Seeman Speech : திமுகவில் இருந்திருந்தால் அமைச்சர் ஆகியிருப்பேன் - சீமான்
பாரதியார் மற்றும் இமானுவேல் சேகரனாருக்கு மரியாதை செலுத்திய பின் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்; அப்போது பேசிய அவர், திமுகவில் இருந்திருந்தால் அமைச்சர் ஆகியிருப்பேன்; திமுக ஆட்சியையே நாம் தமிழர் கட்சி தான் வழிநடத்திக் கொண்டிருக்கின்றது. பெண்களை வன்கொடுமை செய்து கொலை செய்பவர்களுக்கு மரணத்தை தவிர வேறு தண்டனையே கிடையாது; ஆளுநரின் வேலை என்பது மாநிலங்களில் நடப்பதை உளவு பார்த்து மத்திய அரசுக்கு சொல்வது; தமிழ்நாட்டுக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆளுநர் அந்த வேலையை சரியாக செய்வார் என்று நினைக்கிறேன் என்றார். நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு அளித்த முழு பேட்டி..
Naam Tamilar Katchi (NTK) leader Seeman latest speech on various things such as DMK government, punishment on women abuse, new governor appointment and so on.....