Paris Olympics 2024:ஜஸ்ட் மிஸ்..பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்ட அர்ஜூன் பபுதா! ரசிகர்கள் ஷாக்
பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அர்ஜூன் பபுதா பதக்கத்தை தவறவிட்டார்
பாரீஸ் ஒலிம்பிக் 2024:
பாரீஸ் ஒலிம்பிக்கில் 3 வது நாள் ஆட்டம் இன்று(ஜூலை 29)விறுவிறுப்ப்டன் நடைபெற்று வருகிறது. இதில் 10 மீட்டர் ரைபிள் துப்பாக்கிச்சுடுதல் போட்டி நடைபெற்றது. அந்தவகையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அர்ஜூன் பபுதா இன்றைய போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அவர் இன்றைய போட்டியில் ஏமாற்றம் அளித்தார். அதாவது 0.9 புள்ளிகள் வித்தியாசத்தில் பதக்கத்தை தவறவிட்டார்.
பதக்கத்தை தவறவிட்ட அர்ஜூன்:
BREAKING: MASSIVE HEARTBREAK for ARJUN 💔
— India_AllSports (@India_AllSports) July 29, 2024
Arjun finishes 4th in FINAL of 10m Air Rifle event. #Paris2024 #Paris2024withIAS pic.twitter.com/R6sWGWCrZL
நான்காவது சுற்றில் 208.4 புள்ளிகளை அவர் பெற்றார். ஜெர்மனியை சேர்ந்த மிரான் மரிசிச் 209.8 புள்ளிகளைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை தட்டிச்சென்றார். இப்பிரிவில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விக்டர் லின்கிரென் 251.4 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார். சீனாவைச் சேர்ந்த லிஹாஹோ ஷேங் 252.2 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.