உலகம் முழுவதும் உள்ள மக்கள் இன்று ஆங்கில புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். உலகத்தில் கொரோனா பரவல் இன்னும் இருந்து கொண்டிருக்கும் போதும் ஒரு சில நாடுகள் மக்கள் ஒன்று கூடி நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாடினர். இந்திய,ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கொரோனா பரவல் காரணமாக கூட்டமாக புத்தாண்டு கொண்டாட தடைவிதிக்கப்பட்டிருந்தது. 


 


இந்நிலையில் பொதுமக்களை போல் விளையாட்டு வீரர்களும் புத்தாண்டை தங்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளனர். அதன்படி,


விராட் கோலி:


 






இந்திய கேப்டன் விராட் கோலி தன்னுடைய மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் தென்னாப்பிரிக்காவில் புத்தாண்டை கொண்டாடினார். 


 


ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்:


 






ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தன்னுடைய மனைவியுடன் இருக்கும் படத்தை பதிவிட்டு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 


 


ரவிச்சந்திரன் அஷ்வின்:


 






இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தென்னாப்பிரிக்காவில் இந்திய வீரர்களுடன் புத்தாண்டு கொண்டாடிய படத்தை பதிவிட்டுள்ளார். 


 


ரவிசாஸ்திரி:


 






இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மும்பையிலுள்ள ஒரு நட்சத்திர விடுதியில் புத்தாண்டை கொண்டாடியுள்ளார். அதில் அவர் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் உடன் நடனம் ஆடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். 





வீரேந்திர சேவாக்:


 






இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தன்னுடைய குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடும் படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். 


 


ஹர்பஜன் சிங்:




இந்திய சூழல் ஜாம்பவான் வீரர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங் தன்னுடைய குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாடும் படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 


 


கிறிஸ்டியானா ரொனால்டோ:


 






போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் படத்தை பதிவிட்டு அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 2021ஆம் ஆண்டில் அவர் 47 கோல்களை அடித்து அசத்தினார். அத்துடன் யுரோ கோப்பை கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். 


மேலும் படிக்க: 9 சீசனில் 8 முறை சாம்பியன்ஸ் ; U19 ஆசிய கோப்பையில் ரெக்கார்டு படைத்த இந்திய அணி