Olympics 2024: வாழ்நாள் கௌரவம்! இந்தியாவிற்காக ஒலிம்பிக்கில் தேசிய கொடி ஏந்தியவர்கள் யார்? யார்?
புகழ்பெற்ற ஒலிம்பிக் தொடரில் தேசிய கொடியை ஏந்திச் செல்வதை வாழ்நாள் கௌரவமாக வீரர்கள் கருதுவார்கள். இந்தியாவிற்காக இதுவரை தேசிய கொடியை ஏந்தியவர்களின் விவரங்களை கீழே காணலாம்.
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் வரும் ஜூலை 26ம் தேதி ஒலிம்பிக் திருவிழா தொடங்குகிறது. நூற்றுக்கணக்கான விளையாட்டுகள், ஆயிரக்கணக்கான வீரர்கள், லட்சக்கணக்கான ரசிகர்கள் என மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
சமீப காலமாக இந்தியாவும் ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 1920ம் ஆண்டு முதல் ஒலிம்பிக்கில் பங்கேற்று வரும் இந்திய அணிக்காக இதுவரை தேசிய கொடியை ஏந்திச் சென்றவர்கள் யார்? யார்? என்பதை கீழே விரிவாக காணலாம்.
1920ம் ஆண்டு - பூர்மா பானர்ஜி - தடகளம்
1932ம் ஆண்டு - லால்ஷா போகரி - ஹாக்கி
1936ம் ஆண்டு - தயான் சந்த் - ஹாக்கி
1948ம் ஆண்டு - தலிமேரன் ஆவ் - கால்பந்து
1952ம் ஆண்டு - பல்பீர்சிங் - ஹாக்கி
1956ம் ஆண்டு - பல்பீர்சிங் - ஹாக்கி
1964ம் ஆண்டு -குர்பசன்சிங் ரந்த்வா - தடகளம்
1972ம் ஆண்டு - தேஸ்மந்த் நெவிலே - தடகளம்
1984ம் ஆண்டு - ஜாபர் இக்பால் - ஹாக்கி
1988ம் ஆண்டு - கர்தார் சிங் - மல்யுத்தம்
1992ம் ஆண்டு- ஷைனி ஆப்ரகாம்-வில்சன் – தடகளம்
1996ம் ஆண்டு - பர்கத் சிங் - ஹாக்கி
2000ம் ஆண்டு - லியாண்டயர் பயஸ் - டென்னிஸ்
2004ம் ஆண்டு - அஞ்சு பாபி ஜார்ஜ் - தடகளம்
2008ம் ஆண்டு - ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் – துப்பாக்கிச்சுடுதல்
2012ம் ஆண்டு – சுஷில்குமார் - மல்யுத்தம்
2016ம் ஆண்டு - அபினவ் பிந்த்ரா - துப்பாக்கிச்சுடுதல்
2020ம் ஆண்டு - மேரிகோம்- மன்ப்ரீத்சிங் - குத்துச்சண்டை, ஹாக்கி
2024ம் ஆண்டு - சரத்கமல் - டேபிள் டென்னிஸ்
இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணிக்கான தேசிய கொடியை ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ஏந்திச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் கடந்த ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக தங்கப்பதக்கத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.