பாலிவுட் வரை கொண்டாடப்பட்ட வாத்தி கமிங்
பாலிவுட் வரை கொண்டாடப்பட்ட வாத்தி கமிங்
பொதுவாகவே இளையதளபதி விஜய் பாடல்களுக்கு நம்ம ரசிகர்கள்கிட்ட பெரிய வரவேற்பு உண்டு , அதிலும் போன வருடம் வெளியான "வாத்தி கம்மிங்" பாடல் அனைவராலும் கொண்டாடப்பட்ட பாடல். லாக் டவுன் நேரத்துல இந்த பாடல் வெளியாகி சக்கைப்போடு போட்டது, அது மட்டும் இல்லாமல் இளையதளபதி விஜய் பாடல் வெளியீட்டு விழாவில் இந்த பாடலுக்கு நடனம் ஆடிய பின்பு இந்த பாடல் வேறு ஒரு பரிமாணத்திற்கு எடுத்துச் சென்று வைரலாக்கப்பட்டது .
பாடல் போன வருடம் மார்ச் 10ம் தேதி ரிலீஸ் ஆகி தமிழ்நாட்டு ரசிகர்கள் மட்டும் இல்லாமல் பாலிவுட் வரைக் கொண்டாடப்பட்டது. திரைப்படம் கடந்த பொங்கல் அன்று வெளியாக, அனைவரையும் திரையில் ஆடவைத்தப் பாடல் "வாத்தி கமிங்". ரசிகர்கள் மற்றும் பல செலிபிரிட்டிகள் கடந்த ஒரு வருடமாக இந்த பாடலை கொண்டாடி வருகின்றனர் .
பாலிவுட் செலிபிரிட்டி ஷில்பா செட்டி தொடங்கி ஜெனிலியா வரை இந்த பாடல் அனைவராலும் கொண்டப்பட்டது. கிரிக்கெட் வீரர்கள் அனைவராலும் இணையதளத்தில் கொண்டாடப்பட்ட பாடல் "வாத்தி கமிங் " இந்த பாடலை கிரிக்கெட் வீரர்கள் தங்களின் அனைத்து வெற்றி தருணங்களிலும் ஆடிப்பாடி அவர்களின் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் பகிர்ந்து தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
சமீபத்தில் விஜயுடன் ஜோடியாக நடித்த ஜெனிலியா தனது கணவர் ரிதேஷ் தேஷ்முக் மற்றும் நபர்களுடன் இந்த பாடலுக்கு நடனம் ஆடி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் .
https://www.instagram.com/p/CMWNVi3DkJh/?utm_source=ig_web_copy_link
"வாத்தி கமிங் " அனைவரின் விருப்பப் பாடலாக இந்த வருடம் கொண்டாடப்பட்டு வருகிறது.