Nandhini | EVICTION-க்கு முன்பே நள்ளிரவில் வெளியேறிய நந்தினி BIGBOSS 9-ல் நடந்தது என்ன?

Continues below advertisement

பிக்பாஸ் தமிழின் 9 ஆவது சீசன் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தொடங்கி 5 நாட்களை கடந்துள்ளது. முதல் வாரத்தில் யார் எலிமினேட் ஆகப்போகிறார்கள் என ரசிகர்கள் பரபரப்பாக எதிர்பார்த்த நிலையில் எலிமினேஷனுக்கு முன்பே பிக்பாஸ் வீட்டில் இருந்து நந்தினி வெளியேற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்திலேயே எவிக்ஷன் தேர்வுமுறையும் நடந்தது. இதில் போட்டியாளர்கள் யார் யாரெல்லாம் இந்த போட்டியில் தொடர வேண்டாம் என்று நினைக்கிறார்களோ அவர்களை நாமினேட் செய்தனர். இதில் யாரெல்லாம் மக்களிடம் இருந்து குறைவான வாக்குகளை பெற்றிருக்கிறார்களோ அவர்கள் வார இறுதி எபிசோடில் வெளியேற்றப்படுவார்கள். ஆனால் அதற்கு முன்னரே இங்கு ஒரு போட்டியாக நிகழ்ச்சியில் இருந்து தாமாக முன்வந்து வெளியேறியிருக்கிறார். 

இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களில் சிலர் தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு துன்பங்களையும் நெருக்கடிகளையும் சந்தித்த போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளார்கள். அந்த வகையில் சிறு வயதிலேயே தனது பெற்றோர்களை இழந்தவர் நந்தினி. சீசன் தொடக்கம் முதலே மன நல ரீதியாக ஒருவிதமான இறுக்கத்துடன் நந்தினி காணப்பட்டார் . மேலும் தனி அறையில் அடைந்து யாரிடமும் பேசாமால் நந்தினி அலறியது அவருக்கு ஏதோ தீவிரமான பிரச்சனை உள்ளது என்கிற எண்ணத்தை ஏற்படுத்தியது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடு படமாக்கப்படுவதற்கு முந்தைய இரவு, நந்தினிக்கு anxiety attack வந்துள்ளது. இது, அதிர்ச்சி அல்லது பதற்ற மிகுதியால் ஏற்படும் பிரச்சனை ஆகும். உடனே, அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு அவர் confession அறையில் பிக் பாஸ் உடன் பேசினார். அப்போது, தான் இந்த போட்டியில் தொடர விரும்பவில்லை என்று கூறினார். 

பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சில விஷயங்கள் தன்னை தனிபட்ட முறையில் பாதிப்பதாகவும் இதனால் இந்த பொயான இடத்தில் தான் இருக்க விரும்பவில்லை என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கிளம்புவதாக நந்தினி பிக்பாஸிடம் கூறியதும் அவரை பிக்பாஸ் வெளியே அனுப்பினார்.

இப்படியான நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தினால் பிக்பாஸ் வீட்டில் இருந்து நந்தினி வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் வார எலிமினேஷன் நாளை நடக்கவிருக்கும் முன்பே நந்தினி வெளியேறி இருப்பதால் இந்த வாரம் இன்னொருவர் எலிமினேட் செய்யப்பட்ட வாய்ப்புகள் குறைவே.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola