மேலும் அறிய

GTA 5 Update: GTA 5 ரசிகர்களுக்கு காயில் ராக்கெட் வோல்டிக் கார் இலவசம்..நாளை கடைசி நாள் - டவுன்லோடு செய்வது எப்படி?

ஜிடிஏ 5, ஆன்லைன் வெர்ஷனில் கடைசி கட்டத்தில் விளையாடி வரும் ரசிகர்களுக்கு காத்திருக்கும் நாட்களை மகிழ்ச்சியாக மாற்றும் பொருட்டு இன்னொரு ஆஃபரை ராக்ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது.

90ஸ் கிட்ஸின் பேவரைட் விளையாட்டான ஜி.டி.ஏ 6 (GTA 6) வெளியாகும் தேதி தள்ளிப்போய் கொண்டிருக்கும் நிலையில் அதன் ரசிகர்களுக்கு ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனம் அற்புதமான ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது. 

Grand Theft Auto என அழைக்கப்படும் GTA கேம் பலராலும் மறக்க முடியாத ஒரு விளையாட்டாகும். வாகனங்கள் திருட்டை மையமாக கொண்ட இந்த விளையாட்டு 5வது சீசன் வெளியாகி 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இந்த பாகம் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து ஜிடிஏ 6வது சீசன் இந்த மே மாதத்தில் வெளியாக வேண்டியது. ஆனால் அதன் வெளியீட்டு தேதி 6 மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி வரும் நவம்பர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் ஏமாற்றமடைந்துள்ளனர். 

உலக  அளவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் ஜிடிஏ 6 வெளியீட்டை எதிர்நோக்கி இருக்கும் நிலையில் கால தாமதத்தால் ஏமாற்றமடைந்த ரசிகர்களை சமாதானப்படுத்தும் வண்ணம் அவ்வப்போது 5வது எடிஷனில் சில சலுகைகளை ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனம் அறிவித்து வந்தது. அதன்படி, ஜிடிஏ 5 மற்றும் ஜிடிஏ ஆன்லைன் ஆகிய இரண்டு எடிசனின் கடைசி கட்டத்தில் விளையாடி வரும் ரசிகர்களுக்கு காத்திருக்கும் நாட்களை மகிழ்ச்சியாக மாற்றும் பொருட்டு இன்னொரு ஆஃபரை ராக்ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி இந்த விளையாட்டில் வரும் காயில் ராக்கெட் வோல்டிக்(Coil Rocket Voltic) காரை  இலவசமாக பெற்று பயன்படுத்தலாம் என சொல்லப்பட்டுள்ளது. முன்னதாக இந்த காரை பெற நாம் பல மில்லியன்கள் மதிப்பு கொண்ட பணத்தை சேமிக்கும் சூழல் இருந்தது. தற்போது இந்த காரை இலவசமாக பெறலாம். 

மார்ச் 19 முதல் 25 வரை இதற்காக காலக்கெடுவானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த காரைப் பெற்று உங்களுக்கு பரீட்சையமான ஜிடிஏ தெருக்களில் இந்த காரை ஓட்டி மகிழுங்கள் என ராக்ஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இலவசமாக டவுன்லோடு செய்வது எப்படி?

நீங்கள் ஜிடிஏ ஆன்லைனில் இதனை பதிவிறக்கம் செய்ய ஏதேனும் ஒரு லாபிக்குச் சென்று அதன்மூலம் Warstock Cache & Carry என்ற இணையதள பக்கத்தில் செல்ல வேண்டும். இங்கு தனித்துவம் வாய்ந்த வாகனங்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவை கிடைக்கும் தளமாகும். இங்கு சென்று நாம் இலவசமாக பெறலாம். அதேசமயம் வழக்கமான Legendary Motorsport தளத்திற்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு காயில் ராக்கெட் வோல்டிக் கார் அதற்கான குறியீட்டுடன் இருக்கும்.

இந்த கார் மணிக்கு 200.77 கி.மீ. வேகத்தை எட்டக்கூடியது என்பதால் இதனை சாதாரணமான இடங்களில் பயன்படுத்த முடியாது. இருந்தாலும் ஜிடிஏ 5வது எடிஷன் விளையாடுபவர்களுக்கு இந்த ஆஃபர் ஒரு வரப்பிரசாதம் தான்.  

தலைப்பு செய்திகள்

MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்... பட்ஜெட் விலையில் Quantum Energy Plasma இ ஸ்கூட்டர்! எவ்ளோ?
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்... பட்ஜெட் விலையில் Quantum Energy Plasma இ ஸ்கூட்டர்! எவ்ளோ?
Mekdatu: கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
Aadi Perukku Registration : ஆடிப்பெருக்கில் பத்திர பதிவு செய்ய திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு பதிவுத்துறை அசத்தல் அறிவிப்பு
ஆடிப்பெருக்கில் பத்திர பதிவு செய்ய திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு பதிவுத்துறை அசத்தல் அறிவிப்பு
Gold and silver rate today : தொடர்ந்து உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
தொடர்ந்து உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
Embed widget