இளைஞர் ஆணவக்கொலை? பெண்ணின் தந்தை வெறிச்செயல்! திண்டுக்கலில் பகீர் சம்பவம்

Continues below advertisement

தனது மகள் ஆர்த்தியை இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து திருமணம் செய்த 24 வயது இளைஞர் ராமச்சந்திரனை மகளின் தந்தையே வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அடுத்த,  விராலிப்பட்டி அருகே, ராமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரனை கணபதிபட்டியில் வசித்து வரும் சந்திரன் என்பவரின் மகள் ஆர்த்தியை இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்துள்ளார். இந்நிலையில், ராமச்சந்திரன்,  ஆர்த்தி இருவரும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, காதல் திருமணம் செய்து கொண்டனர். 

இவர்கள் இரு வேறு  சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால்,  பெண்ணின் குடும்பத்தினர் இவர்களது காதல் திருமணத்தை ஏற்கவில்லை என தெரிகிறது. இதனால்,  மருமகன் ராமச்சந்திரனுக்கும் மாமனார் சந்திரனுக்கும் இடையை  அடிக்கடி தகராறு  ஏற்பட்டு வந்துள்ளது. இதனை அடுத்து ஞாயிற்றுக்கிழமை மாலை, குல்லிபட்டி  பகுதிக்கு பால் கறக்கும்  வேலைக்கு ராமச்சந்திரன் சென்றுள்ளார். அப்போது அவர், நிலக்கோட்டை அருகே வழிமறித்த சந்திரன்  தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, தான் மறைத்து வைத்திருந்த அருவாளை எடுத்து ராமச்சந்திரனை சரமாரியாக வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த ராமச்சந்திரன்  சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற  நிலக்கோட்டை காவல்துறையினர்,  ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல்  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த நிலக்கோட்டை காவல்துறையினர்,  ராமச்சந்திரன், கௌரவ கொலை செய்யப்பட்டாரா?  என்ற கோணத்தில் ராமச்சந்திரனை கொலை செய்த மாமனார் சந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சந்திரன் ஒருவரால் மட்டும் ராமச்சந்திரன் வெட்டி கொலை செய்யப்பட்டு இருக்க முடியாது?  இந்த கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம்?  எனவே,  உண்மை கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என கூறி, கொலை செய்யப்பட்ட ராமச்சந்திரனின் உறவினர்கள் ராமநாயக்கன்பட்டியில் ஆண்டிபட்டி -  வத்தலகுண்டு சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் கோரிக்கை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை  அடுத்து சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து  காதல் திருமணம் செய்த, மருமகன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில்  பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.

இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து  காதல் திருமணம் செய்த ராமச்சந்திரன் ஆர்த்தி. மருமகன் ராமச்சந்திரனுக்கும் மாமனார் சந்திரனுக்கும் இடையை  அடிக்கடி தகராறு .  ராமச்சந்திரனை கொலை செய்த மாமனார் சந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola