இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் மெல்போர்ன் மைதானத்தில் நடைப்பெற உள்ள நிலையில் ரிஷப் பண்ட்டின் வீடியோ ஒன்று இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. 


பார்டர் கவாஸ்கர் தொடர்: 


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 போட்டிகள் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்தது வருகிறது, இதன் தொடரின் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் நடந்தது, இதில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


இதையும் படிங்க: Ind vs Aus : டிஎஸ்பி சிராஜை தூக்கும் ரோகித்! நான்காவது டெஸ்டில் பெரிய மாற்றம்! கம்பீர் மாஸ்டர் பிளான்


இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைப்பெற்றது, இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து 10 விக்கெட்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


பிரிஸ்பேனில் நடைப்பெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக டிராவில் முடிந்தது.


பாக்சிங் டே டெஸ்ட்: 


இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னில் டிசம்பர் 26 முதல் தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் தற்போது 1-1 என சமநிலையில் உள்ள நிலையில் இந்த போட்டி இரு அணிகளுக்கும்ம் முக்கியம் வாய்ந்த போட்டியாக பார்க்கப்படுகிறது.


இதையும் படிங்க: PV Sindhu Marriage : பி.வி சிந்துவுக்கு டும்.. டும்.. இணையத்தில் வெளியான முதல் புகைப்படம்


சிறுமியை சந்தித்த பண்ட்: 


இந்த நிலையில் மெல்போர்ன் மைதானத்தில் பயிற்சியில் ஈடுப்பட்டிருந்த பண்ட்டை சந்திக்க சிறுமி ஒருவர் காத்திருந்தார், பயிற்சியை முடித்துவிட்டு அந்த சிறுமியை பார்க்க வந்தார், அப்போது சிறுமியின் அருகே முட்டி போட்டி குழந்தையிடம் சிறிது நேரம் உரையாடி இருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அப்போது பண்ட்டிடம் பேசிய அந்த சிறுமி, ”எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு, நான் இவ்வளவு நெருக்கத்தில் சந்தித்த முதல் கிரிக்கெட்டர் நீங்க தான்” என்று அச்சிறுமி பண்ட்டிடம் பேசியிருந்தார். 






இந்த நிலையில் சிறுமியிடம் ரிஷப் பண்ட் உரையாடும் இந்த க்யூட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் பண்ட்டின் இந்த செயல் அனைவரின் பாராட்டுதலையும் பெற்று வருகிறது.