TN Assembly | பேரவை தொடங்கிய முதல் நாள் மீண்டும் வெடித்த பிரச்சனை பாமக MLA-க்கள் ஆவேசம்
அன்புமணி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணா போராட்டம் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை கிளாப்பியுள்ளது.
பாமக சட்டமன்ற உறுப்பினர் குழு தலைவராக ஜி.கே மணி இருந்து வரும் நிலையில் அவரை மாற்றக்கோரி அன்புமணி தரப்பு பாமக சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை தலைவர் அப்பாவிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே கடிதம் கொடுத்திருந்தனர்.
இந்த கடிதத்தின் படி பாமக சட்டமன்ற உறுப்பினர் குழு தலைவராக ஜி.கே மணியை அப்பொறுப்பில் இருந்து அவரை நீக்க வேண்டும் என கூறி அன்புமணி ஆதரவு பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடேஸ்வரன், சிவகுமார், சதாசிவம் ஆகியோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அன்புமணி ஆதரவில் உள்ள தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரனைபாமக சட்டமன்ற உறுப்பினர் குழு தலைவராகவும், மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமாரை பாமக கொரடாவாக நியமிக்க வேண்டும் என்றும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமதாஸ் தரப்பில் பாமக கௌரவ தலைவர் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஜிகே மணி சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் உள்ளிட்டோர் உள்ளனர்
போராட்டத்திற்க்கு பின்னர் அன்புமணி ஆதரவாளர் வெங்கடேசன் செய்தியாளர்களை சந்திபில் பேசுகையில், “பாமகவின் சட்டமன்ற குழு தலைவர் , துணைத் தலைவர், மற்றும் கொரடாவுக்கு இருக்கைகள் தனியாக வழங்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவுவிடம் நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம். இதனை சபாநாயகர் மாலை பேசிக் கொள்ளலாம் என கூறியுள்ளார். விரைவில் எங்களுக்கு தனி இடம் வழங்க வேண்டும்” என்று கூறினார்