மேலும் அறிய

Micromax IN Note 2 | விட்ட இடத்தை பிடிக்கணும்..! மாஸ்டர் ப்ளானுடன் மைக்ரோமேக்ஸ்! களமிறங்கும் Micromax IN Note 2!

இந்த மொபைல் 30W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது என்பதையும் இதன் ப்ராஸஸர் மீடியா டேக் ஹீலியோ ஜி95 என்பதையும் இரு வேறு ட்விட்டர் பதிவுகள் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 ஜனவரி 25 அன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. நிறுவனம் இட்டுள்ள டுவீட் மூலம் மாடலின் பெயர் வடிவமைப்பு, வண்ணங்கள் மற்றும் வெளியீட்டு தேதியை உறுதி செய்திருக்கிறது. மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 பிளிப்கார்ட்டில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் தற்போது வரை நிறுவனம் இதன் விற்பனை விவரங்களை பகிர்ந்து கொள்ளவில்லை. கிடைத்துள்ள தகவல்களின்படி இந்த மொபைல் போன் ரூ.15000 என்ற விலைப்பிரிவில் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வரை வரவில்லை. மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 என்னென்ன ஸ்பெசிபிகேஷன்ஸ் உடன் வருகிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.

இந்த மொபைல் சாதனம் 30W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது என்பதையும் இதன் ப்ராஸஸர் மீடியா டேக் ஹீலியோ ஜி95 என்பதையும் இரு வேறு ட்விட்டர் பதிவுகள் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 "க்ளாஸ் ஃபினிஷ்" வடிமைப்போடு வரும் எனத் தகவல்கள் தெரிவிக்கிறது. இது உண்மையான கண்ணாடி பேனலாக இருக்குமா அல்லது கண்ணாடி போன்ற தோற்றத்தை தரும் பிளாஸ்டிக் பேனலாக இருக்குமா என்ற தகவல்கள் தெளிவாக தெரியவில்லை. இதன் கலர் வேரியன்ட்களை பொறுத்த வரையில், இது ப்ளூ மறறும் பழுப்பு நிற ஆப்ஷன்களுடன் வரும் எனவும் இது பின்புறத்தில் குவாட் கேமரா வடிவமைப்போடு வரும் எனவும் கூறப்படுகிறது.

மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 இன் மொபைல் குறித்த வேறெந்த  விவரங்களை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இதுவரை வெளியான உத்தேச தகவல்களை வைத்து பார்க்கும்போது, இந்த ஸ்மார்ட்போனானது 6.43 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே உடன் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைல் 48 மேகாபிக்சல் கேமராவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஒரு 5 மேகாபிக்சல் கேமராவுக்கு இரண்டு 2 மேகாபிக்சல் கேமராவும் சேர்ந்து க்வாட் கோர் கேமராவாக வரும் என்று தெரிகிறது. 

இந்த மொபைல் 6GB மற்றும் 8GB ரேம் கொண்ட இரு மாடல்களில் வருகின்றன. அதில் 64GB மற்றும் 128GB என்ற வேரியன்ட்கள் உள்ளன. இந்த மொபைலில் 5000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. அத்துடன் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் சைட் மவுண்டடாக வருகிறது. மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 முன்னோடியான மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 டிவைஸ் வடிவமைப்பு குறித்து பார்க்கையில், இது 6.67 இன்ச் முழு எச்டி ப்ளஸ் ஐபிஎஸ் டிஸ்ப்ளே வசதியோடு மீடியோ ஹீலியோ ஜி85 ப்ராசசர் மூலம் இயக்கப்படும் எனவும் இது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு இயக்கப்படுகிறது. அதேபோல் மைக்ரோமேக்ஸ் இன் 2பி விலை அதிகரித்து சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. 

Micromax IN Note 2 | விட்ட இடத்தை பிடிக்கணும்..! மாஸ்டர் ப்ளானுடன் மைக்ரோமேக்ஸ்! களமிறங்கும் Micromax IN Note 2!

