Breaking News LIVE: தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்க திட்டம் - வன்னி அரசு

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே அறிந்து கொள்ளலாம்

சுகுமாறன் Last Updated: 23 Dec 2024 01:08 PM
தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்க திட்டம் - வன்னி அரசு

தி.மு.க.விடம் வரும் சட்டமன்ற தேர்தலில் 25 தொகுதிகள் பெற திட்டமிட்டுள்ளதாக விசிகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான வன்னி அரசு தகவல் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் அருகே சுங்கச்சாவடியைத் திறப்பதற்கு எதிராக போராட்டம்

புதியதாக அமைக்கப்பட்ட சுங்கச்சாவடியைத் திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சிதம்பரம் அருகே சுங்கச்சாவடியைத் திறப்பதற்கு கண்டனம் தெரிவித்து மக்கள் போராட்டடம் நடத்தி வருகின்றனர். 

திமுக அரசு மீது விசிக-வுக்கு எந்த அதிருப்தியும் இல்லை - திருமாவளவன்

திமுக அரசு மீது விசிக-வுக்கு எந்த அதிருப்தியும் இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

நெல்லை கொலை எதிரொலி: நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

நெல்லையில் நீதிமன்ற வளாகத்திலே நீதிபதி படுகொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

மும்மொழிக் கொள்கையை ஏற்றால் அரைமணி நேரத்தில் நிதி - அமைச்சர் அன்பில் மகேஷ்

மும்மொழிக் கொள்கையை ஏற்றால் அடுத்த அரைமணி நேரத்தில் நிதி தருவதாக மத்திய அரசு நிர்பந்தித்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 

1 மணிக்குள் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

சேலம், நாமக்கல், தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்ட்

தமிழ்நாடு அரசுப்பேருந்து ஓட்டுனர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவர்- போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

செஸ் விளையாட்டில் சாதனை படைத்த சந்திர பாபு நாயுடு பேரன்

செஸ் விளையாட்டில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் 9 வயது பேரன் தேவான்ஸ் நாரா உலக சாதனை, 175 விதமான செஸ் புதிர்களை மிக வேகமாக முடித்து காட்டி சாதனை படைத்துள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகை படுஜோராக நடக்கும் விற்பனை

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கடைகளில் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. 

Background

 குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பா? வெளியான தகவலால் பெரும் பரபரப்பு 


தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்காத மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்


மத்திய அரசின் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு என்பது வதந்தி - தமிழக அரசு விளக்கம்


வங்கக்கடலில் வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மீண்டும் உருவாகி தமிழ்நாட்டை குறிவைக்கும் புயல் சின்னமாக மாறும் என கணிப்பு


தத்துவம் இல்லாத தலைவர்களால் ரசிகர்களை மட்டுமே உருவாக்க முடியும் - விஜய்யை மறைமுகமாக சாடிய திருமாவளவன்



நெல்லையில் மருத்துவக் கழிவுகளை கொட்டிய வழக்கில் மேலும் ஒருவர் கைது 


நெல்லையில் மருத்துவக் கழிவுகளை அகற்றும் பணியில் கேரள அதிகாரிகள் குழு தீவிரம்


சென்னையில் நடக்கும் உணவுத் திருவிழாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மக்கள் கூட்டம் - மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு



கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு கொண்டாட்டம் - தமிழ்நாட்டில் தீவிரமாக நடைபெறும் விற்பனை



போக்குவரத்து தொழிலாளர்களுடன் மீண்டும் ஒப்பந்தப் பேச்சுவார்த்தை - டிசம்பர் 27, 28ம் தேதி நடைபெறும் என தகவல்


சித்தேரி மலைப்பாதையில் ஏற்பட்ட மண் சரிவால் 63 கிராம மக்கள் போக்குவரத்து பாதிப்பு 


தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக பவானிசாகர் அணை 100 அடியை எட்டியது - விவசாயிகள் மகிழ்ச்சி



தாம்பரம் - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்; நாளை, வரும் 31ம் தேதி இயக்கப்படும் என அறிவிப்பு 


நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த தாம்பரம் - திருச்சி இன்டர்சிட்டி ரயில் சேவை நிறுத்தப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி


இரண்டு நாள் பயணமாக குவைத் சென்ற பிரதமர் மோடி மீண்டும் டெல்லி திரும்பினார்



வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தியின் வெற்றியை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு


சுங்கக் கட்டணத்திற்கு எதிர்ப்பு; கடலூர் - சிதம்பரம் வழித்தடத்தில் இன்று தனியார் பேருந்துகள் இயங்காது 


செல்போன் டவர் கருவிகளை திருடிய கும்பல் கைது; 8 மாநிலங்களில் கைவரிசை காட்டியது அம்பலம் 


மத்திய அரசுப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 71 ஆயிரம் பேருக்கு நியமன ஆணை - பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்


 


 


 


 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.