மேலும் அறிய

VLC மீடியா பிளேயர் இந்தியாவில் தடையா? டவுன்லோடு செய்ய முடியுமா? முழு விவரம்!

மைக்ரோ சாஃப்ட் ஸ்டோர் , ஆப்ஸ் ஸ்டோர் , பிளே ஸ்டோர் உள்ளிட்டவைகளில் இன்னும் VLC மீடியா பிளேயர் செயலிகள் பயன்பாட்டில்தான் இருக்கின்றன.


VLC மீடியா பிளேயருக்கு தடை ?

இன்றைய காலக்கட்டம் ஸ்மார்ட் வேர்ல்டாக மாறிவிட்டது. நாள்தோறும் புதிய புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய புதிய செயலிகள் வந்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் இவையெல்லாம் வருவதற்கு முன்பாக நாம் அதிகம் பயன்படுத்திய நாஸ்டாலஜிக் செயலி ஒன்று உள்ளது. அதுதான் VLC.  வீடியோக்களை பிளே செய்ய பெரிதும் பயன்படுத்தப்பட்ட இந்த விடியோ பிளேயரை இந்தியாவில் தடை செய்வதாக செய்திகள் வெளியாகியுள்ளது. வீடியோ லேன் பிராஜக்ட் என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட  இந்த மீடியா பிளேயர் இந்தியாவில் இயங்காது என சமந்தப்பட்ட நிறுவனமோ அல்லது இந்திய அரசோ  எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை 


VLC மீடியா பிளேயர் இந்தியாவில் தடையா? டவுன்லோடு செய்ய முடியுமா? முழு விவரம்!

 

ஏன் தடை ?

இந்த தடைக்கு காரணம் என்னவென்று சரியாக தெரியவில்லை. ஆனால் சீனாவில் இருந்து செயல்படும் சிகாடா (Cicada) என்ற சைபர் அட்டாக் குழுவினரால் VLC முடக்கப்பட்டதே இதற்கான காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது.ஏற்கனவே பலமுறை வி.எல்.சி மீடியா பிளேயர் சைபர் தாக்குதலுக்கு உள்ளானது நாம் அறிந்ததே . அதனால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. 

ஆப் ஸ்டார்களில் கிடைக்கிறது :

ஆனால் தடை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. பிறகு  எப்படி தடை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது என நீங்கள் கேட்கலாம் . சமீபத்தில் பல பயனர்கள் videolan.org என்னும் அதிகாரப்பூர்வ தளம் வாயிலாக  VLC மீடியா பிளேயரை திறக்க முற்ப்பட்டிருக்கின்றனர் ஆனால் தளம் திறக்கவில்லை.ஆனால் மைக்ரோ சாஃப்ட் ஸ்டோர் , ஆப்ஸ் ஸ்டோர் , பிளே ஸ்டோர் உள்ளிட்டவைகளில் இன்னும் VLC மீடியா பிளேயர் செயலிகள் பயன்பாட்டில்தான் இருக்கின்றன. அதன் வாயிலாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் . அதே போல முன்பு பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வரும் வி.எல்.சி பிளேயரையும் பயன்படுத்த முடிகிறது. 


VLC மீடியா பிளேயர் இந்தியாவில் தடையா? டவுன்லோடு செய்ய முடியுமா? முழு விவரம்!

எப்படி பதிவிறக்கம் செய்யலாம்? 

videolan.org  தளத்தில் இருந்து பிளேயரை அனுக முடியாததற்கு சர்வர் பிரச்சனை ஒரு காரணமாக இருக்கலாம். மேலும் கேட்ஜெட் நவ்  பத்திரிக்கையாளர்கள் கூகிள் தேடலைச் செய்து, பரிந்துரையிலிருந்து 'விஎல்சி' குறிச்சொல்லைக் கிளிக் செய்தவுடன், வலைத்தளம் விண்டோஸ் லேப்டாப்பில் திறக்கப்பட்டது என தெரிவிக்கின்றனர் . “www.videolan.org/vlc/ என்னும் இணையதளம் வாயிலாக அவர்கள் பதிவிறக்கம் செய்ததாக தெரிவிக்கின்றனர். இதற்காக எட்ஜ் மற்றும் குரோம் பிரவுசரை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர் . இரண்டு , மூன்று முறை முயற்சி செய்து பாருங்கள் நீங்களும் தளத்தை அனுகி ,  VLC மீடியா பிளேயரை பதிவிறக்கம் செய்துக்கொள்ள முடியும் . மேற்க்கண்ட முயற்சி உங்களுக்கு வேலை செய்யவில்லை என்றால் மூன்றாம் தரப்பு வலைத்தளங்களை பயன்படுத்தலாம் . ஆனால் அவற்றை பயன்படுத்துவதற்கு முன்னதாக அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவது அவசியம் . இல்லையென்றால் புதிய வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 

