போட்டுப்பார்த்த வன்னியரசு! திருமா சொன்ன கறார் பதில்! என்ன நடக்கிறது விசிகவில்?

குறைந்த பட்சம் 25 இடங்களை கேட்டுப்பெற வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அடிமட்ட தொண்டர்களின் மனநிலையும் இதுதான்

Continues below advertisement

தேர்தலில் எவ்வளவு இடங்கள் வேண்டும் என்பதை கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்தும்போதுதான் நாங்கள் முடிவு செய்வோம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

சமீபகாலமாக தமிழக அரசியல் பல பரபரப்புகளையும் தலைப்புச் செய்திகளையும் கொடுத்து வருகிறது திருமாவளவனின் விசிக. அக்கட்சியில் இருந்தபோது பல அதிரடி முடிவுகளை ஆளுங்கட்சிக்கு எதிராக எடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் விசிக தலைமை அவரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்தது. அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவில் தலைமையின் கருத்தை கேட்காமல் அரசியல் பேசியதே அவர் இடைநீக்கம் செய்யப்பட காரணம் என சொல்லப்பட்டது. ஆனால் சில நாட்களில் ஆதவ் அர்ஜுனனே கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அப்போதாவது அக்கட்சியின் உட்கட்சி பூசல் குறையும் என்று எதிர்பார்த்தால் அடுத்த புயலை கிளப்பியுள்ளார் அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் வன்னியரசு. 

விசிக துணைப்பொதுச்செயலாளர் வன்னியரசு பேசுகையில், “விசிகவை திருமாவளவன் தொடங்கியபோது எம்.பி ஆக வேண்டும், எம்.எல்.ஏ ஆக வேண்டும் என்று எண்ணி கட்சிக்கு வராதீர்கள் என்று சொன்னார். அதனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னைப்போன்றவர்கள், இளைஞர்கள் விசிகவில் அடிமட்ட தொண்டர்களாக அணி திரண்டனர். அவர்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என இந்த இயக்கத்தில் சேர்ந்தனர். தற்போது விசிக இருக்கும் வலிமைக்கு குறைந்தபட்சம் இரட்டை இலக்கத்தில் சட்டமன்றத்தில் இருக்க வேண்டும் என என்னை போன்ற அடிமட்ட தொண்டர்கள் விரும்புகின்றனர். அதற்காக கூடுதலான இடங்களை கேட்டு பெற வேண்டும் என நினைக்கின்றனர். குறைந்த பட்சம் 25 இடங்களை கேட்டுப்பெற வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அடிமட்ட தொண்டர்களின் மனநிலையும் இதுதான். இந்த இயக்கம் தமிழர்களை பாதுகாக்கக்கூடிய, தமிழர்களின் உரிமையை பாதுகாக்கக்கூடிய, சனாதனத்திற்கு எதிராக இந்தியாவில் அம்பேத்கரின் கொள்கைகளை, பெரியாரின் கொள்கைகளை பாதுகாத்துக்கொண்டிருக்கிற பேரியக்கம். வலிமையாக இயங்கி கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்திற்கு எவ்வளவு இடங்கள் என தலைவர் முடிவு எடுப்பதுதான். ஆனால் எங்கள் விருப்பத்தை நாங்கள் தலைவரிடம் சொல்வோம்” எனத் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ”தேர்தலில் எவ்வளவு இடங்கள் வேண்டும் என்பதை கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்தும்போதுதான் நாங்கள் முடிவு செய்வோம். முன் கூட்டியே இவ்வளவு இடங்கள் வேண்டும் என்றெல்லாம் ஒரு நிபந்தனையாக முன்வைக்கமாட்டோம். அப்படி எப்போதும் வைத்ததும் இல்லை. ஏற்கெனவே எங்களுக்கு பத்து தொகுதி கொடுத்திருக்கிறார்கள். அது இரட்டை இலக்கம் தான். 2011ஆம் ஆண்டில் 12 தொகுதிகள் வரை பேசி சில தவிர்க்க முடியாத காரணத்தால் 10 தொகுதிகள் என பேசி முடிவு செய்தோம். ஆகவே எங்கள் எண்ணிக்கையை பெருக்க வேண்டும். கூடுதலான இடங்களில் போட்டியிட வேண்டும் என எண்ணுவது இயல்பான ஒன்றுதான். ஒரு கட்சியில் கூட்டணியில் இருக்கும்போது பல கட்சிகள் இருப்பதால் அனுசரித்து எங்கள் முடிவை எடுப்போம்” எனத் தெரிவித்தார். 

Continues below advertisement