DGP Sylendra babu Warning : DGP சைலேந்திர பாபு எச்சரிக்கை.. என்ன தெரியுமா?
கடந்த சில ஆண்டுகளாக அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் ஆகியோர் மீது ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. சைலேந்திர பாபு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “நவீன அறிவியல் வளர்ச்சியில் முக்கிய அங்கமாக விளங்கும் சமூக வலைதளங்கள் மற்றும் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் ஊடங்கங்ககள் மற்றும் பத்திரிகைகள் வாயிலாக பலரும் சமுதாயம், அரசியல் உள்ளிட்டவை சார்ந்த ஆக்கப்பூர்வமான தகவல்களைப் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், சிலர் சுய விளம்பரத்திற்காக ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் அருவருப்பான மற்றும் அவதூறு செய்திகளை பதிவு செய்து, சட்டம், ஒழுங்கு பிரச்சினையை தூண்டி வருகின்றனர். அதிலும் குறிப்பிட்ட சிலர் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் சொந்த ஆதாயத்திற்காகவும், மக்கள் மத்தியில் பிரபலம் அடைய வேண்டும் என்ற எண்ணத்திலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும், அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து மலிவான, தரம் தாழ்ந்த கருத்துக்களை பரப்பி வருகின்றனர். இத்தகைய அநாகரீகமான பதிவுகள் பொது அமைதியை சீர்குலைப்பதற்கும், குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்கும் வித்திடுகின்றன.
![LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/d70ce0ee2304bad4a3f0276b785328a51739721409350200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=470)
![”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/db2fd6288077aa12c87ba7709212a5491739706167762200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
![Namakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/5df2bb3fa8f468bcf1dada5efd0d7ca31739694440289200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
![Nainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/15/6a63420913f32179405dcb54546a36031739613746825200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
![Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/15/df84d6b6c729d89f5f269ed33e4b783a1739611531921200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)