மைக்ரோமேக்ஸ் இன் 2B விலை அதிகரித்த நிலையில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தங்களது அனைத்து ஸ்மார்ட்போனின் விலையையும் தற்போது ரூ. 500 உயர்த்தியுள்ளது. மைக்ரோமேக்ஸ் இந்தியாவில் ஸ்மார்ட்போனின் இரண்டு வகைகளை வழங்குகிறது மற்றும் அவை இரண்டும் விலை உயர்வைப் பெற்றுள்ளன. 4 ஜிபி+64 ஜிபி கொண்ட மொபைல் இப்போது ரூ .8,499 விலையிலும், 6 ஜிபி+64 ஜிபி கொண்ட மற்றொரு மாடல் ரூ. 9,499 விலைக்கும் கிடைக்கிறது. மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ப்ரோ மொபைலின் உத்தேச ஸ்பெசிபிகேஷன்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது. கிடைத்த தகவல்களின்படி, இந்த டிவைஸ் மீடியாடெக் ஹீலியோ ஜி 90 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Mobile Hacking Alert: உங்கள் மொபைல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? - கண்டுபிடிக்க எளிய வழிகள் இதோ!
Mobile Hacking Alert: உங்கள் மொபைல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? - கண்டுபிடிக்க எளிய வழிகள் இதோ!
TRP Freeze: நியூஸ் சேனல்களுக்கு ஆப்படித்த மத்திய அரசு..! கல்லா கட்டுவதில் சிக்கல் - தேர்தல் நேரத்தில் இப்படியா?
TRP Freeze: நியூஸ் சேனல்களுக்கு ஆப்படித்த மத்திய அரசு..! கல்லா கட்டுவதில் சிக்கல் - தேர்தல் நேரத்தில் இப்படியா?
ஸ்பேம் கால்களுக்கு செக்.. டிராய் எடுத்த அதிரடி நடவடிக்கை! முழு விவரம்
ஸ்பேம் கால்களுக்கு செக்.. டிராய் எடுத்த அதிரடி நடவடிக்கை! முழு விவரம்
iPhone 17: ரூ.20 ஆயிரம் கம்மி விலையில் ஐபோன் 17 ப்ரோ - எப்படி சாத்தியம்? அதிரடியான ஆஃபரை பெற டிப்ஸ்..
iPhone 17: ரூ.20 ஆயிரம் கம்மி விலையில் ஐபோன் 17 ப்ரோ - எப்படி சாத்தியம்? அதிரடியான ஆஃபரை பெற டிப்ஸ்..
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK
Kiruthiga Udhayanidhi | ”பிரச்சனைல மாட்டிக்காதீங்க”விஜய்க்கு மறைமுக ADVICE?கிருத்திகா உதயநிதி அதிரடி
Vijay Sangeetha Divorce | PRESS MEET-க்கு ரெடி!அதிரடி காட்டும் சங்கீதா இறங்கி வந்த விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS: நேத்து வந்த ஓ.பி.எஸ்.க்கு MLA சீட்டா? மன உளைச்சலில் தேனி மாவட்ட திமுக!
OPS: நேத்து வந்த ஓ.பி.எஸ்.க்கு MLA சீட்டா? மன உளைச்சலில் தேனி மாவட்ட திமுக!
Governor Salary: ஒரே நபர்.. மூன்று பதவிகள்! ஆளுநர்களின் சம்பள ரகசியம் இதுதான்
Governor Salary: ஒரே நபர்.. மூன்று பதவிகள்! ஆளுநர்களின் சம்பள ரகசியம் இதுதான்
TVK Vijay: ‘எனக்கு வருத்தம் எல்லாம் கிடையாது” - மனைவி சங்கீதா தொடுத்த வழக்கு... முதல்முறையாக வாய் திறந்த விஜய்
‘எனக்கு வருத்தம் எல்லாம் கிடையாது” - மனைவி சங்கீதா தொடுத்த வழக்கு... முதல்முறையாக வாய் திறந்த விஜய்
Tata Offers: 3.30 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. டாடா கார்களுக்கு மார்ச் மாத தள்ளுபடி - எந்த காருக்குப்பா?
Tata Offers: 3.30 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. டாடா கார்களுக்கு மார்ச் மாத தள்ளுபடி - எந்த காருக்குப்பா?
TVK Vijay: அண்ணன் சீர் திட்டத்தை அறிவித்த விஜய்.. ஆனந்த கண்ணீர் வடித்த பெண்கள் - வீடியோவை பாருங்க!
TVK Vijay: அண்ணன் சீர் திட்டத்தை அறிவித்த விஜய்.. ஆனந்த கண்ணீர் வடித்த பெண்கள் - வீடியோவை பாருங்க!
விஜய் அதிரடி அறிவிப்பு! குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2500, இலவச சிலிண்டர்கள் & மேலும் பல!
விஜய் அதிரடி அறிவிப்பு! குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2500, இலவச சிலிண்டர்கள் & மேலும் பல!
TVK Vijay: விஜய்க்கு போட்டியாக களமிறங்கப்போகும் விசிக? தளபதிக்கு எதிராக இறங்கப்போவது இவரா?
TVK Vijay: விஜய்க்கு போட்டியாக களமிறங்கப்போகும் விசிக? தளபதிக்கு எதிராக இறங்கப்போவது இவரா?
Election 2026: பதற்றமான ஏரியாக்கள் எது? லிஸ்ட் எடுக்கும் போலீஸ்! விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் அதிரடி 'பிளான்'!
Election 2026: பதற்றமான ஏரியாக்கள் எது? லிஸ்ட் எடுக்கும் போலீஸ்! விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் அதிரடி 'பிளான்'!
Embed widget