மேலும் அறிய

புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஜார்கண்டில் ஊர்க்காவல் படை உடற்தகுதித் தேர்வில், ஒரு பெண் புடவையில், 1600 மீட்டர் தூரத்தை கொளுத்தும் வெயிலில் வெறுங்கால் வெறும் 6 நிமிடங்களில் ஓடி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தின் சோசோ கிராமத்தைச் சேர்ந்தவர் கவிதா குமாரி. கணவரை இழந்த இவர், தனது இரண்டு குழந்தைகளையும், வயதான மாமனார், மாமியாரையும் தனி ஆளாகாக் கவனித்து வாருகிறார்.

இந்த நிலையில் தனது குடும்பத்தை எப்படியாவது வறுமையிலிருந்து மீட்கப் போராடி வரும் கவிதாவுக்கு, ஊர்க்காவல் படையில் 284 பணியிடங்களுக்கு ஆள் எடுக்கிறார்கள் என்றும் செய்தி கிடைத்தது.

அதில் 50 சதவிகித பணியிடங்கள் பெண்களுக்கும், கூடுதலாக 5 சதவிகித பணியிடங்கள் கைம்பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

உடனே அதற்கு அவர் தயாராகத் தொடங்கினார் கவிதா. ஆனால், குடும்பத்தின் வறுமை அவரை பின்னுக்கு இழுத்தது. ரன்னிங் பயிற்சி எடுப்பதற்கு முறையான ஷூ, டிராக் சூட் கூட அவரிடம் இல்லை.

இருப்பினும், தனது குழந்தைகளின் எதிர்காலத்துக்காகப் போராடும் தாய்க்கு இந்த வறுமை ஒரு தடையாகவே தெரியவில்லை. தினமும் அதிகாலை 4 மணிக்கே எழுந்து, புடவையில் வெறுங்காலுடன் ரன்னிங் பயிற்சி மேற்கொண்டார்.

இந்த நிலையில், ஊர்க்காவல் படை உடற்தகுதித் தேர்வு ராம்கர் மாவட்டத்தில் உள்ள சித்தோ-கான்ஹு மைதானத்தில் நேற்று உச்சி வெயிலில் நடைபெற்றது. இதில் பங்கேற்பவர்கள், 1600 மீட்டர் தூரம் ஒட்டப்பந்தயத்தை 10 நிமிடங்களில் கடக்க வேண்டும். மேலும், 8 நிமிடங்களில் அந்த தூரத்தைக் கடந்தால் கூடுதல் புள்ளிகள் வழங்கப்படும்.

இந்த நிலையில் கவிதா, ஒட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ள மைதானத்துக்கு வந்தார். அங்கிருந்த அனைவரின் பார்வையும் கவிதா மீதே இருந்தது. காரணம், அவர் அந்த உச்சி வெயிலில் புடவையில் வெறுங்காலுடன் களத்தில் நின்றுகொண்டிருந்தார்.

பந்தய விசில் அடித்ததும், மின்னல் வேகத்தில் சீறிய கவிதா, 1600 மீட்டர் தூரத்தை வெறும் ஆறே நிமிடங்களில் முடித்து, அங்கிருந்த அனைவரின் புருவங்களையும் உயர்த்தினார். இதனைக் கண்டு பிரமித்த உள்ளூர் ஓட்டப்பயிற்சிக் குழு ஒன்று அவரின் வீட்டுக்கே சென்று அவரைப் பாராட்டியது.

வறுமையிலும் கவிதா கொண்டிருந்த மன உறுதியும், விடாமுயற்சியுமே அவரின் இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்திருக்கிறது. மேலும், கவிதாவின் இந்த வெற்றி ஊர்க்காவல் படையில் சேரத்துடிக்கும் சக விண்ணப்பதாரர்களுக்கு பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது.

கவிதா புடவையில் வெறுங்காலுடன் ஓடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், அடுத்தகட்ட தேர்வில் வெற்றிபெற பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

"திருமணம் மீறிய உறவு" நகையை திருப்பி கேட்ட பெண் - இறுதியில் நடந்த சோகம்
மலை உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகேயுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது !
மலை உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகேயுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது !
"தான்தோன்றித்தனமாக நடந்துகொண்ட தவெக அரசு" - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கண்டனம்!
Trichy Power Cut: திருச்சியில் நாளை (25-11-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
திருச்சியில் நாளை (25-11-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ-வை விசாரிக்கும் யாருக்கும் அஞ்சாதா 'பெண் சிங்கம்' - ' யார் இந்த சிருஷ்டி சிங் ஐபிஎஸ்?
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ-வை விசாரிக்கும் யாருக்கும் அஞ்சாதா 'பெண் சிங்கம்' - ' யார் இந்த சிருஷ்டி சிங் ஐபிஎஸ்?
"தான்தோன்றித்தனமாக நடந்துகொண்ட தவெக அரசு" - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கண்டனம்!
தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை.. விஜய் அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் – இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்!
தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை.. விஜய் அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் – இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்!
"சங்கி +கொத்தூஸ் இரண்டுக்கும் ஏமாற்றம்" - தீபவிவகாரம் குறித்து பதிவிட்ட மாணிக்கம் தாகூர்!
பட்டையை கிளப்பிய சூர்யவன்ஷி: 52 பந்துகளில் இரட்டை சதம் எடுத்து அசாத்திய ஆட்டம்!
பட்டையை கிளப்பிய சூர்யவன்ஷி: 52 பந்துகளில் இரட்டை சதம் எடுத்து அசாத்திய ஆட்டம்!
திருப்பரங்குன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு... ஏற்றப்பட்ட தீபம் - எங்கு தெரியுமா?
திருப்பரங்குன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு... ஏற்றப்பட்ட தீபம் - எங்கு தெரியுமா?
விண்ணை முட்டிய அரோகரா கோஷம்! - திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்! எத்தனை நாட்கள் தீபம் எரியும்? எவ்வளவு தூரம் தெரியும்?
விண்ணை முட்டிய அரோகரா கோஷம்! - திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்! எத்தனை நாட்கள் தீபம் எரியும்? எவ்வளவு தூரம் தெரியும்?
"கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்" - வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!
Embed widget