்கும், வருவது வரட்டும் என்ற ’டேக் இட் ஈசி’ பாலிசிதான் உங்களின் மிகப்பெரிய பலம். உங்கள் ராசியை கடகத்தின் உச்சத்தில் அமர்ந்து குரு பார்க்கிறார். அதனால், ’வராமல் வந்த மாமணியாய்’ இதுவரை வராத வாய்ப்புகள் எல்லாம் உங்களை தேடி வந்துச் சேரும். குடும்ப சிக்கல்கள், பிரச்னைகள் எல்லாம் தீரும் மாதமாக இந்த ஆனி மாதம் அமையும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. குறிப்பாக, இந்த மாதம் திருமணத்திற்கான முயற்சிகள் எடுத்தால் அது நிச்சயம் நடந்தே தீரும் நிலை உருவாகியிருக்கிறது. மனதில் ஏற்பட்ட சிராய்ப்புகளுக்கு எல்லாம், மயிலிறால் மருந்துபோடும் மாதமாகவும், வருமானத்திற்கு குறைவில்லாத மாதமாகவும் அமையவிருக்கிறது இந்த ஆனி.

உரசிப்பார்த்த உயரதிகாரிகள் எல்லாம் இந்த மாதம் உற்சாகப்படுத்துவார்கள்.  ஏற்றிவிட்டு அழகு பார்க்கும் ஏணியாய் இருக்கும் மீன ராசிக்காரர்களுக்கு, இனி வானம் தொட்டுவிடும் தூரம்தான்..!

Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
EPS ADMK : தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- இபிஎஸ்
தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- விளாசிய இபிஎஸ்
Seeman Slams Keerthana : ‘இதெல்லாம் என்ன? அதிமேதாவித்தனம், அத்துமீறல்’ அமைச்சர் கீர்த்தனாவிற்கு சீமான் கடும் எதிர்ப்பு..!
‘அதிமேதாவித்தனம், அத்துமீறல்’ அமைச்சர் கீர்த்தனாவிற்கு சீமான் கடும் எதிர்ப்பு!
Senthil Balaji: கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
EPS ADMK : தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- இபிஎஸ்
தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- விளாசிய இபிஎஸ்
Seeman Slams Keerthana : ‘இதெல்லாம் என்ன? அதிமேதாவித்தனம், அத்துமீறல்’ அமைச்சர் கீர்த்தனாவிற்கு சீமான் கடும் எதிர்ப்பு..!
‘அதிமேதாவித்தனம், அத்துமீறல்’ அமைச்சர் கீர்த்தனாவிற்கு சீமான் கடும் எதிர்ப்பு!
Senthil Balaji: கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
Renault Kwid Best Variant: தெறிக்கவிடும் ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட்; அதுல பெஸ்ட் வேரியண்ட் எதுன்னு தெரியுமா.? ஒப்பீடு இதோ
தெறிக்கவிடும் ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட்; அதுல பெஸ்ட் வேரியண்ட் எதுன்னு தெரியுமா.? ஒப்பீடு இதோ
US Iran Hormuz: துக்கத்திற்கு நடுவிலும் தாக்குதல்.! ஹார்முஸில் தாக்கப்பட்ட 2 கப்பல்கள்; ஈரானை கைகாட்டும் அமெரிக்கா
துக்கத்திற்கு நடுவிலும் தாக்குதல்.! ஹார்முஸில் தாக்கப்பட்ட 2 கப்பல்கள்; ஈரானை கைகாட்டும் அமெரிக்கா
SC On Karur Stampede: உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
Embed widget