SRH vs KKR live score : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டி : 7 விக்கெட் வித்தியாசத்தில் SRH வெற்றி!
கேன் வில்லியம்சன் தலைமையில் ஹைதராபாத் அணியும், ஸ்ரேயாஸ் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதுகின்றன.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.
கொல்கத்தா பௌலர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி 37 பந்துகளில் 71 ரன்கள் குவித்த திரிபாதி ரசல் வீசிய 15 வது ஓவரில் அவுட்டானார்.
களமிறங்கியது முதலே அதிரடியாக விளையாடிவந்த ராகுல் திரிபாதி,21 பந்துகளில் 4 பௌண்டரிகள், 4 சிக்சர்கள் அடித்து அரைசதம் கடந்தார்.
ரசல் வீசிய 6 வது ஓவரில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வில்லியம்சன் 16 பந்துகளில் 17 ரன்கள் அடித்து க்ளீன் போல்டானார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 27 ரன்கள் எடுத்துள்ளது.
களமிறங்கியது முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷ்ரேயாஸ் ஐயர், 25 பந்துகளில் 28 அடித்து உம்ரான் மாலிக் வீசிய 10 வது ஓவரில் க்ளீன் போல்டானார்.
கொல்கத்தா அணி தொடக்கத்தில் தொடர்ந்து 3 விக்கெட்களை இழந்தநிலையில், அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது 21 பந்துகளில் 27 ரன்கள் அடித்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
5 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 31 ரன்களுடன் தடுமாறி வருகிறது. ஷ்ரேயாஸ் ஐயர் 9 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
Background
ஐ.பி.எல். தொடரின் 25வது ஆட்டத்தில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. கேன் வில்லியம்சன் தலைமையில் ஹைதராபாத் அணியும், ஸ்ரேயாஸ் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதுகின்றன.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -