All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!

No Detention Policy: தற்போதுள்ள 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற முறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. 

Continues below advertisement

5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி கொள்கையில் மாற்றம் செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

Continues below advertisement

தற்போதுள்ள 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற முறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. 

கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வந்த சமயத்தில் இருந்தே, ஒன்றாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை அடுத்த வகுப்புகளுக்கு தேர்ச்சி பெறுவார்கள் என்பது விதிமுறையாக இருந்து வந்தது. இதனால் கல்வித் தரம் குறைவதாக அவ்வபோது குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்நிலையில்தான். ஆர்.டி.இ என்ற கல்வி உரிமை சட்டத்தின் விதிகள் திருத்தப்பட்டுள்ளன. அந்த விதிகளின் படி, ஐந்தாம் வகுப்பிலும் எட்டாம் வகுப்பிலும் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். அந்த வகுப்புகளில் மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டால், அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும். அதாவது இரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்க வேண்டும் என திருத்தப்பட்டுள்ளது. அப்போதும் அவர் தேர்ச்சி பெறாவிட்டால் மீண்டும் ஒருமுறை அதேவகுப்பை மீண்டும் படிக்க வேண்டும் என மத்திய கல்வி அமைச்சகம் திருத்தம் கொண்டுவந்துள்ளது. 

பல்வேறு மாநிலங்கள் பல்வேறு கொள்கைகளை கடைபிடித்து வருவதால் இத்தகைய விதிமுறைகளுக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு மீண்டும் அதே வகுப்பை தொடரும் நிலை மாணவர்களுக்கு ஏற்பட்டால் இடைநிற்றல் அதிகரிக்கும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola