”இந்தியா பாக். இனி FRIENDS” கிண்டல் அடித்த டிரம்ப் ஷெபாஸ் ஷெரீப் REACTION | Gaza War | Trump on Modi
இந்தியா ஒரு சிறந்த நாடு, என்னுடைய ஒரு நல்ல நண்பர் உச்சத்தில் இருக்கிறார்
அவர் ஒரு சிறப்பான வேலையைச் செய்துள்ளார்
பாகிஸ்தானும் இந்தியாவும் ஒன்றாக மிகவும் நன்றாக வாழப் போகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்...
சரிதான என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை பார்த்து கேட்டு சிரிக்கிறார்.
அதற்கு ஷெபாஸ் ஷெரீப் ஆதரிப்பது போல் ரியாக்ஷன் கொடுத்து சிரிக்கிறார்
இந்தியாவும் பாகிஸ்தானும் இனிமேல் ஒன்றாக நன்றாக வாழப் போகிறார்கள் என்று நான் நினைக்கிறேன் என ட்ரம்ப் கூறிவிட்டு பாக்கிஸ்தான் பிரதமரை பார்த்து சரிதானே என சிரிக்கிறார். அதனை ஆமோதிப்பது போல ஷெபாஸ் ஷெரீப் கொடுத்த ரியாக்ஷன் வைரலாகி வருகிறது.
காசா போர், அதாவது இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான பேரை நிறுத்தியதில் முக்கிய பங்காற்றிய ட்ரம்ப், போர் நிறுத்தத்தை கொண்டாடவும், அதற்கான பிணைக் கைதிகள் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் இஸ்ரேலுக்கு சென்றார். அப்போது, அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உரையாற்றினார். அப்போது, இந்த ஒப்பந்தம் போரை திறம்பட முடிவுக்குக் கொண்டு வந்து மத்திய கிழக்கில் நீடித்த அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான கதவைத் திறந்ததாக அறிவித்தார்.
மேலும் பேசிய அவர் இந்தியா ஒரு சிறந்த நாடு, என்னுடைய ஒரு நல்ல நண்பர் உச்சத்தில் இருக்கிறார், அவர் ஒரு அற்புதமான வேலையைச் செய்துள்ளார். பாகிஸ்தானும் இந்தியாவும் ஒன்றாக மிகவும் நன்றாக வாழப் போகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்... சரிதான என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை பார்த்து கேட்டு சிரிக்கிறார். அதற்கு ஷெபாஸ் ஷெரீப் ஆதரிப்பது போல் ரியாக்ஷன் கொடுத்து சிரிக்கிறார். இதில் பாகிஸ்தான் பிரதமர் கொடுத்த ரியாக்ஷன் வைரலாகி வருகிறது.