(Source: ECI/ABP News/ABP Majha)
Rebecca Cheptegei: காதலனால் பெட்ரோல் ஊற்றி கொல்லப்பட்டார் ஒலிம்பிக் வீராங்கனை!
உகாண்டாவை சேர்ந்த ஒலிம்பிக் வீராங்கனையான ரெபேக்கா செப்டேஜியை அவருடைய காதலனே பெட்ரோல் ஊற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வீராங்கனையை தீ வைத்த எறித்த காதலன்:
கடைசியாக உகாண்டா சார்பில் பாரீஸ் ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு மாரத்தான் பிரிவில் 44வது இடத்தைப் பிடித்த ரெபேக்கா செப்டேஜி சமீபத்தில் நாடு திரும்பியிருந்தார். இதன் பின் கென்யா நாட்டின் மேற்கு மகாணத்தில் உள்ள அவருக்கு சொந்தமான வீட்டில் ஓய்வில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் வைத்து ரெபேக்காவுக்கும் அவரது காதலன் டேனியலுக்கும் [Daniel Ndiema] இடையில் வாக்கு வாதம் எழுந்துள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் ரெபேக்கா மீது பெட்ரோல் ஊற்றி தீவை வைத்துள்ளார் டேனியல். இதனால் அவருக்கு 75 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தா.
இந்த நிலையில் தான் அவர் இன்று(செப்டம்பர் 5) உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக உகாண்டா தடகள கூட்டமைப்பு வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்,"குடும்ப வன்முறைக்கு சோகமாக பலியாகிய எங்கள் தடகள வீராங்கனை ரெபேக்கா செப்டேஜி இன்று அதிகாலை காலமானதை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். ஒரு கூட்டமைப்பு என்ற வகையில், இதுபோன்ற செயல்களை நாங்கள் கண்டிக்கிறோம் மற்றும் நீதிக்கு அழைப்பு விடுக்கிறோம். அவருடைய் ஆன்மா சாந்தியடையட்டும்"என்று கூறப்பட்டுள்ளது.
பாலின வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்:
கென்யா தேசிய ஒலிம்பிக் கமிட்டி வெளியிட்டுள்ள இரங்கள் பதிவில்,"உகாண்டாவின் மகளிர் மராத்தான் சாதனையாளர் மற்றும் பாரிஸ் 2024 ஒலிம்பிக் வீரராக ரெபேக்காவின் திறமையும் விடாமுயற்சியும் எப்போதும் நினைவுகூரப்படும் மற்றும் கொண்டாடப்படும்.அவரது அகால மற்றும் சோகமான மறைவு ஒரு ஆழமான இழப்பு மற்றும் இந்த கடினமான நேரத்தில் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உங்களுடன் உள்ளன, ஏனெனில் நாங்கள் அவரது பாரம்பரியத்தை மதிக்கிறோம் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்"என்று கூறியுள்ளது.
பாலின அடிப்படையிலான வன்முறையை எதிர்த்துப் போராடும் உசிகிமி என்ற அமைப்பை நிறுவிய பெண்ணிய ஆர்வலரான Njeri Wa Migwi, அவரது மரணம் பற்றி பேசியுள்ளார். அதில், 'ஆம் இது பெண் கொலைதான். நாம் பெண் கொலையை நிறுத்த வேண்டும். கென்யாவில் பிறந்த தடகள வீரர் டமரிஸ் முதுவா பிளவு பள்ளத்தாக்கில் உலகப் புகழ்பெற்ற இட்டனில் இறந்து கிடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. 2021 ஆம் ஆண்டில், சாதனை படைத்த கென்ய ஓட்டப்பந்தய வீராங்கனையான ஆக்னஸ் டிரோப், 25, 2021 ஆம் ஆண்டில் இடெனில் உள்ள அவரது வீட்டில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். நாட்டில் 34 சதவீத பெண்கள் 15 வயதிலிருந்தே உடல் ரீதியான வன்முறையை அனுபவிப்பதாக "அவர் கூறினார்.