இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பான வெற்றி பெற்றது. நாளை மறுநாள் ஜோகானிஸ்பேர்கில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. இந்தச் சூழலில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் தென்னாப்பிரிக்காவில் புத்தாண்டு கொண்டாடினர். இதுதொடர்பான படங்கள் இணையத்தில் வேகமாக வைரலானது. 


 


இந்நிலையில்  கேப்டன் விராட் கோலியின் குழந்தை வாமிகா தொடர்பான வீடியோ ஒன்று தற்போது இன்ஸ்டாகிராமில் வேகமாக வைரலாகி வருகிறது.  இது தொடர்பாக அவருடைய மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை ஸ்டேடஸாக பகிர்ந்துள்ளார். அதில், அவருடைய மகள் வாமிகா அம்மா,அம்மா என்று அழைக்கும் வகையில் ஆடியோவுடன் வீடியோ இடம்பெற்றுள்ளது. 


 






இந்த வீடியோவை அவருடைய ரசிகர்கள் பட்டாளம் எடுத்து வீடியோவாக பதிவிட்டுள்ளது. இது 2021ஆம் ஆண்டின் கடைசி நாளான நேற்று மாலை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை தற்போது வரை பலரும் பார்த்து ரசித்து வருகின்றனர். 


 


முன்னதாக நேற்று தென்னாப்பிரிக்க தொடருக்கான ஒருநாள் அணி அறிவிக்கபப்ட்டது. அதில் இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அவர்களுடன் 4 ஆண்டுகளுக்கு பிறகு ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளார். அத்துடன் ஒருநாள் தொடருக்கு நீண்ட இடைவேளைக்கு பிறகு தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் மற்றும் பந்துவீச்சாளர் சாஹல் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர். 


மேலும் படிக்க: இதுதான் புத்தாண்டு கிஃப்ட்!! நியூ இயர் சதம் அடித்து கெத்து காட்டிய டேவோன் கான்வே!