India vs Belgium, Hockey Semi-Final: ஆடவர் ஹாக்கி: இந்தியாவை வென்றது ‛பெனால்டி’ பெல்ஜியம்; வெண்கல வாய்ப்பு உண்டு!
பெனால்டி வாய்ப்புகளை கோல் அடிக்காமல் தடுத்திருந்தாலும், சில வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொண்ட பெல்ஜியம் அணி, கோல் அடித்து முன்னேறியது.
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டி அரை இறுதி போட்டியில் இந்தியா – பெல்ஜியம் அணிகள் இன்று மோதின. நடப்பு சாம்பியனான பெல்ஜியத்தை எதிர்த்து இந்திய அணி களமிறங்கியது.
இந்திய ஹாக்கி அணி கடைசியாக 1980ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது. அதன்பின்னர் நடைபெற்ற எந்த ஒரு ஒலிம்பிக் போட்டியிலும் இந்திய அணி பதக்கம் வெல்லவில்லை. அந்த முறை ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதி போட்டி இல்லை. புள்ளிகளின் அடிப்படையில் இந்திய அணி தங்கப்பதக்கத்திற்கான போட்டியில் விளையாடியது. கடைசியாக 1972ஆம் ஆண்டு ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. அதன்பின்னர் தற்போது 49 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளதால், இந்த போட்டி மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.
போட்டி தொடங்கிய முதல் காலிறுதியில், 2-1 என இந்தியா லீட் எடுத்தது. போட்டியின் முதல் சில நிமிடங்களிலேயே கிடைத்த பெனால்டி வாய்ப்புகளை பயன்படுத்தி இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தனர். அடுத்த சில நிமிடங்களில், இந்தியாவுக்கு இரண்டாவது கோலை அடித்தார் மந்தீப். இதனால், முதல் பாதியின் முடிவில் இந்தியாவுக்கு முன்னிலை கிடைத்தது. போட்டியின் 17-வது நிமிடத்தில், பெல்ஜியம் அணிக்கு அடுத்தடுத்து கிடைத்த 3 பெனால்டி கார்னர்களையும் இந்திய அணி தடுத்தது.
17'
— Hockey India (@TheHockeyIndia) August 3, 2021
🇧🇪 Penalty Corner given
🇮🇳 Penalty Corner saved
🇧🇪 PC given
🇮🇳 PC saved
🇧🇪 PC given again
🇮🇳 PC saved again
Phew! 😅
🇮🇳 2:1 🇧🇪#INDvBEL #HaiTayyar #IndiaKaGame #Tokyo2020 #TeamIndia #TokyoTogether #StrongerTogether #HockeyInvites #WeAreTeamIndia #Hockey
ஆனால், மீண்டும் 19 நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்திய பெல்ஜியம் அணி வீரர் அலெக்சாண்டர் ஹெண்ட்ரிக்ஸ், இரண்டாவது கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். போட்டி தொடக்கத்தில் முன்னிலை பெற்ற இந்திய அணி, அதன் பிறகு போட்டி சமனான நிலையில் இருந்து இரு அணிகளும் கோடி அடிப்பதில் முனைப்பாக இருந்தன.
போட்டி முழுவதும் பெனால்டி வாய்ப்புகளை பெற்று கொண்டே இருந்த பெல்ஜியம் அணி, போட்டியின் 49-வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பில் கோல் அடித்தனர். கடைசி காலிறுதி ஆட்டத்தில் கடைசி 8 நிமிடங்கள் இருந்தபோது, 3-2 என பெல்ஜியம் லீக் எடுத்தது. 7.30 நிமிடங்கள் மீதம் இருந்த நிலையில், பெல்ஜியம் அணிக்கு பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பையும் கோலாக மாற்றினார் பெல்ஜியம் அணியின் அலெக்ஸ் ஹெண்ட்ரிக். போட்டியின் கடைசி நிமிடத்திலும் கோல் அடித்த பெல்ஜியம், 5-2 என முன்னிலை பெற்றது.
News Flash: #Hockey: India give their absolute best before going down to reigning World Champion Belgium 2-5 in Semis.
— India_AllSports (@India_AllSports) August 3, 2021
Scoreline might not reflect the fight.
India will next play Bronze medal match.
Proud of your effort boys @TheHockeyIndia #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/ju59ONc4R3
இந்த போட்டி முழுவதும் எதிரணிக்கு அதிக பெனால்டி வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்தது இந்திய அணி. அதில் பெரும்பாலன வாய்ப்புகளை கோல் அடிக்காமல் தடுத்திருந்தாலும், சில வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொண்ட பெல்ஜியம் அணி, கோல் அடித்து முன்னேறியது. இது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது. போட்டி முடிவில், 5-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. இதனால் ஃபைனல்ஸ் செல்லும் வாய்ப்பை இழந்த இந்திய அணி, வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் ஆட உள்ளது. இந்த போட்டியில், ஆஸ்திரேலியா அல்லது