 

தலைப்பு செய்திகள்

Samsung Galaxy S25 Ultra Discount: சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா உங்க கனவு போனா.? ரூ.45,000 கம்மியா கிடைக்கப்போகுது.. அள்ளிடுங்க.!
சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா உங்க கனவு போனா.? ரூ.45,000 கம்மியா கிடைக்கப்போகுது.. அள்ளிடுங்க.!
WhatsApp New Update: வாட்ஸ்அப்பில் அதிரடி மாற்றம்: இனி போன் நம்பர் தேவையில்லை, ‘யூசர் நேம்’ இருந்தால் போதும்!
WhatsApp New Update: வாட்ஸ்அப்பில் அதிரடி மாற்றம்: இனி போன் நம்பர் தேவையில்லை, ‘யூசர் நேம்’ இருந்தால் போதும்!
ஐபோன் கேட்ட காதலி..! சென்னையில் அரங்கேறிய சினிமா பாணி திருட்டு.. காட்டிக்கொடுத்த 'வரிக்குதிரை' சட்டை!
ஐபோன் கேட்ட காதலி..! சென்னையில் அரங்கேறிய சினிமா பாணி திருட்டு.. காட்டிக்கொடுத்த சட்டை!
OnePlus N6: அடேங்கப்பா.! 8000 mAh பேட்டரி; DSLR போன்ற கேமரா; அடிச்சுத் தூக்கும் ஒன்பிளஸ் N6; விலையும் கம்மிதான்.?
அடேங்கப்பா.! 8000 mAh பேட்டரி; DSLR போன்ற கேமரா; அடிச்சுத் தூக்கும் ஒன்பிளஸ் N6; விலையும் கம்மிதான்.?

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs TVK Govt.: “கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது“: பொளந்து கட்டிய உதயநிதி
“கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது“: பொளந்து கட்டிய உதயநிதி
Exclusive : ‘அரசு வழக்கறிஞர்களின் பட்டியலை அனுப்பிய காங்கிரஸ்’ அதிர்ச்சியில் தவெக அரசு..!
‘பட்டியலை அனுப்பிய காங்கிரஸ்’ அதிர்ச்சியில் தவெக அரசு..!
Gold Silver Rate July 2nd: ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
‘Edappadi Palanisamy : போறவங்க போங்க’ மதிமுக மாதிரி அதிமுக நடத்திக்குறேன் – தில் எடப்பாடி..!
‘மதிமுக மாதிரி அதிமுகவை நடத்திகிறேன்’ தில் எடப்பாடி..!
சோஷியல் மீடியா மூலம் ஆட்சியையே மாத்தினீங்க; மேகதாது அணைக்கும் குரல் கொடுங்க- இளைஞர்களுக்கு அன்புமணி அழைப்பு!
சோஷியல் மீடியா மூலம் ஆட்சியையே மாத்தினீங்க; மேகதாது அணைக்கும் குரல் கொடுங்க- இளைஞர்களுக்கு அன்புமணி அழைப்பு!
கே.ஜி. முதல் பி.ஜி. வரை; முழுவதும் இலவசக் கல்வி- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கே.ஜி. முதல் பி.ஜி. வரை; முழுவதும் இலவசக் கல்வி- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Samsung Galaxy S25 Ultra Discount: சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா உங்க கனவு போனா.? ரூ.45,000 கம்மியா கிடைக்கப்போகுது.. அள்ளிடுங்க.!
சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா உங்க கனவு போனா.? ரூ.45,000 கம்மியா கிடைக்கப்போகுது.. அள்ளிடுங்க.!
Skoda Kodiaq RS Sold Out: தரமான சம்பவம்.! ரூ.67 லட்சம் ஸ்கோடா கோடியாக் RS சில நிமிடங்கள்ல விற்றுத் தீர்ந்தது எப்படி.? அதுல என்ன இருக்கு.?
தரமான சம்பவம்.! ரூ.67 லட்சம் ஸ்கோடா கோடியாக் RS சில நிமிடங்கள்ல விற்றுத் தீர்ந்தது எப்படி.? அதுல என்ன இருக்கு.?
Embed widget