தமிழ் , தெலுங்கு , இந்தி என எந்த சினிமாத் துறை எடுத்துக் கொண்டாலும் நடிகர்களைக் காட்டிலும் நடிகைகளுக்கு மிக குறைவாகவே சம்பளம் வழங்கப்படுகிறது. ஒரு நடிகருக்கும் சம்பளம் 100 ரூபாய் என்றால் அந்த படத்தில் நடித்த நடிகைக்கு அந்த நடிகரின் சம்பளத்தில் பத்து சதவீதம் அதாவது 10 ரூபாய் தான் சம்பளமாக வழங்கப்படுகிறது. இதுகுறித்து பல நடிகைகள் காலம் காலமாக கேள்வி எழுப்பி வந்தாலும் பிரச்சனை என்னவோ இன்னும் அப்படியேதான் இருக்கிறது. நிகழ்ச்சி ஒன்றின் போது நடிகர் ஆமீர் கான் , கரீனா கபூர் மற்றும் ராணி முகர்ஜி ஆகிய மூவர் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெண் தொகுப்பாளர் ஆமீர் கானிடம் இதே கேள்வியை எழுப்பினார். கரீனா கபூர் மற்றும் ரானி முகர்ஜீ ஆதரவு தெரிவித்தார்கள். ஆமீர் கான் கொடுத்த பதில் இந்த நிகழ்ச்சியில் இருந்த மூன்று பெண்களையும் அமைதியாக்கியது. அப்படி என்ன பதில் அளித்தார் ஆமீர் கான்.


நடிகைகளுக்கு ஏன் குறைவான சம்பளம் ? ஆமீர் கான் பதில் 


" ஒரு படத்தில் ஒரு நடிகை கடுமையாக உழைக்கிறார்தான். அதே படத்தில் நானும் அந்த படத்தின் ஒளிப்பதிவாளரும் , அந்த படத்தில் வேலை பார்க்கும் சின்ன டெக்னிசியனும் அதே அளவிற்கு கடுமையான உழைப்பை செலுத்துகிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஏன் என்னைவிட குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது. இது ஆண் பெண் என்கிற பாலின வித்தியாசத்தால் இல்லை. ஒரு படத்திற்கு தயாரிப்பாளர் 10 ரூபாய் முதலீடு செய்கிறார் என்றால் அந்த பத்து ரூபாயை திருப்பி வசூலித்து கொடுக்க கூடிய நபராக நான் இருக்கிறேன். அதனால் என்னுடைய சம்பளம் அதிகமாக இருக்கிறது. என்னைவிட அதிகப்படியான ரசிகர்களை திரையரங்கிற்கு ரானி முகர்ஜியால் வரவழைக்க முடிகிறது என்றால் நிச்சயமாக அவரது சம்பளம் என்னைவிட அதிகமாக இருக்கும். இது ஆண் பெண் சம்பந்தபட்டது இல்லை. ஒரு படத்திற்கு அதிகப்படியான கூட்டத்தை யார் வரவழைக்கிறார் என்பதில் தான் இந்த விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும்" என ஆமீர் கான் பதிலளித்தார்.