மேலும் அறிய

YouTube Vanced: ப்ரீமியமும் இல்லை.. விளம்பரமே இல்லாமல் யூடியூப்..! மிரட்டிய கூகுளால் கடையை மூடிய ஆப்!!

ப்ரீமியம் அக்கவுண்ட் இல்லாமலேயே விளம்பரம் இல்லாமல் யூடியூப் வீடியோக்களைப் பார்க்க இந்த ஆப் உதவியது.

யூடியூப் பிரியர்களுக்கு பிடித்த செயலியான  Youtube Vanced தன்னுடைய சேவையை திடீரென நிறுத்தியுள்ளது. சட்ட ரீதியாக கூகுள் கொடுத்த எச்சரிக்கையை அடுத்து தன்னுடைய பயணத்தை நிறுத்திக்கொண்டுள்ளது Youtube Vanced.

யூடியூப்..

வீடியோ செயலிகளில் முதன்மையானது யூடியூப். எந்த வீடியோவாக இருந்தாலும் யூடியூப்பில் சென்று தேடுவதுதான் முதல்வேலை. யார் வேண்டுமென்றாலும் தனிக் கணக்கு தொடர்ந்து யூடியூப்பில் வீடியோ பதிவேற்றலாம். அதனை மற்றவர்கள் பார்க்கும் பட்சத்தில் பார்க்கும் நபர்களுக்கு ஏற்ப ஒரு தொகை கொடுக்கப்படும். இதற்காக பலரும் பல்வேறு தலைப்புகளில் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இதற்கும் சில விதிமுறைகள் உண்டு.

யூடியூப் நிறுவனம் Community Guidelines என்ற பெயரில் சமூக வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த நெறிமுறைகள் யூடியூப் தளத்தில் பதிவிடப்படும் வீடியோ, கமெண்ட், லைக்ஸ், முகப்புப் படம் முதலான அனைத்திற்கும் பொருந்தும். மேலும், இவை யூடியூப் தளத்தில் எந்த வகையான படைப்புகள் இடம்பெறக் கூடாது என்பதைத் தீர்மானிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளன. 

இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை யூடியூப் நிறுவனம் மனிதர்கள், செயற்கைத் தொழில்நுட்பம் ஆகிய இரு தரப்பின் மூலமாகவும் அமல்படுத்துகிறது. மேலும், இந்த நெறிமுறைகள் ஒரு சேனல் உரிமையாளரின் பின்னணி, அரசியல் நிலைப்பாடு, அதிகாரம் முதலான எந்த அடிப்படையிலும் பாகுபாடு பார்க்காமல் அனைவருக்கும் பொதுவாக அமல்படுத்தப்பட்டிருப்பதாக யூடியூப் நிறுவனம் அறிவித்துள்ளது. தொழில்நுட்பத்தின் மூலம் மோசடி நடவடிக்கைகள் மேற்கொண்டால் யூடியூப் சேனல் நீக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

விளம்பரங்கள்..

வீடியோ நடுவே ஓடும் விளம்பரங்களை வைத்து யூடியூப் காசு பார்க்கிறது. உங்களுக்கு விளம்பரங்கள் தேவை இல்லையென்றாலும் அதற்காகவும் தனி ப்ரீமியம் பேக்கேஜ் முறையை கூகுள் வைத்துள்ளது. இப்படி ஒரு திட்டமிடலாக சென்றுகொண்டிருந்தாலும் சில ஆப்கள் யூடியூப்க்கு எதிராக செயல்பட்டு வந்தன. அப்படியான ஒரு செயலிதான் Youtube Vanced. 


YouTube Vanced: ப்ரீமியமும் இல்லை.. விளம்பரமே இல்லாமல் யூடியூப்..! மிரட்டிய கூகுளால் கடையை மூடிய ஆப்!!

ப்ரீமியம் அக்கவுண்ட் இல்லாமலேயே விளம்பரம் இல்லாமல் யூடியூப் வீடியோக்களைப் பார்க்க இந்த ஆப் உதவியது. ஆனால் இந்த செயலியால் யூடியூப்பின் வருமானவே அடிவாங்கும் என்பதால் சட்டரீதியாக எச்சரிக்கை விடுத்தது கூகுள். அந்த எச்சரிக்கைக்கு Youtube Vanced பணிந்துள்ளது.

Youtube Vancedன் விளக்கம்..

