”இவெரல்லாம் ஒரு பொதுச்செயலாளரா? புஸ்ஸி ஆனந்தை நீக்குங்கள்” விரிச்சுவல் வாரியர்ஸ் போர்க்கொடி!
இவரெல்லாம் ஒரு பொதுச்செயலாளாரா? ஓடி ஒளிந்த நீங்கள் தான் விஜயின் உண்மையான விசுவாசியா! இவரை உடனடியாக பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்குங்கள் இல்லை என்றால் அது தவெகவிற்குத்தான் ஆபத்து என்று கூறி புஸ்ஸி ஆனந்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளானர் விரிச்சுவல் வாரியர்ஸ்.
கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் விஜய் பிரச்சாரத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது. இதனைத்தொடர்ந்து தவெகவின் கரூர் மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார். அதேபோல் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தையும் தமிழக காவல்துறை வலை வீசி தேடிவந்தது. ஆனால் கடந்த இரண்டு வாரமாக காவல்துறை பிடியில் சிக்காமல் பதுங்கி இருந்தார் புஸ்ஸி. இச்சூழலில் தான் கரூர் சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த உத்தரவை ரத்து செய்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இதன் அடிப்படையில் தமிழக காவல்துறை தன்னை கைது செய்யமுடியாது என்பதால் கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி இரவு பொதுவெளியில் தலைகாட்டினார் புஸ்ஸி ஆனந்த். அந்த வகையில் பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜய் இல்லத்தில் சுமார் 20 நிமிடத்திற்கு மேலாக அவரை சந்த்தித்து ஆலோசனை செய்தார்.
இந்த நிலையில் தான் கடந்த 18 நாட்களுக்குப்பிறகு நேற்று பனையூரில் உள்ள தவெக அலுவலகம் திறக்கப்பட்டது. அப்போது புஸ்ஸி ஆனந்த அங்கு வந்தார். அவரை தவெக மா.செக்கள் உற்சாகமாக வரவேற்றதாக சொல்லப்படுகிறது. அதோடு புஸ்ஸி ஆனந்திற்கு பொன்னாடை, மலை அணிவித்து ஒரு சில மாவட்ட செயலாளர்கள் புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டனர்.
இச்சூழலில் தான் கரூர் சம்பவத்தில் அதிமுக பாஜக தவிர்த்து மற்ற கட்சிகள் எல்லாம் தவெகவை கடுமையாக விமர்சனம் செய்ததோடு அக்கட்சி தலைவர் விஜய்க்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்தது. அந்த சமயத்தில் தன்னை காவல்துறை கைது செய்துவிடுமோ என்று எண்ணி ஓடி ஒளிந்த புஸ்ஸி ஆனந்த் எப்படி மக்களுக்கு ஆதரவாக இருப்பார். இவரெல்லாம் ஒரு பொதுச்செயலாளரா? அவரை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்குங்கள் என்றும் 17 நாட்களுக்கு பிறகு கட்சி அலுவலகத்தை திறந்து உயிர் இழந்த 41 நபர்களுக்கு கூட ஒரு மெழுகுவர்த்தி ஏந்தி ஒரு நினைவு அஞ்சலி கூட செலுத்தாது புஸ்ஸி ஆனந்த்க்கு மாலை அணிவித்து சால்வை போட்டு கொண்டாடி வருவதை மக்கள் பார்த்தால் என்ன நினைப்பார்காள் என்றும் புஸ்ஸி ஆனந்திற்கு எதிராக முகம் சுழிக்கின்றனர் விரிச்சுவல் வாரியஸ்.