(Source: ECI/ABP News/ABP Majha)
Paris Olympics 2024: வெண்கலம் வென்ற அமன் ஷெராவத்.. தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்திய பிரதமர்!
ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற அமன் ஷெராவத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக் 2024:
பாரீஸ் ஒலிம்பிக் 2024 தொடரானது இன்றுடன் முடிந்து நாளை நிறைவு விழா நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. இந்த 33ஆவது ஒலிம்பிக் தொடரில் இதுவரையில் நடைபெற்ற போட்டிகளின்படி, அமெரிக்கா 33 தங்கம், 39 வெள்ளி மற்றும் 39 வெண்கலப் பதக்கம் என்று மொத்தமாக 111 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. சீனா 33 தங்கம், 26 வெள்ளி மற்றும் 23 வெண்கலம் என்று 82 பதக்கங்களுடன் 2வது இடத்தில் உள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை ஆடவருக்கான ஃப்ரீஸ்டைல் 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய மல்யுத்த வீரர் ஷெராவத் வெண்கலப்பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. இதன் மூலமாக இளம் வயதில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரராக அமன் செராவத் சாதனை படைத்தார்.
பிரதமர் மோடி வாழ்த்து:
இதன் மூலமாக இந்தியா 5 வெண்கலப் பதக்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் என்று மொத்தமாக 6 பதக்கங்களை கைப்பற்றி தற்போது பதக்கப் பட்டியலில் 69ஆவது இடத்தில் உள்ளது.
VIDEO | Paris Olympics 2024: PM Modi speaks to wrestler Aman Sehrawat, who won Bronze medal in 57-kg free-style category after defeating Puerto Rico's Darian Cruz 13-5.#Olympics2024WithPTI #ParisOlympics2024 pic.twitter.com/gnkAPiD9s0
— Press Trust of India (@PTI_News) August 10, 2024
இந்த நிலையில் தான் பதக்கம் வென்ற அமன் ஷெராவத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.