இது குறித்து ட்வீட் செய்துள்ள Youtube Vanced, 'நாங்கள் சேவையை நிறுத்திக் கொள்கிறோம். இனி எங்கள் செயலியை டவுன்லோட் செய்வதற்கான லிங்க் கிடைக்காது. நீங்கள் கேட்க விரும்பாத ஒரு தகவல்தான் இது.  ஆனால் நாங்கள் செய்ய வேண்டிய தேவை. இத்தனை வருடங்கள் நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்று எனக் குறிப்பிட்டுள்ளனர். அவர்களின் தகவலின்படி  ஏற்கெனவே டவுன்லோட் செய்திருக்கும் பயனர்கள் தொடர்ந்து இந்த ஆப்பை பயன்படுத்தலாம் எனத் தெரிகிறது. ஆனால் விரைவில் அதுவும் தடைபடவும் வாய்ப்பிருக்கிறது எனக் கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

Samsung Galaxy S25 Ultra Discount: சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா உங்க கனவு போனா.? ரூ.45,000 கம்மியா கிடைக்கப்போகுது.. அள்ளிடுங்க.!
சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா உங்க கனவு போனா.? ரூ.45,000 கம்மியா கிடைக்கப்போகுது.. அள்ளிடுங்க.!
WhatsApp New Update: வாட்ஸ்அப்பில் அதிரடி மாற்றம்: இனி போன் நம்பர் தேவையில்லை, ‘யூசர் நேம்’ இருந்தால் போதும்!
WhatsApp New Update: வாட்ஸ்அப்பில் அதிரடி மாற்றம்: இனி போன் நம்பர் தேவையில்லை, ‘யூசர் நேம்’ இருந்தால் போதும்!
ஐபோன் கேட்ட காதலி..! சென்னையில் அரங்கேறிய சினிமா பாணி திருட்டு.. காட்டிக்கொடுத்த 'வரிக்குதிரை' சட்டை!
ஐபோன் கேட்ட காதலி..! சென்னையில் அரங்கேறிய சினிமா பாணி திருட்டு.. காட்டிக்கொடுத்த சட்டை!
OnePlus N6: அடேங்கப்பா.! 8000 mAh பேட்டரி; DSLR போன்ற கேமரா; அடிச்சுத் தூக்கும் ஒன்பிளஸ் N6; விலையும் கம்மிதான்.?
அடேங்கப்பா.! 8000 mAh பேட்டரி; DSLR போன்ற கேமரா; அடிச்சுத் தூக்கும் ஒன்பிளஸ் N6; விலையும் கம்மிதான்.?

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs TVK Govt.: “கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது“: பொளந்து கட்டிய உதயநிதி
“கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது“: பொளந்து கட்டிய உதயநிதி
Exclusive : ‘அரசு வழக்கறிஞர்களின் பட்டியலை அனுப்பிய காங்கிரஸ்’ அதிர்ச்சியில் தவெக அரசு..!
‘பட்டியலை அனுப்பிய காங்கிரஸ்’ அதிர்ச்சியில் தவெக அரசு..!
Gold Silver Rate July 2nd: ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
‘Edappadi Palanisamy : போறவங்க போங்க’ மதிமுக மாதிரி அதிமுக நடத்திக்குறேன் – தில் எடப்பாடி..!
‘மதிமுக மாதிரி அதிமுகவை நடத்திகிறேன்’ தில் எடப்பாடி..!
சோஷியல் மீடியா மூலம் ஆட்சியையே மாத்தினீங்க; மேகதாது அணைக்கும் குரல் கொடுங்க- இளைஞர்களுக்கு அன்புமணி அழைப்பு!
சோஷியல் மீடியா மூலம் ஆட்சியையே மாத்தினீங்க; மேகதாது அணைக்கும் குரல் கொடுங்க- இளைஞர்களுக்கு அன்புமணி அழைப்பு!
கே.ஜி. முதல் பி.ஜி. வரை; முழுவதும் இலவசக் கல்வி- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கே.ஜி. முதல் பி.ஜி. வரை; முழுவதும் இலவசக் கல்வி- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Samsung Galaxy S25 Ultra Discount: சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா உங்க கனவு போனா.? ரூ.45,000 கம்மியா கிடைக்கப்போகுது.. அள்ளிடுங்க.!
சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா உங்க கனவு போனா.? ரூ.45,000 கம்மியா கிடைக்கப்போகுது.. அள்ளிடுங்க.!
Skoda Kodiaq RS Sold Out: தரமான சம்பவம்.! ரூ.67 லட்சம் ஸ்கோடா கோடியாக் RS சில நிமிடங்கள்ல விற்றுத் தீர்ந்தது எப்படி.? அதுல என்ன இருக்கு.?
தரமான சம்பவம்.! ரூ.67 லட்சம் ஸ்கோடா கோடியாக் RS சில நிமிடங்கள்ல விற்றுத் தீர்ந்தது எப்படி.? அதுல என்ன இருக்கு.?
Embed widget