Lakshya Sen: பாரீஸ் ஒலிம்பிக்..பதக்கத்தை கோட்டை விட்ட லக்ஷ்யா சென்! ரசிகர்கள் ஷாக்
பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று (ஆகஸ்ட் 5) நடைபெற்ற பேட்மிண்டன் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் லக்ஷ்யா சென் தோல்வி அடைந்தார்.
பாரீஸ் ஒலிம்பிக் 2024:
பாரீஸ் ஒலிம்பிக் 2024 விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதில் புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை சீனா 51 பதக்கங்களுடன் முதல் இடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், மூன்றாவது இடத்தில் பிரான்ஸ் மற்றும் நான்காவது இடத்தில் ஆஸ்திரேலிய அணியும் உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 3 வெண்கலப்பதக்கங்களுடன் 58 வது இடத்தில் உள்ளது.
பதக்கத்தை தவறவிட்ட லக்ஷ்யா சென்:
இந்நிலையில் தான் இன்று (ஆகஸ்ட் 5) நடைபெற்ற பேட்மிண்டன் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் லக்ஷ்யா சென் விளையாடினார். அதன்படி மலேசிய வீரர் லீ ஜி ஜியாவை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் லக்ஷ்யா சென்.
✨ Showtime folks ✨
— India_AllSports (@India_AllSports) August 5, 2024
Lakshya Sen is in action NOW in Bronze medal match taking on WR 7 Lee Zii Jia. #Badminton #Paris2024 #Paris2024withIAS pic.twitter.com/Z8cYJmFTrk
ஓபனிங் போட்டியில் தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். அதன்படி ஓபனிங் போட்டியை 21- 13 என்ற செட் கணக்கில் தன் வசப்படுத்தினார். இரண்டாவது ஆட்டத்தை மலேசிய வீரர் லீ ஜி ஜியா 21- 16 என்ற கணக்கில் வென்றார். ஆட்ட நேர முடிவில் 13 -21, 21 -16, 21-11 என்ற செட் கணக்கில் மலேசிய வீரர் லீ ஜி ஜியா வென்றார். இதன் மூலம் அவர் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.